செய்திகள் :

கருவுற்று இருப்பதை அறிவித்த சுந்தரி தொடர் நாயகி!

post image

சுந்தரி தொடர் நாயகி கேப்ரியல்லா, தான் கருவுற்று இருப்பதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்று தன்னுடைய நகைச்சுவை திறமையை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் அறியபட்டவர் நடிகை கேப்ரியல்லா.

தொடர்ந்து டிக் டாக்கில் விடியோவில் வெளியிட்டு ரசிகர்களிடையே பிரபலமான இவருக்கு, திரைத்துறையில் வாய்ப்புக் கிடைத்தது. நயன்தாராவின் ஐரா, காஞ்சனா - 3, கபாலி உள்ளிட்ட படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, சுந்தரி தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார் கேப்ரியல்லா. இத்தொடரை அழகர்சாமி இயக்கி வருகிறார்.

இதையும் படிக்க: கடைசி நாள் படப்பிடிப்பு... கண்கலங்கி அழுத சுந்தரி தொடர் நடிகர்கள்!

சுந்தரி தொடரின் முதல் பாகத்துக்கு மக்கள் கொடுத்த வரவேற்பைத் தொடர்ந்து, இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டு வருகிறது. சுந்தரி தொடர் 2 பாகத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்துள்ளது.

இந்த நிலையில், நடிகை கேப்ரியல்லா தான் கருவுற்று இருப்பதை இன்ஸ்டாகிராமில் புகைப்படம் வெளியிட்டு, அதன்மூலம் அறிவித்துள்ளார்.

கேப்ரியல்லாவுக்கு சைத்ரா ரெட்டி, ரச்சிதா மகாலட்சுமி, பிரனிகா உள்ளிட்ட சின்னத்திரை நடிகைகள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

டிஆர்பியில் முன்னணியில் உள்ள சுந்தரி தொடர் முடிக்கப்படுவதற்கு, கேப்ரியல்லா கருவுற்று இருப்பதும் காரணமாக இருக்கலாம் என்று இத்தொடரின் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மார்ட்டின் லாட்டரி தொடர்புடைய இடங்களில் ரூ. 12.41 கோடி பறிமுதல்!

மார்ட்டின் லாட்டரி நிறுவனம் தொடர்புடைய 22 இடங்களில் இருந்து ரூ. 12.41 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.இது தொடர்பாக அமலாக்கத்துறை தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திரு... மேலும் பார்க்க

அதிமுகவில் தளவாய் சுந்தரத்துக்கு மீண்டும் பொறுப்பு!

அதிமுகவில் தளவாய் சுந்தரத்துக்கு மீண்டும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.அதிமுகவின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையி... மேலும் பார்க்க

டிச. 3-ல் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை!

வரும் டிச. 3 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.நாகா்கோவில் கோட்டாறு தூயசவேரியார்ஆலயத் திருவிழாவினையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்துக்கு டிச. 3 ஆம் தேதி உள்ளூர் வி... மேலும் பார்க்க

நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்த்தப்படும்: ராகுல் காந்தி

நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்த்தப்படும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல்கட்ட தேர்தல் நிறைவடைந்துள்ள ... மேலும் பார்க்க

9 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமை: உரிமைத்தொகை ரூ. 90 லட்சம் வழங்கல்!

2024-25 ஆம் ஆண்டிற்கு 9 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமை செய்து நூலுரிமைத்தொகையாக ரூ. 90 லட்சத்தை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ... மேலும் பார்க்க

திருமாவளவன் எங்கு செல்வாா்? - திருமாவளவன் விளக்கம்

சென்னை: சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ இன்பதுரை, விசிக தலைவா் திருமாவளவனுக்கு சூசகமாக அதிமுக கூட்டணிக்கு அழைப்பு விடுத்ததற்கு திருமாவளவன் மேடையிலேயே தெளிவாக விளக்கம் அளி... மேலும் பார்க்க