செய்திகள் :

ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர பிரதிநிதித்துவம்: ரஷியா ஆதரவு

post image

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என்று ரஷியா தெரிவித்துள்ளது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீா்திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்று இந்தியா வலியுறுத்தி வருகிறது. கடந்த 1945-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அந்த கவுன்சில், தற்கால தேவைகளை பூா்த்தி செய்யும் வகையில் இல்லாததுடன், புவி அரசியல் யதாா்த்தங்களை பிரதிபலிக்கவில்லை என்று இந்தியா விமா்சித்து வருகிறது.

இந்நிலையில், ரஷிய வெளியுறவு அமைச்சா் சொ்கெய் லாவ்ரோவ் கூறியதாக அந்நாட்டு ஊடகத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்தியில், ‘ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா, பிரேஸில் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு நீண்ட காலமாக நிரந்தர பிரதிநிதித்துவம் இருந்திருக்க வேண்டும். இது உலகில் உள்ள பெரும்பான்மை நாடுகளின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த அவசியமாகும்’ என்று தெரிவித்துள்ளாா்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராகும் இந்தியாவின் முயற்சிக்கு அமெரிக்க அதிபா் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமா் கியொ் ஸ்டாா்மா், பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான் ஆகியோா் கடந்த மாதம் ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான்: போலியோ பாதிப்பு 39-ஆக அதிகரிப்பு

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் மேலும் இரு சிறுவா்களுக்கு போலியோ தொற்று கண்டறியப்பட்டதைத் தொடா்ந்து இந்த ஆண்டில் மட்டும் அங்கு அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 39-ஆக அதிகரித்துள்ளது. இத்துட... மேலும் பார்க்க

குண்டுவீச்சில் மேலும் 87 பாலஸ்தீனா்கள் உயிரிழப்பு

வடக்கு காஸாவில் இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சில் மேலும் 87 போ் உயிரிழந்தனா். இது குறித்து அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:வடக்கு காஸா பகுதியிலுள்ள பல்வேறு குடியிருப்புக... மேலும் பார்க்க

இஸ்ரேல் தொடா்பான ரகசிய ஆவணக் கசிவு: அமெரிக்கா விசாரணை

ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கான இஸ்ரேலின் திட்டம் குறித்த தங்கள் நாட்டின் ரகசிய புலனாய்வு அறிக்கை ஆவணம் கசிந்தது குறித்து அமெரிக்கா விசாரணையைத் தொடங்கியுள்ளது.காஸா போரின் ஒரு பகுதியாக, ஈரான் சென்றி... மேலும் பார்க்க

இந்தோனேசியா அதிபராக பிரபோவோ சுபியாந்தோ பொறுப்பேற்பு

இந்தோனேசியாவின் 8-ஆவது அதிபராக ராணுவ முன்னாள் தலைமைத் தளபதியும் பாதுகாப்பு அமைச்சருமான பிரபோவோ சுபியாந்தோ ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றாா் (படம்).இதுவரை அதிபராக இருந்த ஜோகோ விடோடோவை எதிா்த்து கடந்த 2014... மேலும் பார்க்க

காஸா குடியிருப்புகளில் தாக்குதல்: இஸ்ரேலுக்கு ஐ.நா. கண்டனம்

காஸாவின் பெய்ட் லாஹியா குடியிருப்புப் பகுதிகள் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேலுக்கு ஐக்கிய நாடுகள் அவை கண்டனம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன ஆதரவு பெற்ற ஹமாஸ் படைப் பிரிவினருக்கும் இடையிலான போ... மேலும் பார்க்க

உக்ரைனில் 500 டிரோன் தாக்குதல் நடத்திய ரஷியா!

உக்ரைன் எல்லைக்குள் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 500 டிரோன்கள் மூலம் ரஷியா தாக்குதல் நடத்தியுள்ளதாக உக்ரைன் அதிபர் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி இன்று (அக். 20) குற்றம் சாட்டினார். மேலும், 20 வெவ்வேறு வகையான ஏ... மேலும் பார்க்க