செய்திகள் :

ரூ. 25,000 கடனை அடைக்கதான் நடிக்க வந்தேன்: சூர்யா

post image

தனது அம்மாவின் ரூ. 25,000 கடனை அடைப்பதற்காகதான் முதலில் நடிக்க வந்ததாக நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

நடிகர் சிவக்குமாரின் மூத்த மகனான சூர்யா, 1997ஆம் ஆண்டு நேருக்குநேர் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். தற்போது, இந்திய திரையுலகின் முக்கிய நடிகர்களில் ஒருவராக உருவெடுத்துள்ளார்.

இவரது நடிப்பில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படம் பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அடுத்த மாதம் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

இதையும் படிக்க : அமரன் படத்திற்கு யு/ஏ சான்றிதழ்!

இந்த நிலையில், சமீபத்தில் சூர்யா அளித்த நேர்க்காணல் ஒன்றி சுவாரஸ்யமான தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். தான் நடிக்க வந்ததே, தனது அப்பாவுக்கு தெரியாமல் அம்மா வாங்கிய ரூ. 25,000 கடனை அடைக்கதான் என்று தெரிவித்துள்ளார்.

நேர்க்காணலில் உரையாடிய நடிகர் சூர்யா, கல்லூரி படிப்புக்கு பிறகான தனது முதல் வேலை குறித்தும் நிகழ்ச்சி தொகுப்பாளருடன் உரையாடினார்.

அப்போது சூர்யா பேசியதாவது:

“நடிப்பதற்கு முன்னதாக பனியன் நிறுவனம் ஒன்றில் முதலில் 15 நாள்களுக்கு ரூ. 750 ஊதியத்துடன் பயிற்சி பெற்றேன். பிறகு 3 ஆண்டுகளில் மாத ஊதியம் ரூ. 8,000-ஐ எட்டியது.

மேலும், பனியன் நிறுவனத்தில் பெற்ற அனுபவத்தின் மூலம் தனது தந்தையின் முதலீட்டை பயன்படுத்தி சொந்தமாக நிறுவனம் தொடங்கும் திட்டத்தில் இருந்தேன், நடிக்கும் எண்ணம் கற்பனையில்கூட இருந்ததில்லை.

ஆனால், எனது அப்பாவுக்கு தெரியாமல் ரூ. 25,000 கடனாக அம்மா வாங்கிய கடனால் அனைத்தும் மாறியது. எங்களின் வங்கி இருப்பு ஒன்றரை லட்சம் ரூபாய்கூட இல்லை என்று அம்மா குறிப்பிட்டார்.

நடித்ததற்கான சம்பளத்தை பெறுவதற்கு யாருக்கும் எனது அப்பா அழுத்தம் தரவில்லை. அவர்களாக கொடுக்கும் வரை காத்திருந்தார். அதே சமயத்தில், அப்பாவுக்கு பத்து மாதங்களுக்கு மேலாக வேலை இல்லாமல் இருந்தது.

ஒரு நடிகரின் மகனாக எனக்கு பல வாய்ப்புகள் வந்தது. மணிரத்னம் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து வந்த தொடர் அழைப்புகள் அனைத்தையும் மாற்றியது.

அம்மா பெற்ற கடனை அடைப்பதற்காக படத்தில் நடிக்க முன்வந்தேன். கடன் அடைக்கப்பட்டது. எனது சினிமா பயணம் தொடங்கியது, நான் சூர்யா ஆனேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த வாரம் உங்களுக்கு எப்படி? வார பலன்கள்!

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (அக்டோபர் 25 - 31) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)குடும்பத்தில... மேலும் பார்க்க

வரலாற்று சாதனையை நிகழ்த்தினார் இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி..!

இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி ஃபிடே லைவ் ரேட்டிங்கில் 2,800 புள்ளிகளை கடந்து சாதனை படைத்துள்ளார். இந்த சாதனையை நிகழ்த்தும் 2ஆவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இதற்கு முன்பு விஸ்வநாதன் ஆனந்த் இந... மேலும் பார்க்க

அரண்மனை - 5 விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அரண்மனை படத்தின் 5 பாகம் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.அரண்மனை - 4 திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிப்படமானதுடன், ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்து ஆச்சரியப்படுத்தியது.முதல் ... மேலும் பார்க்க

ஓடிடியில் வெளியானது மெய்யழகன்!

நடிகர் கார்த்தி நடித்த மெய்யழகன் திரைப்படம் ஓடிடியில் வெளியானது. விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 96 படத்தை இயக்கிய பிரேம்குமார், சுமார் 6 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு மெய்யழகன் படத்தை இயக்கினார்.நடிகர் ... மேலும் பார்க்க

இன்று இனிய நாள்!

12 ராசிகளுக்குமான இன்றைய தினப்பலன்களை தெரிந்துகொள்வோம்.25.10.2024 மேஷம்:இன்று நீங்கள் அவசரப்படாமல் நிதானமாக எதையும் செய்தால் வெற்றி நிச்சயம். இந்த காலகட்டத்தில் எதிர்ப்புகள் விலகும். ராசிநாதன் செவ்வாய... மேலும் பார்க்க

டாக்ஸிக் படத்தை தேர்வு செய்தது ஏன்? நடிகர் யஷ் விளக்கம்!

கேஜிஎஃப், கேஜிஎஃப் - 2 படங்களில் நடித்து இந்திய சினிமாவில் ஸ்டாரானவர் நடிகர் யஷ். உலகளவில் கவனம் ஈர்த்த இப்படம் ரூ.1000 கோடிக்கு அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது.தொடர்ந்து, யஷ் மலையாள இயக்குநர் கீது ம... மேலும் பார்க்க