பாலியல் குற்றங்களின் மையமாகும் ஹம்பி! வெளிநாட்டுப் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்!
Siragadikka aasai : சிந்தாமணியை சிக்க வைக்க பக்காவாக பிளான் போட்ட மீனா - விஜயாவின் ரியாக்ஷன் என்ன?
சிறகடிக்க ஆசை சீரியலில் ரசிகர்கள் எதிர்பார்த்த விறுவிறுப்பானக் காட்சிகள் நேற்றைய எபிசோடில் ஒளிப்பரப்பானது. மனோஜ் வேலைக்குப் போகிறேன் என்று சொல்லி பார்க்கில் தூங்கி எழுந்த விவகாரத்தை முத்து வீட்டில் படம் போட்டுக் காட்டியது, மனோஜ் மீனாவின் நகையை எடுத்ததை வீட்டினர் முன்பு ஆதரத்துடன் நிரூபித்தது என இதற்கு முன்னர் சுவாரஸ்யமான தருணங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்கள் கிடைத்தது.
அதே போன்று நேற்றைய எபிசோடில் மீனா சிந்தாமணி செய்த வில்லத்தனத்தை சாமர்த்தியமாக வெளிச்சம் போட்டுக் காட்டிய காட்சிகள் ரசிக்க வைத்தது.

சிந்தாமணி மீனாவுக்கு பெரிய ஆர்டர் கிடைப்பது போல செய்து, மேனேஜர் உதவியுடன் இரண்டு கட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்படுத்திவிட்டார். மீனா செய்வதறியாது தவித்தபோது, அண்ணாமலை சொன்ன ஒரு விஷயம் அவருக்கு உதவுகிறது. `நம்மள ஏமாத்தினவங்கள நாமும் ஏமாத்துறது தப்பேயில்ல’ என்று அண்ணாமலை சொன்ன விஷயத்தை வைத்து மீனா சிந்தாமணியை ஏமாற்றி உண்மைகளை வரவைக்க திட்டம் போடுகிறார்.
ஸ்ருதி, சீதாவின் உதவியுடன் மீனா சிந்தாமணியின் குரலில் மேனேஜரிடம் பேசி கோவிலுக்கு வரவைக்கிறார். சிந்தாமணியையும் வரவழைக்கிறார். அங்கு மேனேஜரிடம் சிந்தாமணி உண்மைகளை உளறுகிறார். அப்போது அங்கு மீனாவும், மண்டப ஓனரும் வருகின்றனர். மண்டப ஓனர் மேனேஜரை கன்னத்தில் அறைகிறார். சிந்தாமணியையும் எச்சரிக்கிறார்.
சிந்தாமணியிடம் இருந்து பணத்தை பிடுங்கி மீனாவிடம் கொடுக்கிறார். நேற்றைய எபிசோட் முடிவில் மீனா இந்த விஷயத்தை முத்துவிடம் சொல்கிறார். மீனாவின் சாமர்த்தியத்தை முத்து பாராட்டி வீட்டினர் முன்பு பெருமையாகப் பேசுகிறார். மீனாவின் தொழிலை கெடுக்க ஒரு பெரிய கூட்டமே செயல்படுகிறது என்று முத்து சொல்லும்போது விஜயா திருதிருவென முழிக்கிறார். அடுத்து வரும் எபிசோடுகளில் பரசுவின் மகள் திருமணம், மலேசியா மாமா பிடிபடுவாரா என்பது தெரிய வரும்.!
வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |
Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |
80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks