செய்திகள் :

ஓடிடியில் வெளியானது மெய்யழகன்!

post image

நடிகர் கார்த்தி நடித்த மெய்யழகன் திரைப்படம் ஓடிடியில் வெளியானது.

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 96 படத்தை இயக்கிய பிரேம்குமார், சுமார் 6 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு மெய்யழகன் படத்தை இயக்கினார்.

நடிகர் கார்த்தி, அரவிந்த் சாமி, ராஜ்கிரண், ஸ்ரீதிவ்யா உள்ளிட்டோர் நடித்த இந்தப் படத்தை 2டி நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யாவும், நடிகை ஜோதிகாவும் தயாரித்து இருந்தனர்.

கடந்த மாதம் 27-ஆம் தேதி திரைக்கு வந்த மெய்யழகன் திரைப்படம், கலவையான விமர்சனங்களை பெற்றாலும், ரூ. 40 கோடிக்கு மேல் வசூலித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க : அமரன் படத்திற்கு யு/ஏ சான்றிதழ்!

இந்த நிலையில், மெய்யழகன் திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் இன்று (அக். 25) தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியாகியுள்ளது.

இந்தப் படம் திரையரங்குகளில் வெளியானபோது, விமர்சனங்களை தொடர்ந்து, சில காட்சிகள் நீக்கப்பட்டது. தற்போது ஓடிடி தளத்தில் நீக்கம் செய்யப்படாத காட்சிகளுடன் முழுமையாக படம் வெளியாகிள்ளது.

55-ஆவது இந்திய திரைப்பட விழா: 25 படங்களில் ஒரே தமிழ்ப்படம்!

இந்திய திரைப்பட விழாவில் தமிழ்ப்படமான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் தேர்வாகியுள்ளது. கோவாவில் வரும் நவ.20 முதல் 28ஆம் தேதி வரை இந்திய திரைப்பட விழா நடைபெறவிருக்கிறது. முதல் படமாக ரந்தீப் ஹூடா நடித்த சாவர்க்க... மேலும் பார்க்க

விரைவில் கைதி - 2: லோகேஷ் கனகராஜ்!

கைதி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்துக்கான அப்டேட்டை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார்.இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் கார்த்தி கூட்டணியில் உருவான கைதி திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமானது. இ... மேலும் பார்க்க

இந்த வாரம் உங்களுக்கு எப்படி? வார பலன்கள்!

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (அக்டோபர் 25 - 31) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)குடும்பத்தில... மேலும் பார்க்க

வரலாற்று சாதனையை நிகழ்த்தினார் இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி..!

இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி ஃபிடே லைவ் ரேட்டிங்கில் 2,800 புள்ளிகளை கடந்து சாதனை படைத்துள்ளார். இந்த சாதனையை நிகழ்த்தும் 2ஆவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இதற்கு முன்பு விஸ்வநாதன் ஆனந்த் இந... மேலும் பார்க்க

ரூ. 25,000 கடனை அடைக்கதான் நடிக்க வந்தேன்: சூர்யா

தனது அம்மாவின் ரூ. 25,000 கடனை அடைப்பதற்காகதான் முதலில் நடிக்க வந்ததாக நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.நடிகர் சிவக்குமாரின் மூத்த மகனான சூர்யா, 1997ஆம் ஆண்டு நேருக்குநேர் திரைப்படத்தின் மூலம் தமிழ் திர... மேலும் பார்க்க

அரண்மனை - 5 விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அரண்மனை படத்தின் 5 பாகம் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.அரண்மனை - 4 திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிப்படமானதுடன், ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்து ஆச்சரியப்படுத்தியது.முதல் ... மேலும் பார்க்க