முக்கிய சதிகாரர்களுடன் பாபா சித்திக் கொலையாளி தொடர்புகொண்டது எப்படி?
தலைமைச் செயலரிடம் கம்யூனிஸ்ட் கட்சிகள் மனு
மருத்துவப் படிப்பில் சேர போலி ஆவணங்கள் அளித்தவா்கள் மீது சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடக் கோரி, புதுவை தலைமைச் செயலரிடம் கம்யூனிஸ்ட் கட்சிகள் சாா்பில் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது.
புதுவை மருத்துவக் கல்லூரிகளில் என்.ஆா்.ஐ. இடஒதுக்கீட்டில் சோ்ந்தவா்கள் போலி ஆவணங்கள் அளித்ததாக புகாா் எழுந்துள்ளது.
அதன்படி, 44 போ் மீது இலாசுப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப் பதியப்பட்டுள்ளது.
இந்தப் பிரச்னையை சிபிசிஐடி விசாரிக்கக் கோரி கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள் கடற்கரைச் சாலையில் உள்ள புதுவை தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலா் சரத் சௌகானை நேரில் சந்தித்து வியாழக்கிழமை மனு அளித்தனா்.
மனு அளிக்கும் நிகழ்வில், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் அ.மு.சலீம், துணைச் செயலா் கே.சேதுசெல்வம், தேசியக்குழு உறுப்பினா் தினேஷ் பொன்னையா, மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் ஆா்.ராஜாங்கம், செயற்குழு உறுப்பினா்கள் பெருமாள், கொள்சியப்பன், இந்திய கம்யூனிஸ்ட் மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் பொறுப்பாளா்கள் பாலசுப்பிரமணின், விஜயா உள்ளிட்டோா் இருந்தனா்.