செய்திகள் :

Summer season: ஊட்டியில் 8 லட்சம், குன்னூரில் 2 லட்சம்! - பூக்காடாக மாறும் நீலகிரி பூங்காக்கள்

post image

இந்தியா மட்டுமின்றி உலக அளவில் சுற்றுலா பயணிகளை அதிகம் ஈர்க்கும் கோடை வாசஸ்தலங்களில் ஒன்றாக இருக்கிறது ஊட்டி. ஆண்டுக்கு சுமார் 40 லட்சம் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்துச் செல்லும் ஊட்டியில் கோடை சீசனான ஏப்ரல், மே மாதங்களை திருவிழா போல நடத்தி வருகின்றனர். பிரிட்டிஷ் ஆட்சிக்காலம் முதல் தற்போது வரை அதே வகையில் கோடை கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

மலர் நாற்று நடவு

தமிழ்நாடு அரசின் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் நூற்றாண்டு பழைமை வாய்ந்த ஊட்டி தாவரவியல் பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா ஆகியவற்றிற்கு சுற்றுலா பயணிகளை வரவேற்க முழு வீச்சில் முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த பூங்காக்களில் இறுதிகட்ட மலர் நாற்று நடவு பணிகளும் நடைபெற்று வருகின்றன. மாவட்ட ஆட்சியர், தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் மலர் நாற்றுகளை நடவு செய்து பணிகளை தொடங்கி வைத்து வருகின்றனர்.

பூக்காடாக மாற இருக்கும் நீலகிரி பூங்காக்கள் குறித்து பேசிய தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் சிபிலா மேரி, " கோடை விழாவிற்காக பூங்காக்களை பொலிவுப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. முதல் கட்டமாக குன்னூர் காட்டேரி பூங்காவில் ஆன்டிரைனம், பெட்டுண்யா, பால்சம், பிகோனியா, சால்வியா, ஆஸ்டர், ஜெனியா, வெர்பினா, டேலியா உள்ளிட்ட 30 வகையான மலர் ரகங்களில் சுமார் 2 லட்சம் மலர் நாற்றுகை நடவு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மாவட்ட ஆட்சியர் மலர் நாற்று நடவு

இதேபோல் ஊட்டி தாவரவியல் பூங்காவில் ஓரியன்ட்டல் லில்லி, ஆசியாடிக் லில்லி, பிரென்ச்‌ மேரிகோல்டு, ஃபேன்சி, ஜெர்பரா, கிரைசாந்திமம்‌, டெல்பினியம்‌, சால்வியா, ஆந்தூரியம்‌ போன்ற 275 வகையான மலர் ரகங்கள் மற்றும்‌ ஜப்பான்‌, அமெரிக்கா, ஜெர்மனி, நெதர்லாந்து ஆகிய நாடுகளிலில் இருந்தும்‌ மலர்செடிகள்‌ பெறப்பட்ட சுமார் 8 லட்சம்‌ மலர்‌ நாற்றுகள்‌ நடவுபணிகளும் நடைபெற்று வருகின்றன. லட்சக்கணக்கான மலர் செடிகளில் ஒரே சமயத்தில் பூக்கும் கோடிக்கணக்கான பூக்களை கோடை சீசனுக்கு வருகைத் தரும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கலாம் " என்றார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

``என் காலம் எத்தனை நாளோ... அதற்குள்...'' - பின்னணிப்பாடகி சரளா இப்போது எப்படி இருக்கிறார்?

பின்னணிப்பாடகி சரளா என்றால், மூத்த தலைமுறையினருக்கு நன்கு தெரியும். இளம் தலைமுறையினர் 'பேசும் தெய்வம்' படத்தில் அவர் பாடிய ‘நூறாண்டு காலம் வாழ்க... நோய் நொடியில்லாமல் வளர்க... ஊராண்ட மன்னர் புகழ்போலே.... மேலும் பார்க்க

Siragadikka aasai : சிந்தாமணியை சிக்க வைக்க பக்காவாக பிளான் போட்ட மீனா - விஜயாவின் ரியாக்‌ஷன் என்ன?

சிறகடிக்க ஆசை சீரியலில் ரசிகர்கள் எதிர்பார்த்த விறுவிறுப்பானக் காட்சிகள் நேற்றைய எபிசோடில் ஒளிப்பரப்பானது. மனோஜ் வேலைக்குப் போகிறேன் என்று சொல்லி பார்க்கில் தூங்கி எழுந்த விவகாரத்தை முத்து வீட்டில் பட... மேலும் பார்க்க

சேலம்: பாரம்பர்ய நடனத்துடன் ஹோலிப்பண்டிகை கொண்டாட்டம்... | Photo Album

சேலத்தில் ஹோலி பண்டிகை கொண்டாட்டம் சேலத்தில் ஹோலி பண்டிகை கொண்டாட்டம் சேலத்தில் ஹோலி பண்டிகை கொண்டாட்டம் சேலத்தில் ஹோலி பண்டிகை கொண்டாட்டம் சேலத்தில் ஹோலி பண்டிகை கொண்டாட்டம் சேலத்தில் ஹோலி பண்டிகை கொ... மேலும் பார்க்க

`எல்லாமே தங்கச்சி ரோல்; நாசருக்கு வில்லி; நினைச்ச கேரக்டர்..!’ - `கோடை மழை’ வித்யா பர்சனல்ஸ்

'காற்றோடு குழலின் நாதமே...’ - ’கோடை மழை’ படத்துல வர்ற இந்தப் பாட்டு இன்னிக்கு வரைக்கும் பலரோட ஃபேவரிட் லிஸ்ட்ல இருக்கு. அந்த அளவுக்கு லிரிக்ஸ், மியூசிக்னு ஒரு மேஜிக்கே பண்ணியிருக்கும். கூடவே இந்தப் பா... மேலும் பார்க்க

Sai Pallavi : மக்களோடு உற்சாக நடனம், செல்ஃபி - உறவினர் திருமணத்தில் கவனத்தை ஈர்த்த சாய் பல்லவி

முன்னணி திரைப்பட நடிகையான சாய் பல்லவி நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். பெற்றோர், சகோதரி என குடும்ப உறுப்பினர்கள் வெளி மாவட்டங்களில் வசித்து வந்தாலும், நீலகிரியில் நடைபெறும் சாய் பல்லவியின் சமுதாய கோயி... மேலும் பார்க்க

Sri Brinda AC : 'அப்பெல்லாம் படங்கள் சாதாரணமா ஓடிடும்' - மூடப்பட்ட வடசென்னை பிருந்தா தியேட்டர் இனி.?

அடுத்த மாதம், அதாவது வரும் ஏப்ரல் 14ம் தேதியுடன் நாற்பதாவது ஆண்டைபூர்த்தி செய்ய இருந்த நிலையில் திடீரென தன் பயணத்தை நிறுத்தியிருக்கிறது வடசென்னையின் முதல் ஏசி தியேட்டரானபெரம்பூர் ஶ்ரீ பிருந்தா ஏசி டீல... மேலும் பார்க்க