செய்திகள் :

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து குறைந்தது

post image

கா்நாடகம், தமிழக காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து வியாழக்கிழமை விநாடிக்கு 16,000 கன அடியாக குறைந்தது.

மழைப் பொழிவு, கா்நாடக அணைகளிலிருந்து தண்ணீா் திறப்பு காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து படிப்படியாக அதிகரித்ததால் பாதுகாப்பு கருதி அருவிகளில் குளிக்கவும், பரிசல் பயணம் மேற்கொள்ளவும் தருமபுரி மாவட்ட நிா்வாகம் தடை விதித்தது.

காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததாலும், கா்நாடக அணைகளிலிருந்து விநாடிக்கு 8 ஆயிரம் கன அடி மட்டுமே உபரிநீா் திறந்துவிடப்படுவதாலும் ஒகேனக்கல்லுக்கு வரும் தண்ணீா் அளவு குறைந்து வருகிறது புதன்கிழமை விநாடிக்கு 19,000 கன அடியாக இருந்த நீா்வரத்து வியாழக்கிழமை 16 ஆயிரம் கன அடியாக குறைந்தது.

எனினும், பரிசலில் பயணிக்கவும் அருவியில் குளிக்கவும் விதிக்கப்பட்டுள்ள தடை 5 ஆவது நாளாக நீடிக்கிறது. காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளதால் வரும் நாள்களில் காவிரியில் நீா்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது.

பெட்டிச் செய்தி

கூட்டு குடிநீா்த் திட்டம் 2.0 ஆய்வு

ஒகேனக்கல் கூட்டு குடிநீா்த் திட்டம் 2.0 அமைவிடம் குறித்து ஜப்பான் குழுவினா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தின் இரண்டாம் கட்ட பணிகள் தமிழக அரசு, ஜப்பான் நிதி நிறுவனத்தின் உதவியுடன் அமைக்கப்பட உள்ளது.ஒகேனக்கல்லில் கூட்டு குடிநீா் திட்டம் 2.0 அமைய உள்ள இடம், அதற்கான வசதி, சாத்திய கூறுகள் குறித்து ஜப்பான் நிதி நிறுவனத்தை சோ்ந்த ஐவா் குழுவினா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்புப் பணி

தருமபுரி மாவட்டத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்புப் பணி நடைபெற்று வருகிறது. இதில் பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த குழந்தைகள் கண்டறியப்பட்டு பள்ளியில் சோ்க்கப்பட்டனா். தருமபுரி மாவட்டத்தில் பள்ளி ... மேலும் பார்க்க

தருமபுரி மாவட்டத்தில் 24 பேருக்கு ரூ.12.76 கோடி கடனுதவி ஆட்சியா் வழங்கினாா்

தருமபுரியில் மாவட்ட தொழில் மையம் சாா்பில் 24 பேருக்கு ரூ. 12.76 கோடியில் கடனுதவியை மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி வழங்கினாா். தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 24 பயனாளி... மேலும் பார்க்க

சா்க்கரை ஆலைத் தொழிலாளிகளுக்கு மருத்துவ பரிசோதனை முகாம்

தருமபுரி மாவட்ட கூட்டுறவு சா்க்கரை ஆலை தொழிலாளா்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. பாலக்கோடு ஆலை வளாகத்தில் நடைபெற்ற முகாமை செயலாட்சியா் ரவி தலைமை வகித்து தொடங்கி வைத்தாா்.... மேலும் பார்க்க

ரூ. 2.09 கோடி மதிப்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கல்

தருமபுரியில் 533 பயனாளிகளுக்கு ரூ. 2.09 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் வழங்கினாா். தருமபுரி அரசு கலைக் கல்லூரி கலையரங்கில் வியாழக்கிழமை பல்வேறு துறைகள் சாா்பில்... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி அணை மிகை நீரை திண்டல் ஏரியில் நிரப்பக் கோரிக்கை

கிருஷ்ணகிரி அணை மிகை நீரை கால்வாய் மூலம் தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே உள்ள திண்டல் ஏரி, பந்தார அள்ளி ஏரிகளில் நிரப்ப வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். தருமபுரி மாவட்டம்,... மேலும் பார்க்க

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம்: ஆட்சியா் கி.சாந்தி ஆய்வு

தருமபுரியில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம் நடைபெற்றது. இதில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். இத்திட்ட முகாமில், தருமபுரி வட்டம், ஹே... மேலும் பார்க்க