செய்திகள் :

Vijay TVK: `சாதிகள்... அரசியல் புத்திசாலி... கலைஞர், ஜெயலலிதா!' - விஜய்யின் அரசியல் பார்வை

post image

நாளை வி.சாலையில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடக்கவிருக்கிறது. இதற்கென பிரமாண்ட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இப்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியின் தலைவராக இருக்கும் விஜய், நடிகராக விகடன் வாசகர் மேடையில் வாசகர்களின் அரசியல் தொடர்பான கேள்விகளுக்கு அளித்த பதில்களின் மீள்பதிவு.

இன்றைய அரசியலில் யாரைப் புத்திசாலியாகக் கருதுகிறீர்கள்?

தேர்தலில் - எப்படியாவது ஜெயித்து விடவேண்டுமென்று எல்லா கொள்கைகளையும் 99 மறந்துவிட்டு, எப்படியாவது கூட்டு சேர்ந்து, எப்படியோ ஜெயித்துவிடுகிறார்களே... அவர்கள்தான் புத்திசாலிகள்.

விஜய்

உங்களை ஒரே ஒரு நாள் சென்னை மேயராக நியமித்தால், உங்களின் முதல் பணி என்னவாக இருக்கும்?

சென்னையைச் சிங்கப்பூராக மாற்ற முயற்சி செய்வேன்.

உங்களுக்கு ஊக்கம் அளிக்கும் வாசகம் எது?

''வள்ளலார் சொன்ன 'விழித்திரு, தனித்திரு, பசித்திரு!''

வாழ்ந்தால் இவரை மாதிரி வாழணும்னு யாரைப் பார்த்து ஆச்சர்யப்பட்டு இருக்கீங்க?

'இருந்தாலும், மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும். இவர்போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்’னு ஊர் உலகமே சொல்ற புரட்சித் தலைவரைப் பார்த்து!''

விஜய்

உங்களுக்குப் பிடித்த மனிதர் யார்?

''ண்ணா... 'கள்’ சேர்த்துக்கலாமா? மனிதர்'கள்’ணா!காந்தி, தந்தை பெரியார், காமராஜர், எம்.ஜி.ஆர். இவங்களை எனக்கு மட்டுமா.... ஒவ்வொரு தமிழனுக்கும் பிடிக்கும்தானே!''

சாதிகள் ஒழியாதா?

''சாதியை மையமாவெச்சு அரசியல் நடத்தினவங்களுக்கு, இந்தத் தேர்தல்ல மக்கள் மரண அடி கொடுத்து இருக்காங்க. சாதி நம்மை மீண்டும் கற்காலத்துக்கு அழைச்சுட்டுப் போயிடும். முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டை போட்டுடும். மக்கள் விரும்பறது 'சாதிகள் இல்லையடி பாப்பா’ என்று சொன்ன பாரதியாரின் வரிகளைத்தான்!''

விஜய்

முதல்வர் ஜெயலலிதாவிடம் பிடித்தது எது? டாக்டர் கலைஞரிடம் பிடித்தது எது?

''முதல்வர் ஜெயலலிதாவிடம் பிடித்தது அவரது தைரியம். கலைஞரிடம் பிடித்தது அவருடைய இலக்கியம்!''

(1999 ஆகஸ்ட் 18, 2003 அக்டோபர் 05, 2011 ஜூன் 08, 22 ஆகிய தேதிகளில் வெளியான ஆனந்த விகடன் இதழ்களிலிருந்து...)

தாராவியின் கதை: குடிசைகளை கோபுரமாக்க அடுத்தடுத்து டெண்டர்; களத்தில் இறங்கிய அதானி | பகுதி 4

மும்பை தாராவியில் உள்ள ஆயிரக்கணக்கான குடிசைகளை அகற்றிவிட்டு அடுக்குமாடி குடியிருப்பு கட்டடங்கள் கட்டும் திட்டம் 15 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருந்து வந்த நிலையில், அத்திட்டத்தை செயல்படுத்தும் பொ... மேலும் பார்க்க

lady Justice Statue: `நீதி தேவதை சிலை மாற்றியமைப்பு' - உச்ச நீதிமன்ற பார் அசோசியேசன் எதிர்ப்பது ஏன்?

நீதியை சரிசமமாக வழங்குவதை நீதி தேவதை சிலை குறிக்கிறது. இந்த சிலை நீதிமன்றங்கள், சட்டக் கல்வி நிறுவனங்கள், சட்ட அலுவலகங்களில் நிறுவப்பட்டுள்ளது. அந்த சிலைகளில் கண்கள் கறுப்பு துணியால் கட்டப்பட்டும், இட... மேலும் பார்க்க

புதுச்சேரி: `நிரூபித்துவிட்டால், அரசியலை விட்டே விலகுகிறேன்’ - நமச்சிவாயம் ஆவேசத்தின் பின்னணி என்ன?

சாடும் நாராயணசாமிபுதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க தலைமையிலான கூட்டணி ஆட்சியில் அமர்ந்ததில் இருந்து, முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம் உள்ளிட்டவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை அடுக்கி வ... மேலும் பார்க்க

தீவிரமடையும் பிரச்னை; `லாரன்ஸ் சகோதரர் பற்றி தகவல் கொடுத்தால் ரூ.10 லட்சம் சன்மானம்' - NIA அறிவிப்பு

பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டின் மீது கடந்த ஏப்ரல் மாதம் குஜராத் சிறையில் அடைக்கப்பட்டுள்ள லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளிகள் துப்பாக்கியால் சுட்டனர். இத்துப்பாக்கிச்சூடு தொடர்பாக மும்பை போலீஸார் விசார... மேலும் பார்க்க

TVK : காமராஜர், பெரியார், அம்பேத்கர், விஜய்... த.வெ.க கட்-அவுட் ‘காட்டும்’ அரசியல் ரூட் என்ன?

முதல் மாநாடுதமிழக வெற்றிக் கழகம்நடிகர் விஜய் புதிதாகத் தொடங்கியிருக்கும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியைச் சுற்றியே அனைவரின் கண்களும் இருக்கிறது. கட்சி தொடங்கிய கையேடு கட்சியின் கொடி, பாடலையும் வெளியிட்ட... மேலும் பார்க்க

`தமிழ்த்தாய் வாழ்த்து தவறாகப் பாடப்படவில்லை..!" - துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்ட ஒரு நிகழ்வில் தமிழ்த் தாய் வாழ்த்துப்பாடல் பாடப்படும் போது திராவிட திரு நல்நாடும் எனும் வரிகள் இல்லாமல் பாடப்பட்டது. அது தொடர... மேலும் பார்க்க