செய்திகள் :

lady Justice Statue: `நீதி தேவதை சிலை மாற்றியமைப்பு' - உச்ச நீதிமன்ற பார் அசோசியேசன் எதிர்ப்பது ஏன்?

post image

நீதியை சரிசமமாக வழங்குவதை நீதி தேவதை சிலை குறிக்கிறது. இந்த சிலை நீதிமன்றங்கள், சட்டக் கல்வி நிறுவனங்கள், சட்ட அலுவலகங்களில் நிறுவப்பட்டுள்ளது. அந்த சிலைகளில் கண்கள் கறுப்பு துணியால் கட்டப்பட்டும், இடது கையில் தராசு, வலது கையில் வாளும் இருக்கும்படி அமைக்கப்பட்டிருக்கும். நீதி நபர்களைப் பார்த்து இல்லாமல், நேர்மையான சிந்தனை மூலம் இருக்க வேண்டும் என்பதற்காகவே கண்கள் கட்டப்பட்டுள்ளது. இடது கையில் இருக்கும் தராசு சமமான நீதி வழங்கப்படும் என்பதை குறிக்கிறது.

உச்ச நீதிமன்றம்

குற்றம் செய்தவர்களை தண்டிப்பதற்காக வலது கையில் நீண்ட இருமுனை வாள் இருக்கிறது. மேலும் அந்த வாளின் இருமுனையும் கூர்மையாக இருக்கும். தவறு யார் செய்தாலும் வாள் அவர்கள் பக்கம்தான் திரும்பும் என்பதை குறிக்கிறது. சட்ட சாசன புத்தகத்தின் மேல் இருக்கும் இடது கால் சட்டத்தை தவிர கவனிப்பதற்கு, முக்கியத்துவம் தருவதற்கு வேறெதுவும் இல்லை என்பதை சொல்கிறது. வலது கால் படமெடுத்து வரும் பாம்பின் மீது இருக்கும். இது நீதி வழங்குவதை தடுக்கும் எந்த தீய சக்தியின் பயமுறுத்தல்களும் எடுபடாது என்பதையும் அவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பித்துவிட முடியாது என்பதையே குறிக்கிறது.

இந்த சூழலில்தான் உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் நீதிபதிகளின் நூலகத்தில் ஆறடி உயரம் கொண்ட நீதி தேவதையின் சிலை திறக்கப்பட்டது. அதில் பழைய சிலையை போல இல்லாமல் புதிய சிலையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. குறிப்பாக கண்கள் துணியால் மூடப்படவில்லை. ஒரு கையில் தராசும், மறு கையில் வாளுக்கு பதிலாக அரசமைப்பு சட்ட புத்தகமும் இடம்பெற்றுள்ளது. மேலும் தலையில் கிரீடத்துடன் வெள்ளை நிற உடையில் இருப்பது போன்று இந்த புதிய சிலை உருவாக்கப்பட்டிருக்கிறது. இதற்கு உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

நீதி தேவதை

இதுகுறித்து சங்கத்தின் சார்பில் ஒருமனதாக நிறைவேற்றிய தீர்மானத்தில், "நீதி தேவதையின் சிலை மற்றும் சின்னத்தில் உச்ச நீதிமன்றம் ஒருதலைபட்சமாக செயல்பட்டு மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இது உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்களின் நிர்வாக குழுவின் கவனத்துக்கு வந்துள்ளது. நீதி நிர்வாகத்தில் சமபங்குதாரர்களாக இருக்கிறோம். ஆனால், இந்த மாற்றங்கள் முன்மொழியப்பட்டபோது எங்களின் கவனத்துக்கு கொண்டுவரப்படவில்லை. மேலும் இந்த மாற்றத்துக்கான பின்னணி என்ன என்பது குறித்தும் தெரியவில்லை. அதபோன்று, நாங்கள் வழக்கறிஞர் சங்கத்துக்காக உணவு விடுதி கட்ட கோரிக்கை விடுத்த இடத்தில் அருங்காட்சியகம் கட்ட எடுத்துள்ள நடவடிக்கைக்கும் எஸ்.சி.பி.ஏ ஒருமனதாக தனது எதிர்ப்பை தெரிவிக்கிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

இது குறித்து நம்மிடம் பேசிய தி.மு.க வழக்கறிஞரும், செய்தித் தொடர்பாளருமான கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், "நீதி தேவதை சிலை மாற்றியமைக்கப்பட்டிருப்பதில் நியாயம் இல்லை. வாதத்தின் அடிப்படையில்தான் தீர்ப்பு சொல்ல வேண்டும். யார் வாதிடுகிறார்கள், யாருக்காக பேசுகிறார்கள், முன்னாள் நிற்பவர்கள் என எதுவும் தெரியக் கூடாது. வாதம் மட்டும்தான் காதில் கேட்க வேண்டும் என்பதுதான் நீதி தேவதை சிலையின் தத்துவம். வாதத்தின் அடிப்படியில் தீர்ப்பு வழங்க வேண்டும். தன்னுடைய மகளே கொலை செய்யப்பட்டாலும் நீதிபதி அதை சந்தேகத்துக்கு இடமில்லாமல் நிரூபித்தால் மட்டுமே தண்டனை வழங்க வேண்டும். ஆனால் இன்று கண்களை திறந்து வைத்திருக்கிறீர்கள். மேலும் இருமுனையும் கூர்மையாக இருக்கும் வாள் யார் தவறு செய்தாலும் அவர்கள் பக்கம்தான் திரும்பும் என்பதை குறிக்கிறது. அதையும் மாற்றியிருக்கிறார்கள். இதன் மூலம் நீதி தேவதைக்கான தத்துவத்தையே உடைத்திருக்கிறார்கள். தற்போது இவ்வாறு மாற்றம் செய்ய வேண்டும் என்பதற்கான தேவை எங்கிருந்து வந்தது?" என்றார்.

தாராவியின் கதை: குடிசைகளை கோபுரமாக்க அடுத்தடுத்து டெண்டர்; களத்தில் இறங்கிய அதானி | பகுதி 4

மும்பை தாராவியில் உள்ள ஆயிரக்கணக்கான குடிசைகளை அகற்றிவிட்டு அடுக்குமாடி குடியிருப்பு கட்டடங்கள் கட்டும் திட்டம் 15 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருந்து வந்த நிலையில், அத்திட்டத்தை செயல்படுத்தும் பொ... மேலும் பார்க்க

Vijay TVK: `சாதிகள்... அரசியல் புத்திசாலி... கலைஞர், ஜெயலலிதா!' - விஜய்யின் அரசியல் பார்வை

நாளை வி.சாலையில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடக்கவிருக்கிறது. இதற்கென பிரமாண்ட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.இப்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியின் தலைவராக இருக்கும்... மேலும் பார்க்க

புதுச்சேரி: `நிரூபித்துவிட்டால், அரசியலை விட்டே விலகுகிறேன்’ - நமச்சிவாயம் ஆவேசத்தின் பின்னணி என்ன?

சாடும் நாராயணசாமிபுதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க தலைமையிலான கூட்டணி ஆட்சியில் அமர்ந்ததில் இருந்து, முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம் உள்ளிட்டவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை அடுக்கி வ... மேலும் பார்க்க

தீவிரமடையும் பிரச்னை; `லாரன்ஸ் சகோதரர் பற்றி தகவல் கொடுத்தால் ரூ.10 லட்சம் சன்மானம்' - NIA அறிவிப்பு

பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டின் மீது கடந்த ஏப்ரல் மாதம் குஜராத் சிறையில் அடைக்கப்பட்டுள்ள லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளிகள் துப்பாக்கியால் சுட்டனர். இத்துப்பாக்கிச்சூடு தொடர்பாக மும்பை போலீஸார் விசார... மேலும் பார்க்க

TVK : காமராஜர், பெரியார், அம்பேத்கர், விஜய்... த.வெ.க கட்-அவுட் ‘காட்டும்’ அரசியல் ரூட் என்ன?

முதல் மாநாடுதமிழக வெற்றிக் கழகம்நடிகர் விஜய் புதிதாகத் தொடங்கியிருக்கும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியைச் சுற்றியே அனைவரின் கண்களும் இருக்கிறது. கட்சி தொடங்கிய கையேடு கட்சியின் கொடி, பாடலையும் வெளியிட்ட... மேலும் பார்க்க

`தமிழ்த்தாய் வாழ்த்து தவறாகப் பாடப்படவில்லை..!" - துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்ட ஒரு நிகழ்வில் தமிழ்த் தாய் வாழ்த்துப்பாடல் பாடப்படும் போது திராவிட திரு நல்நாடும் எனும் வரிகள் இல்லாமல் பாடப்பட்டது. அது தொடர... மேலும் பார்க்க