செய்திகள் :

சென்னை: நைஜீரிய நெட்வொர்க்குடன் தொடர்பு; போதைப்பொருள் வழக்கில் முன்னாள் டிஜிபி மகன் கைது!

post image

போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கைகளை சென்னைப் போலீஸார் எடுத்து வருகிறார்கள். இதுதொடர்பாக தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. இந்த நிலையில் சென்னை நந்தம்பாக்கத்தில் கொக்கைன் போதைப்பொருளை விற்ற குற்றச்சாட்டில் அருண் (40), மெகலன் (42), நைஜிரியா நாட்டைச் சேர்ந்த ஜான் எஸி, ஆகியோரை தனிப்படை போலீஸார் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடமிருந்து 3.8 கிராம் கொக்கைன், பணம் ரூ.1,02,000, இரண்டு செல்போன்கள் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து போதைப்பொருள் தொடர்பாக புனித தோமையர்மலை காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

கைது

இது குறித்து தனிப்படை போலீஸார் கூறுகையில், ``போதைப்பொருள் நெட்வொர்க் குறித்து கிடைக்கும் ரகசிய தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நந்தம்பாக்கம் பகுதியில் கொக்கைன் என்ற போதைப்பொருள் விற்கப்படுவதாக எங்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனால் அங்குச் சென்று மூன்று பேரை சுற்றி வளைத்துப்பிடித்தோம். இதில் அருண் என்பவரிடம் விசாரித்த போது அவர் முன்னாள் டி.ஜி.பி ஒருவரின் மகன் எனத் தெரியவந்தது. உடனடியாக இதுகுறித்து காவல்துறை உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தோம். அப்போது யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுங்கள் என எங்களின் உயரதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையில் இந்த வழக்கிலிருந்து அருணை விடுவிக்க காவல்துறை உயரதிகாரிகள் சிலரிடமிருந்து பிரஷர் வந்தது. ஆனால் எங்களின் உயரதிகாரிகள் அருணை விடுவிக்காமல் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர். இதையடுத்து அருண் உள்பட மூன்று பேரை கைது செய்திருக்கிறோம். இந்த போதைப்பொருள் விற்பனைக் கும்பலின் பின்னணி குறித்து விசாரித்து வருகிறோம்" என்றனர்.

போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``போதைப்பொருள் விற்பனை வழக்கில் கைதாகியிருக்கும் முன்னாள் டி.ஜி.பி-யின் மகனுக்கு நைஜிரியா நாட்டைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருந்து வந்திருக்கிறது. முதலில் இந்தக் கும்பலைக் கைது செய்யும்போது அருண் குறித்த தகவல்கள் தெரியவில்லை. சம்பந்தப்பட்ட முன்னாள் டி.ஜி.பியும் காவல்துறையில் பணியாற்றி காலக்கட்டத்தில் சர்ச்சைகளில் சிக்கியதோடு சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்" என்றார்.

சென்னை: இளம்பெண்ணுக்கு நடந்த பாலியல் வன்கொடுமை - சஸ்பெண்ட் காவலர் சிக்கிய பின்னணி

தென்சென்னையைச் சேர்ந்த ராணி (பெயர் மாற்றம்) என்ற இளம்பெண், ஸ்பா ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவர், கடந்த 17.10.2024-ம் தேதி தன்னுடைய கணவருடன் வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தார். வரும் வழியில் ... மேலும் பார்க்க

சென்னை: 5,230 நோட் பேடுகளுடன் கன்டெய்னர் கடத்தல்; கோடீஸ்வரனாக ஆசைப்பட்ட பட்டதாரியின் மாஸ்டர் பிளான்!

சீனாவிலிருந்து சரக்கு கப்பல் மூலம் சென்னை துறைமுகத்துக்கு கடந்த மாதம் கன்டெய்னரில் 34 கோடி ரூபாய் மதிப்பிலான note pad கொண்டு வரப்பட்டது. நோட் பேடு வைக்கப்பட்டிருந்த கன்டெய்னர் துறைமுகத்தில் உள்ள சென்ன... மேலும் பார்க்க

கணவன் கொலையில் சிக்கிய மனைவி; உடந்தையாக இருந்த விசிக நிர்வாகியும் திடீர் தற்கொலை - நடந்தது என்ன?!

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அருகேயுள்ள கல்யாணபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுதாகர். இவரது மனைவி ரம்யா. இவர்களுக்கு இரு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில், ஆரணி அடுத்துள்ள பையூர் கிரா... மேலும் பார்க்க

சென்னை: போதையில் நடந்த தகராறில் நடத்துநர் உயிரிழப்பு; பயணி கைது; நடந்தது என்ன?

சென்னை மாநகர பேருந்து கழகத்தில் நடத்துநராக பணிபுரிந்து வருபவர் ஜெகன்குமார். நேற்று (அக்டோபர் 24), அவர் எம்.பி.கே நகர் முதல் கோயம்பேடு வரை செல்லும் பேருந்தில் பணியிலிருந்திருக்கிறார். வேலூரைச் சேர்ந்த ... மேலும் பார்க்க

சேலம்: அரசு மருத்துவமனையில் பெண் மீது தாக்குதல் - புகார் கொடுத்தும் வாங்க மறுத்ததா போலீஸ்?

சேலம் மாநகரில் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி போன்ற மாவட்டங்களில் இருந்து நோயாளிகள் மேல் சிகிச்சைக்காக வந்து செல்... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி: சிறுமிகள் பாலியல் வன்கொடுமை... கர்ப்பம்! - தலைமை ஆசிரியர் உட்பட இருவர் மீது குண்டாஸ்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு ஆதி திராவிடர் நல ஆரம்பப் பள்ளியில், R.R குப்பத்தைச் சேர்ந்த 52 வயதான துரை அரசன் என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். அதே... மேலும் பார்க்க