செய்திகள் :

எல்லா யுகங்களிலும் ஓடிக்கொண்டிருக்கும் வற்றாத ஜீவநதி நர்மதா! 'நமாமி தேவி நர்மதே' நூல் வெளியீடு

post image

நர்மதா அன்னையின் புகழ் பாடும் நூல் ஒன்று சனிக்கிழமை ( 26/10/24) காலை 9 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. இந்நூலை எழுதி, வெளியீட்டு விழாவை ஏற்பாடு செய்தவர் திருமதி ரமா சுப்பிரமணியன்.

narmadha river worship

நாம் எல்லோரும் புனித நதி என்றால் கங்கை நதியை கூறுவோம். ஆனால் கங்கையானவள் எல்லோரும் தன்னில் நீராடியதால் பாவச்சுமையை தாங்க முடியாமல் ஈசனிடம் முறையிட்டார். ஈசன் கங்கையிடம் வருடத்திற்கு ஒரு முறை கரிய பசுவின் உருவில் நர்மதா நதிக்கு சென்று நீராடினால் பாவச்சுமை நீங்கி வெண்மையான உருவை அடைவாய் என வரம் அளித்தார். அதனால் கங்கையை காட்டிலும் நர்மதா பழமையும் பெருமையும் வாய்ந்த புண்ணிய நதியாகும். மேலும் கங்கையில் நீராடினால் புனிதம். நர்மதையை வலம் வந்தால் (பரிக்ரமா) புண்ணியம் என்பார்கள் ஆன்றோர்கள்.

நர்மதா நதி ஏழு கல்ப காலமாக எல்லா யுகங்களிலும் ஓடிக்கொண்டிருக்கும் வற்றாத ஜீவநதியாகும். ஜகத்குரு ஶ்ரீ ஆதிசங்கரர் நர்மதா நதிக்கரையில் உள்ள குகையில் தான் தன் குருவான ஸ்ரீ கோவிந்த பகவத்பாதரின் தரிசனம் பெற்றார். நர்மதை புனிதமான நதியாதலால், காலணி அணியாமல் வலம் வர வேண்டும். இந்த பரிக்ரமாவின் போது பணம் வைத்துக் கொள்ளக் கூடாது. பிச்சையேற்றே உண்ண வேண்டும் என்பது நியதி. நர்மதை சிவபெருமானின் உடலிலிருந்து தோன்றியதால் ஜடாசங்கரி என்றும் அழைக்கப்படுகிறாள்.

நர்மதா பரிக்ரமாவை முதன்முதலில் ஆரம்பித்தவர் ஸ்ரீமார்க்கண்டேய மகரிஷி. பிறகு சப்த சிரஞ்சீவிகளான அஸ்வத்தாமர், பரசுராமர், ஹனுமன், விபீஷணர், மஹாபலி, கிருபர், வியாசர் ஆகியோர் பரிக்ரமா செய்து இங்கு வருபவர்களையும் பாதுகாக்கிறார்கள் என்பது ஐதீகம். இந்தப் புனித பரிக்ரமா காலங்காலமாக முனிவர்களாலும், பக்தர்களாலும், நர்மதைக் கரையில் வாழும் கிராம மக்களாலும் தொன்றுதொட்டு செய்துவரப்படுகிறது. நர்மதா பரிக்ரமாவை 3 வருடம் 3 மாதம் 13 நாள்களில் நிறைவு செய்வது வழக்கம். நர்மதை நதியின் கரையில் ஓம்காரேஷ்வர், மண்டலேஷ்வர், மஹேஷ்வர், கருடேஷ்வர், விமலேஷ்வர் போன்ற பல புனித தலங்கள் உள்ளன.

இப்படி சகலவிதமான பெருமைகளைக் கொண்ட நர்மதா அன்னையின் புகழ் பாடும் நூல் ஒன்று சனிக்கிழமை ( 26/10/24) காலை 9 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. இந்நூலை எழுதி, வெளியீட்டு விழாவை ஏற்பாடு செய்தவர் திருமதி ரமா சுப்பிரமணியன். மேலும் இவ்விழாவில் புனித நர்மதை நதிக்கரை மாஹேஷ்வரில் ஸ்ரீசப்தமாத்ரிகா ஆசிரமத்தை நடத்தி வருபவர் ஸ்ரீ ஸ்ரீ சமானந்தகிரி ஸ்வாமிகள். ஸ்ரீ ஆதிசங்கரரின் சீடர்கள் எல்லோரையும் ஒருமுகப்படுத்தும் 'ஏகாத்மா தாம்' என்ற 2000 கோடி அளவில் அகில இந்திய பல்கலைக்கழகம் போன்ற மிகப்பெரிய திட்டத்தின் பொறுப்பை ஏற்றுள்ள ஓம்காரேஷ்வர் ஸ்ரீ ஸ்ரீ பூமானந்த சரஸ்வதி ஸ்வாமிகள் இருவரும் மத்திய பிரதேசத்தில் இருந்து வருகை தந்து சனிக்கிழமை ( 26/10/24) காலை 9 மணிக்கு ஸ்ரீ நர்மதேஷ்வர் லிங்கத்தை கொண்டு வந்து சிறப்பு பூஜைகளை செய்யவிருக்கின்றனர்.

ஸ்ரீ ஸ்ரீ சமானந்தகிரி ஸ்வாமிகள்
ஸ்ரீ ஸ்ரீ பூமானந்த சரஸ்வதி ஸ்வாமிகள்

80 லிட்டர் புனித நர்மதா நதி ஓம்காரேஷ்வர் என்ற ஜோதிர்லிங்க தலத்தில் இருந்து வரவழைக்கப்பட்டு வருகை தரும் அனைவருக்கும் விநியோகிக்கப்பட உள்ளது. ஓம்காரேஷ்வரரில் இருந்து கொண்டுவரப்பட்ட நர்மதேஷ்வர் லிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆயிரம் ருத்திராட்சங்களால் அர்ச்சனை செய்யப்பட்டு அனைவருக்கும் அளிக்கப்பட உள்ளது. ஸ்வாமிகளின் திருக்கரங்களால் ஆசிர்வதித்து எல்லோருக்கும் புனித நர்மதை தீர்த்தத்தை அளிக்க இருக்கின்றனர். மேலும் வருகை தரும் எல்லோருக்கும் திருவாசகம் பிரதி விநியோகிக்கப்படும். இன்னும் சிறப்பாக 'நமாமி தேவி நர்மதே' நூல் மற்றும் அன்னதானமும் அளிக்கப்பட உள்ளது.

நமாமி தேவி நர்மதே

அனைவரும் வருக! இறையருள் பெறுக!

இடம் - வாணி மஹால், தி.நகர், சென்னை

நாள் - 26-10-24 சனிக்கிழமை காலை 9 மணி முதல்

அனுமதி இலவசம்.

ஸ்ரீபஞ்ச தசாஷரி ஹோமம்: எதையெல்லாம் வேண்டுகிறோமோ அவையெல்லாம் நிறைவேறும் அதிசயம்!

என்னவெல்லாம் வேண்டி வழிபடுகின்றோமோ அதற்கான அருளைத்தரும் ஆற்றல் படைத்த மகாசக்தி ஸ்ரீஅக்ஷ்ர லலிதாம்பிகை. ராமாயண காலத்தில் அக்ஷ்ர ங்களை குறியீடாக கொண்டு மகரிஷி ரிஷியசிருங்கரால் வழிபடப்பட்ட சிறப்பு மிக்க ... மேலும் பார்க்க

தெய்யம் திருவிழா: மனிதர்களுடன் உறவாடும் கரீம் குலிகன் தெய்யம்! | Exclusive Album

கரீம் குலிகன் தெய்யம்கரீம் குலிகன் தெய்யம்கரீம் குலிகன் தெய்யம்கரீம் குலிகன் தெய்யம்கரீம் குலிகன் தெய்யம்கரீம் குலிகன் தெய்யம்கரீம் குலிகன் தெய்யம்கரீம் குலிகன் தெய்யம்கரீம் குலிகன் தெய்யம்கரீம் குலிக... மேலும் பார்க்க