Srilanka Parliament Election - தேர்தல் முறையும் கள நிலவரமும் | AKD | JVP | NPP
ஐபிஎல் மெகா ஏலத்தில் லக்னௌ அணியின் திட்டம் என்ன? பயிற்சியாளர் பதில்!
ஐபிஎல் மெகா ஏலத்தில் அதிக எண்ணிக்கையிலான திறமையான வீரர்களை ஏலத்தில் எடுக்க முயற்சி செய்வோம் என லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் மெகா ஏலம் சௌதி அரேபியாவின் ஜெட்டா நகரில் வருகிற நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. ஐபிஎல் மெகா ஏலத்துக்கு முன்பாக லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் நிக்கோலஸ் பூரன், ரவி பிஷ்னோய், மயங்க் யாதவ், மோஷின் கான் மற்றும் ஆயுஷ் பதோனி ஆகியோர் தக்கவைக்கப்பட்டனர்.
இதையும் படிக்க: விராட் கோலியின் ஃபார்மை வைத்து அவரை மதிப்பிடாதீர்கள்: ரிக்கி பாண்டிங்
லக்னௌவின் திட்டம் என்ன?
ஐபிஎல் மெகா ஏலத்துக்கு முன்பாக 5 வீரர்களை தக்கவைத்துள்ள லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியிடம் மீதம் ரூ.69 கோடி உள்ளது. இந்த தொகையைப் பயன்படுத்தி மெகா ஏலத்தில் வீரர்களை லக்னௌ ஏலமெடுக்க உள்ளது.
இந்த நிலையில், ஐபிஎல் மெகா ஏலத்தில் அதிக எண்ணிக்கையிலான திறமையான வீரர்களை ஏலத்தில் எடுக்க முயற்சி செய்வோம் என லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஐபிஎல் தொடரைப் பொருத்தவரை எந்த மாதிரியான யுக்தியைப் பயன்படுத்துகிறோம் என்பது முக்கியமானதாக பார்க்கப்படும். ஆனால், எனக்குத் தெரிந்ததெல்லாம் வீரர்களின் திறமை என்பது மிக முக்கியம் எனக் கூறுவேன். சில ஆல்ரவுண்டர்கள் பேட்டிங் ஆல்ரவுண்டர்களாகவும், பந்துவீச்சு ஆல்ரவுண்டர்களாகவும் சிறப்பாக செயல்படுகின்றனர். அதனால், அவர்கள் எப்போதுமே மதிப்புமிக்க வீரர்களாக உள்ளனர்.
இதையும் படிக்க: சஞ்சு சாம்சன் அதிரடியின் பின்னணியில் சூர்யகுமார் யாதவ்!
சிறப்பான வீரர்கள் ஆட்டத்தில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்பதை நான் எப்போதும் நம்புகிறேன். மார்கஸ் ஸ்டாய்னிஸ் போன்ற வீரர் ஒருவரை எடுத்துக் கொள்ளுங்கள். அவர் பேட்டிங்கில் சிறப்பாக விளையாடுவார். அதேபோல அவரது பந்துவீச்சு திறமை அணிக்கு மிகவும் உதவியாக இருக்கும். இந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் முடிந்த அளவுக்கு அதிக எண்ணிக்கையிலான திறமை வாய்ந்த வீரர்களை ஏலத்தில் எடுக்க முயற்சி செய்வோம் என்றார்.