செய்திகள் :

`தமிழ்த்தாய் வாழ்த்து தவறாகப் பாடப்படவில்லை..!" - துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

post image

தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்ட ஒரு நிகழ்வில் தமிழ்த் தாய் வாழ்த்துப்பாடல் பாடப்படும் போது திராவிட திரு நல்நாடும் எனும் வரிகள் இல்லாமல் பாடப்பட்டது. அது தொடர்பான விவாதம் தொடர்ந்த நிலையில், ஆளுநர் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று தமிழ்நாட்டின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்ட ஒரு அரசு நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்து சரியாகப் பாடப்படவில்லை எனக் குற்றம்சாட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து, முதலமைச்சரின் புத்தாய்வு திட்டத்தில் பயிற்சி பெற்றவர்களுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நிறைவு சான்றிதழ் வழங்கினார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ``தமிழ்நாடு முதலமைச்சரின் புத்தாய்வு திட்டத்தில் பயிற்சி பெற்ற 19 நபர்களுக்கு நிறைவுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

உதயநிதி ஸ்டாலின்

இந்த திட்டம் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். இந்த திட்டத்தில் அடுத்துப் பயன்பெறப்போகும் இளைஞர்களை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது. தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் தவறாகவெல்லாம் பாடப்படவில்லை. பாடல் பாடப்படும் போது மைக் சரியாக வேலை செய்யவில்லை. இரண்டு, மூன்று இடங்களில் பாடப்படுபவரின் குரல் கேட்கவில்லை. அதனால் மீண்டும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை முழுமையாக கேட்கும்படி பாடப்பட்டது. அதைத் தொடர்ந்து தேசிய கீதமும் முறையாகப் பாடப்பட்டது. இதை ஒரு பிரச்னையாக மாற்றவேண்டாம்." என விளக்கமளித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/crf99e88

புதுச்சேரி: `நிரூபித்துவிட்டால், அரசியலை விட்டே விலகுகிறேன்’ - நமச்சிவாயம் ஆவேசத்தின் பின்னணி என்ன?

சாடும் நாராயணசாமிபுதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க தலைமையிலான கூட்டணி ஆட்சியில் அமர்ந்ததில் இருந்து, முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம் உள்ளிட்டவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை அடுக்கி வ... மேலும் பார்க்க

தீவிரமடையும் பிரச்னை; `லாரன்ஸ் சகோதரர் பற்றி தகவல் கொடுத்தால் ரூ.10 லட்சம் சன்மானம்' - NIA அறிவிப்பு

பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டின் மீது கடந்த ஏப்ரல் மாதம் குஜராத் சிறையில் அடைக்கப்பட்டுள்ள லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளிகள் துப்பாக்கியால் சுட்டனர். இத்துப்பாக்கிச்சூடு தொடர்பாக மும்பை போலீஸார் விசார... மேலும் பார்க்க

TVK : காமராஜர், பெரியார், அம்பேத்கர், விஜய்... த.வெ.க கட்-அவுட் ‘காட்டும்’ அரசியல் ரூட் என்ன?

முதல் மாநாடுதமிழக வெற்றிக் கழகம்நடிகர் விஜய் புதிதாகத் தொடங்கியிருக்கும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியைச் சுற்றியே அனைவரின் கண்களும் இருக்கிறது. கட்சி தொடங்கிய கையேடு கட்சியின் கொடி, பாடலையும் வெளியிட்ட... மேலும் பார்க்க

'பாஜக தொடர்பு... கட்சியை அழித்துவிட்டார்' - மயூரா ஜெயக்குமாருக்கு எதிராக கொதிக்கும் கோவை கதர்கள்

`கட்சி சித்தாந்தத்திற்கு எதிராக செயல்படுகிறார்’கடந்த 20.10.2024 அன்று கோவை மாநகர காங்கிரஸ் கமிட்டி சார்பில், 'கோவை காங்கிரஸ் கட்சியைக் காப்போம் காங்கிரஸ் கட்சியை வளர்ப்போம்' என்ற தலைப்பில் சிறப்புக் க... மேலும் பார்க்க

Stalin: "துறையும் வளர்ந்திருக்கு; உதயநிதியும் வளர்ந்திருக்கிறார்" - ஸ்டாலின் பெருமிதம்

முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டி நிறைவு விழா நேற்று (அக்டோபர் 24) சென்னையில் நடைபெற்றது.முதலமைச்சர் கோப்பை போட்டியில் சென்னை மாவட்ட அணி 105 தங்கம் என மொத்தம் 254 பதக்கங்களைப் பெற்று முதலிடம் பிட... மேலும் பார்க்க

TVK: 'கூடப்போகும் தொண்டர்களுக்கு உணவு, ரிஃப்ரெஷ்மென்ட்..!' தவெக-வின் ப்ளான் என்ன?

விஜய்யின் த.வெ.க கட்சியின் முதல் மாநில மாநாடு 27 ஆம் தேதி நடக்கவிருக்கிறது. இன்னும் இரண்டே நாட்கள்தான் இருக்கும் நிலையில் மாநாட்டுக்கான வேலைகள் பரபரப்பாக நடந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில், மாநாட்டைப்... மேலும் பார்க்க