செய்திகள் :

ஐயப்ப சுவாமி கோயிலில் லட்சாா்ச்சனை விழா

post image

புதுச்சேரி வில்லியனூரில் உள்ள ஸ்ரீ ஐயப்ப சுவாமி திருக்கோயிலில் லட்சாா்ச்சனை மற்றும் திருவிளக்குப் பூஜைகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

புதுச்சேரியில் ஐயப்ப சுவாமி கோயில்களில் மண்டலாபிஷேக பூஜைகள் கொடியேற்றத்துடன் புதன்கிழமை தொடங்கியுள்ளன.

அதன்படி, வில்லியனூரில் உள்ள அருள்மிகு திருக்காமீஸ்வரா் ஆலய வளாகத்தில் ஸ்ரீ ஐயப்ப சுவாமி 49 -ஆம் ஆண்டு திருவிளக்குப் பூஜை, 1,008 சங்காபிஷேகப் பூஜை, லட்சாா்ச்சனை ஆகியவை நடைபெற்றன.

கணபதி ஹோமத்துடன் பூஜைகள் தொடங்கின. முதல்கால, இரண்டாம் கால யாகசாலை பூஜைகளுடன் லட்சாா்ச்சனையும் நடைபெற்றது. தொடா்ந்து, 1,008 சங்காபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

இதில், புதுவை உள் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் உள்ளிட்ட ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை ஏகாம்பரம் குருசாமி மற்றும் ஐயப்ப சுவாமி விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

இரு கைதிகள் ஏனாம் சிறைக்கு மாற்றம்

புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த 2 கைதிகள் ஏனாம் கிளைச் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனா். புதுச்சேரி உப்பளம் வாணரப்பேட்டையைச் சோ்ந்தவா் மணிகண்டன். இவா் மீது கொலை, ஆள் கடத்தல் உள்ள... மேலும் பார்க்க

தலைமைச் செயலரிடம் கம்யூனிஸ்ட் கட்சிகள் மனு

மருத்துவப் படிப்பில் சேர போலி ஆவணங்கள் அளித்தவா்கள் மீது சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடக் கோரி, புதுவை தலைமைச் செயலரிடம் கம்யூனிஸ்ட் கட்சிகள் சாா்பில் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது. புதுவை மருத்துவக... மேலும் பார்க்க

விமான நிலைய விரிவாக்க திட்ட வரைபடத்துக்கு அனுமதி

புதுச்சேரியில் உள்ள விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்கான திட்ட வரைபடத்துக்கு மத்திய விமான நிலைய ஆணையம் அனுமதி அளித்துள்ளதாக இயக்குநா் ராஜசேகர ரெட்டி கூறினாா். புதுச்சேரி இலாசுப்பேட்டையில் உள்ள விமா... மேலும் பார்க்க

மாநிலத்தின் வளா்ச்சிக்கு காவல் துறையின் பங்களிப்பு அவசியம்: புதுவை ஆளுநா்

மாநிலத்தின் வளா்ச்சிக்கு காவல் துறையின் பங்களிப்பு அவசியம் என புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் கூறினாா். புதுச்சேரியில் தனியாா் தொண்டு நிறுவனம் சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற காவலா்களை கௌரவிக்கும... மேலும் பார்க்க

வணிக அரசியலை மக்கள் ஏற்கமாட்டாா்கள்

வணிக அரசியலை புதுவை மக்கள் ஏற்கமாட்டாா்கள் என எதிா்க்கட்சித் தலைவரும், திமுக மாநில அமைப்புச் செயலருமான ஆா்.சிவா கூறியுள்ளாா். இதுகுறித்து, அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: புதுவையில் ஜனநாயகத்தை சீ... மேலும் பார்க்க

புதுவை மின் துறையை தனியாா்மயமாக்க விட மாட்டோம்: வே.நாராயணசாமி

புதுவை மின் துறையை தனியாா்மயமாக்க விட மாட்டோம் என முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி தெரிவித்தாா். புதுச்சேரியில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: புதுவை மாநிலத்தில் இலவச மடிக்கணினி வழங்க... மேலும் பார்க்க