செய்திகள் :

``என் காலம் எத்தனை நாளோ... அதற்குள்...'' - பின்னணிப்பாடகி சரளா இப்போது எப்படி இருக்கிறார்?

post image

பின்னணிப்பாடகி சரளா என்றால், மூத்த தலைமுறையினருக்கு நன்கு தெரியும். இளம் தலைமுறையினர் 'பேசும் தெய்வம்' படத்தில் அவர் பாடிய ‘நூறாண்டு காலம் வாழ்க... நோய் நொடியில்லாமல் வளர்க... ஊராண்ட மன்னர் புகழ்போலே... உலகாண்ட புலவர் தமிழ்போலே...’ என்ற பாடலை நிச்சயம் கேட்டிருப்பார்கள். அந்தளவுக்கு யாருடைய பிறந்த நாள் என்றாலும், இந்தப்பாடல் தான் எல்லா சமூகவலைத்தளங்களிலும் ஒலிக்கிறது. அந்தப்பாடலில் ஒலிக்கிற மூவர் குரல்களில் ஒரு குரல் சரளா அம்மாவுடையது.

சரளாம்மாவுக்கு சினிமா பாட்டு என்றால் உயிர். மற்றபடி, அம்மா பாடகி, அப்பா பாடகர் போன்ற பின்னணியெல்லாம் அவருக்கு கிடையாது. சினிமா பாடல்களைக் கேட்டு கேட்டு தானாகப் பாடிக்கொண்டிருந்த சரளாம்மாவை அவருடைய அம்மா ஊக்குவிக்க, எம்.ஆர்.ராதா, தங்கவேலு போன்றவர்களின் நாடகங்களில் பாட ஆரம்பித்திருக்கிறார். ஒரு தடவை மயிலாப்பூர் ஆர்.ஆர். சபாவில் நடந்த நாடகத்தில் ‘பஞ்சவர்ணக்கிளி’ படத்தில் வருகிற ‘சத்தியம் சிவம் சுந்தரம்' பாடலைப் பாடிக்கொண்டிருந்தவரின் குரலைக்கேட்ட இசையமைப்பாளர் ராமமூர்த்தி (விஸ்வநாதன்), ‘உச்ச ஸ்தாயியிலும் எவ்வளவு இனிமையா இருக்கு இந்தப் பொண்ணோட குரல்’னு சொல்லி ‘தேன்மழை’ படத்தில் பின்னணிப் பாடகியாக அறிமுகப்படுத்தியிருக்கிறார். எஸ்.பி.பாலசுப்ரமணியத்துடன் ‘வருவாயா வேல்முருகா’, சீர்காழி கோவிந்தராஜனுடன் ‘சிந்தனையில் மேடைகட்டி’, இளையராஜாவுடன் ‘உனக்கெனத்தானே இந்நேரமா’... இப்படி சில பாடல்களை சினிமாவில் பாடியிருக்கிறார். ஆனால், சரளாம்மா மேடைக்கச்சேரிகளில் பாடிய பாடல்களை எண்ணவே முடியாது என்று அவள் விகடனுக்கு அளித்தப் பேட்டியொன்றில் அவரே சொல்லியிருக்கிறார். தன்னுடைய 13-வது வயதில் பாட ஆரம்பித்தவர் தொடர்ந்து 60 வருடங்கள் பாடியிருக்கிறார்.

சில வருடத்திற்கு முன்னாள் பக்கவாதம் வந்ததையடுத்து, அவரால் பாட முடியாத நிலை. பெரியார், கலைஞர், எம்.ஜி.ஆர், கண்ணதாசன், வாலி என்று பல திரைத்துறை ஆளுமைகளால் பாராட்டப்பட்ட சரளாம்மா தற்போது எப்படியிருக்கிறார் என தெரிந்துகொள்வதற்காக, அவரைத் தொடர்புகொண்டோம். அவருடைய மகள்கள்தான் பேசினார்கள்.

பின்னணிப்பாடகி சரளா

''போன வருஷம் அம்மா தவறி கீழே விழுந்துட்டாங்க. அதனால, அம்மாவோட எலும்பு ஒண்ணு முறிஞ்சிடுச்சு. 8 புத்தூர்க்கட்டு போட்டோம். இப்போ நடக்கிறாங்கன்னாலும் ரொம்ப கஷ்டப்பட்டுதான் நடக்கிறாங்க. அம்மாவுக்கு இப்போ வயசும் 83 ஆகிடுச்சு. வயசோட பலவீனம் வேற... விகடன்ல இருந்து பேசுறீங்க அப்படிங்கிறதால, அம்மாவோட ரொம்ப வருஷத்து ஆதங்கம் ஒண்ணை சொல்லிடுறேன். '60 வருஷமா பாடிக்கிட்டிருக்கேன். ஆனா, அதை கெளரவிச்சு எனக்கு யாரும் எந்த விருதும் இதுவரைக்கும் கொடுக்கல. இன்னும் என் காலம் எவ்ளோ நாளோ'ன்னு அம்மா அடிக்கடி சொல்லிட்டே இருக்காங்க. எங்களுக்கும் இதுதொடர்பா யார்கிட்ட போய் பேசுறதுன்னு தெரியல. ஆனா, அம்மா தான் 'பாரம்பர்யமான பத்திரிகைகள்ல இருந்து யாராவது பேசினா என்னோட வருத்தத்தை சொல்லுங்க'ன்னு சொன்னாங்க'' என்கிறார்.

வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |

Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |

80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks

முத்தம் கொடுத்து வரவேற்ற ரசிகை; லண்டன் சென்ற சிரஞ்சீவி நெகிழ்ச்சி... வைரல் புகைப்படம்!

தெலுங்கு திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் சிரஞ்சீவி. இவர் 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இந்தியா முழுக்க ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியவர். இவர் ஒரு அரசியல்வாதியும் ஆவார்.இதற்கிடையில்,... மேலும் பார்க்க

Summer season: ஊட்டியில் 8 லட்சம், குன்னூரில் 2 லட்சம்! - பூக்காடாக மாறும் நீலகிரி பூங்காக்கள்

இந்தியா மட்டுமின்றி உலக அளவில் சுற்றுலா பயணிகளை அதிகம் ஈர்க்கும் கோடை வாசஸ்தலங்களில் ஒன்றாக இருக்கிறது ஊட்டி. ஆண்டுக்கு சுமார் 40 லட்சம் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்துச் செல்லும் ஊட்டியில் கோடை சீசனான... மேலும் பார்க்க

Siragadikka aasai : சிந்தாமணியை சிக்க வைக்க பக்காவாக பிளான் போட்ட மீனா - விஜயாவின் ரியாக்‌ஷன் என்ன?

சிறகடிக்க ஆசை சீரியலில் ரசிகர்கள் எதிர்பார்த்த விறுவிறுப்பானக் காட்சிகள் நேற்றைய எபிசோடில் ஒளிப்பரப்பானது. மனோஜ் வேலைக்குப் போகிறேன் என்று சொல்லி பார்க்கில் தூங்கி எழுந்த விவகாரத்தை முத்து வீட்டில் பட... மேலும் பார்க்க

சேலம்: பாரம்பர்ய நடனத்துடன் ஹோலிப்பண்டிகை கொண்டாட்டம்... | Photo Album

சேலத்தில் ஹோலி பண்டிகை கொண்டாட்டம் சேலத்தில் ஹோலி பண்டிகை கொண்டாட்டம் சேலத்தில் ஹோலி பண்டிகை கொண்டாட்டம் சேலத்தில் ஹோலி பண்டிகை கொண்டாட்டம் சேலத்தில் ஹோலி பண்டிகை கொண்டாட்டம் சேலத்தில் ஹோலி பண்டிகை கொ... மேலும் பார்க்க

`எல்லாமே தங்கச்சி ரோல்; நாசருக்கு வில்லி; நினைச்ச கேரக்டர்..!’ - `கோடை மழை’ வித்யா பர்சனல்ஸ்

'காற்றோடு குழலின் நாதமே...’ - ’கோடை மழை’ படத்துல வர்ற இந்தப் பாட்டு இன்னிக்கு வரைக்கும் பலரோட ஃபேவரிட் லிஸ்ட்ல இருக்கு. அந்த அளவுக்கு லிரிக்ஸ், மியூசிக்னு ஒரு மேஜிக்கே பண்ணியிருக்கும். கூடவே இந்தப் பா... மேலும் பார்க்க

Sai Pallavi : மக்களோடு உற்சாக நடனம், செல்ஃபி - உறவினர் திருமணத்தில் கவனத்தை ஈர்த்த சாய் பல்லவி

முன்னணி திரைப்பட நடிகையான சாய் பல்லவி நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். பெற்றோர், சகோதரி என குடும்ப உறுப்பினர்கள் வெளி மாவட்டங்களில் வசித்து வந்தாலும், நீலகிரியில் நடைபெறும் சாய் பல்லவியின் சமுதாய கோயி... மேலும் பார்க்க