முதலீட்டார்கள் தொடர்ந்து விற்று வாங்குவதற்கு ஆளே இல்லை என்றால் என்னவாகும்? | IPS...
ஏற்காட்டில் நிலவும் கடுங்குளிர்! பள்ளிக் குழந்தைகள் அவதி
ஏற்காடு: சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடந்த சில நாள்களாக கடும் பனி மூட்டத்துடன் கூடிய மழை பெய்து வருகிறது. இதனால், பள்ளி செல்லும் குழந்தைகள் அவதியடைந்துள்ளனர்.
கடந்த மூன்று நாள்களாக ஏற்காடு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வழக்கத்தை விட அதிக அளவிலான கடும் பனி மூட்டம் சூழ்ந்து காணப்படுகிறது. இந்த பனிமூட்டத்தால் ஏற்காடு முழுவதும் கடும் குளிர் நிலவி வருகிறது.
அதை தொடர்ந்து இன்று அதிகாலை முதல் 8 மணி வரை மழை பெய்தது. பின்னர் மழை குறைந்து ஏற்காடு மற்றும் சுற்றுவட்டார பகுதி முழுவதும் கடும் பனி சூழ்ந்து 5அடி தூரத்தில் இருப்பது கூட தெரியாத சூழல் நிலவியது. தற்போது இந்த கடும் பனிமூட்டதுடன் கூடி சாரல் மழையும் பெய்து வருகிறது.
இந்த மழை மற்றும் கடும் குளிரால் ஏற்காடு உள்ளூர் மக்கள் மற்றும் தோட்ட வேலைக்குச் செல்லும் தோட்ட தொழிலாளர்கள் வெளியே செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.
ஏற்காட்டை சூழ்ந்த கடும் பனி மூட்டத்தாலும் அடிக்கடி பெய்து வரும் மழையாலும் உள்ளூர் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஏற்காடு மலை கிராமங்களில் இருந்து ஏற்காடு நகரப் பகுதிக்கு படிக்க வரும் பள்ளி குழந்தைகள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
ஏற்காட்டில் நிலவி வரும் கடும் குளிரால் பள்ளிகளுக்கு வரும் குழந்தைகள் கம்பளி ஆடைகள் அணிந்தவாரே பள்ளிக்கு சென்றனர். மேலும் இந்த கடும் குளிரால் பள்ளி குழந்தைகளுக்கு சளி மற்றும் காய்ச்சல் ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்படும் சூழல் உள்ளது.