ஓடிடியில் வெளியான மார்கன், படை தலைவன்!
விஜய் ஆண்டனியின் மார்கன், நடிகர் விஜய்காந்த்தின் மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் வெளியான படை தலைவன் ஆகிய திரைப்படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
கிரைம் திரில்லர் படமாக வெளியான மார்கன் திரைப்படத்தில், விஜய் ஆண்டனி பிரதான பாத்திரத்திலும் விஜய் ஆண்டனி சகோதரியின் மகன் அஜய் திஷன் வில்லனாகவும் பிரிகடா, சமுத்திரகனி உள்ளிட்டோர் முதன்மை பாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.
மார்கன் திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
அதேபோல, நடிகர் விஜய்காந்த்தின் மகன் சண்முக பாண்டியன் படை தலைவன் என்கிற படத்தில் நடித்திருந்தார். இளையராஜா இசையமைப்பில் உருவான இந்தப் படத்தை யு. அன்பு எழுதி இயக்கினார்.
இப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.