செய்திகள் :

Ind Vs Nz : `டேய் யார்றா அந்தப் பையன்' - சுழலில் சாய்த்த சான்ட்னர்; முன்னிலையில் நியூசிலாந்து

post image
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி புனே மைதானத்தில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 156 ரன்களுக்கே அதிர்ச்சிகரமாக ஆல் அவுட் ஆகியிருக்கிறது. நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸின் முடிவில் 103 ரன்கள் முன்னிலைப் பெற்றிருக்கிறது.
Nz

நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 259 ரன்களை எடுத்திருந்தது. நியூசிலாந்து அணி நன்றாக ஆடிக்கொண்டிருந்த சூழலில் இந்தியா சார்பில் தமிழக வீரரான வாஷிங்டன் சுந்தர் மிகச்சிறப்பாக வீசி 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் நியூசிலாந்து அணி எதிர்பார்த்ததை விட குறைவான ஸ்கோரையே எடுத்தது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் சிறப்பாக ஆடி முன்னிலையைப் பெறும் என நினைக்கையில் இந்திய அணியும் முதல் இன்னிங்ஸில் தடுமாறியாது. நேற்றைய நாளின் முடிவில் இந்திய அணி 16 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்திருந்தது. இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டிம் சவுத்தியின் பந்தில் போல்டை பறிகொடுத்து டக் அவுட் ஆகியிருந்தார். ஜெய்ஸ்வாலும் கில்லும் ஆடிக்கொண்டிருந்த சூழலில் இன்றைய நாளை இந்திய அணி தொடங்கியது.

தொடக்கத்திலிருந்தே நியூசிலாந்து அணிதான் ஆதிக்கம் செலுத்தியது. குறிப்பாக, இந்தியா சார்பில் எப்படி வாஷி சிறப்பாக வீசினாரோ அதேமாதிரியே நியூசிலாந்துக்கு இடதுகை ஸ்பின்னரான சான்ட்னர் மிகச்சிறப்பாக வீசினார். 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கில், கோலி, சர்ப்ராஸ் கான், ஜடேஜா என முக்கிய வீரர்கள் அத்தனை பேரின் விக்கெட்டுகளையும் சான்ட்னரே வீழ்த்தினார். பிட்ச் ஸ்பின்னர்களுக்கு வெகுவாக உதவியது. பந்தை நன்றாக காற்றில் தூக்கிப் போட்டும் டைட்டான லைனில் சீராக வீழ்த்தியும் சான்ட்னர் கலக்கினார். இந்திய பேட்டர்களும் தவறான ஷாட்களாக ஆடி சொதப்பினர்.

கோலியெல்லாம் ஏறக்குறைய புல் டாஸாக வந்த பந்தை கணிக்க முடியாமல் ஸ்கொயரில் ஆட முயன்று போல்ட் ஆகினார். சப்ராஸ் கான் வழக்கம் போல அடிதடியாக ஆட முயன்று அவுட் ஆனார். எந்த பேட்டரும் சரியாக சாண்ட்னரின் லைனை கணித்து பேட்டை விட்டு டிபன்ஸ் ஆடவில்லை. பெரும்பாலான பந்துகளை பேடில்தான் வாங்கிக் கொண்டிருந்தனர். சாண்ட்னரின் கரியரிலேயே அவர் எடுக்கும் முதல் 5 விக்கெட் ஹால் இதுதான்.

இந்திய அணி 103 ரன்கள் பின் தங்கியிருக்கும் நிலையில் நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி ஆடி வருகிறது.

விகடன் Whatsapp சேனலுடன் இணைந்திருக்க இங்கே க்ளிக் செய்யவும்:https://whatsapp.com/channel/0029Va7F0Hj0bIdoYCCkqs41

``கால் கிடைச்சதும் மறுபடி விளையாட ஆரம்பிச்சிடுவேன்..'' - தன்னம்பிக்கைப் பெண் சுபஜா

சுபஜா, பலருக்கும் அறிமுகமான பெயர்தான். ஐந்து வருடங்களுக்கு முன்னால் 'மாற்றுத்திறனாளிகளுக்கான வீல் சேர் கூடைப்பந்து' விளையாட்டில் தேசிய அளவில் தேர்வானபோது விகடனிடம் பேசியிருந்தார். பெரும் போராட்டங்களின... மேலும் பார்க்க

Ranji Trophy: பிரித்திவி ஷா மீது ஒழுங்கு நடவடிக்கை? மும்பை அணியிலிருந்து நீக்கப்பட்ட பின்னணி என்ன?

கடந்த அக்டோபர் 11 ஆம் தேதி முதல் ரஞ்சிக் கோப்பை தொடர் நடந்து வருகிறது. இந்தத் தொடருக்கான மும்பை அணியிலிருந்து பிரித்திவி ஷா இப்போது நீக்கப்பட்டிருக்கிறார். முறையாக பயிற்சிகளில் பங்கெடுத்துக் கொள்ளாமல்... மேலும் பார்க்க

Commonwealth Games: நீக்கப்பட்ட பிரபல விளையாட்டுகள்... பதக்க வாய்ப்புகளை இழக்கும் இந்தியா?

காமென்வெல்த் 2026 தொடரிலிருந்து கிரிக்கெட், ஹாக்கி, மல்யுத்தம், பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ் போன்ற போட்டிகள் நீக்கப்பட்டிருக்கிறது. இதனால் மற்ற நாடுகளை விட இந்தியாவே அதிக பாதிப்புகளை எதிர்கொள்ளும் சூழ... மேலும் பார்க்க

Ajith: ``ரேஸிங்தான் என்னை நிறைவாக உணரச் செய்கிறது!'' -அஜித்தின் நெகிழ்ச்சியும் வெளியான அப்டேட்டும்!

நடிகர் அஜித் மீண்டும் கார் ரேஸ் பந்தயங்களில் கலந்துகொள்ளப் போகிறார் எனும் தகவல் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியாகியிருந்தது. அஜித்தின் மேலாளார் சுரேஷ் சந்திராவும் அதை உறுதி செய்தார். இந்நிலையில் அ... மேலும் பார்க்க

Ind Vs Nz: 'திடீரென ஆட்டத்தை நிறுத்திய நடுவர்; அப்செட் ஆன ரோஹித்; என்ன நடந்தது?

இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு 107 ரன்களை டார்கெட்டாக நிர்ணயித்திருக்கும் நிலையில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை வி... மேலும் பார்க்க

Sarfaraz Khan: 'வாய்ப்புங்றது தேவதை மாதிரி..!' - பெங்களூருவில் சாதித்த சர்ப்ராஸூம் பின்னணியும்!

`வாய்ப்புங்றது தேவதை மாதிரி, அது கிடைக்கிறப்ப மதிச்சு ஏத்துக்கனும். இல்லைன்னா எப்பவுமே அது திரும்ப கிடைக்காது.’ சர்ப்ராஸ் கானின் கரியரை இந்த வரிகளுக்குள் அடக்கிவிடலாம். அவருக்கான வாய்ப்புகள் அவருக்கு ... மேலும் பார்க்க