செய்திகள் :

தாராவி நிலத்தை அரசு அதானிக்கு தாரைவார்க்கலாமா? - தேர்தல் பிரசாரத்தில் காங்.

post image

தாராவி நிலத்தை முன்னிலைப்படுத்தி காங்கிரஸ் தலைவர்களின் இன்றைய தேர்தல் பிரச்சாரப் பதிவுகள் அமைந்துள்ளன.

மகாராஷ்டிரத்தில் மொத்தம் 288 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இங்கு, வரும் நவ.20-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மகா விகாஸ் அகாடி கூட்டணியில் உள்ள சிவசேனை (உத்தவ் தாக்கரே பிரிவு), தேசியவாத காங்கிரஸ் (சரத் பவாா் பிரிவு) மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கும், அங்கு ஆளுங்கட்சியாக உள்ள பாஜக, சிவசேனை (ஏக்நாத் ஷிண்டே பிரிவு) இணைந்துள்ள ‘மகா யுதி’ கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்த நிலையில், மகாராஷ்டிரத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரம் இன்று(நவ. 18) மாலையுடன் ஓய்ந்தது.

இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த முக்கியத் தலைவர்களும் இன்று தீவிரமாக ஈடுபட்டனர். இந்த நிலையில், இன்று காங்கிரஸ் தலைவர்களின் பிரச்சார மையப்புள்ளியாக தாராவி நிலம் அமைந்துள்ளது கவனிக்கத்தக்கது.

தேர்தல் பிரச்சார களத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளதாவது, “தாராவியில் சாமானிய மக்களுக்கு சொந்தமான, சிறு தொழில் நிறுவனங்களுக்கான, ரூ. 1 கோடி மதிப்பிலான நிலம், அதானிக்கு மோடி அவர்கள் மற்றும் அவரது அரசால் வழங்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மக்கள் இத்தகைய கொள்ளை நடவடிக்கைகளுக்கு எதிராக வாக்கு செலுத்துவர்.

மோடி அவர்கள் அதானிக்கு கடன் வழங்கியுள்ளார். சாமானிய மக்கள் தங்கள் பணத்தை வரவு வைக்கும் வங்கிகளிருந்தே அதானிக்கும் கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த பணத்தை பயன்படுத்தியே, அதானி சாமானிய மக்களின் சொத்துகளை விலைக்கு வாங்கி வருகிறார்.

மும்பைக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் வருகை தருகின்றனர். அவர்கள், நாட்டின் வளம் பெருக தங்கள் பங்களிப்பை அளிக்கின்றனர். அப்படியிருக்கையில், நாட்டின் வளம் பெருக மிகப்பெரியளவில் பங்களிப்பை வழங்குவது ஏழைகளும், சிறு தொழிலதிபர்களும், வணிகர்களும், தொழிலாளர்களும்தான், மோடி அவர்களின் முதலாளித்துவ தோழர்களிடமிருந்து இது கிடைப்பதில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

மகாராஷ்டிரத்தில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு முடிந்ததும், சனிக்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அன்றைய நாளில், ஜார்க்கண்ட்டில் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான ‘ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்கிரஸ் - ஆர்ஜேடி’ இணைந்துள்ள இந்தியா கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடிக்குமா அல்லது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றுமா என்பதற்கான விடை தெரிந்துவிடும்.

மணிப்பூர்: மேலும் 2 நாள்களுக்கு இணைய சேவை முடக்கம்!

மணிப்பூரில் வன்முறையால் இணையசேவை முடக்கப்பட்டுள்ள நிலையில், 7 மாவட்டங்களில் மேலும் 2 நாள்களுக்கு இணைய சேவை முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் பார்க்க

தில்லியில் காற்று மாசு எதிரொலி: விமான சேவை பாதிப்பு!

புதுதில்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. இதன் எதிரொலியாக, தில்லி விமான நிலையத்தில் விமான சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.தில்லியின் பெரும்பாலான இடங்களிலும், அடர்த்தியான புக... மேலும் பார்க்க

உ.பி.: மருத்துவமனை தீ விபத்து - மேலும் ஒரு குழந்தை உயிரிழப்பு!

உத்தரப் பிரதேசத்தின் ஜான்சியில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தின்போது மீட்கப்பட்ட ஒரு குழந்தை, சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளது.ஜான்சி அரசு மர... மேலும் பார்க்க

ஜார்க்கண்டிலும் புல்டோசர் அரசியல்! தேர்தல் பிரசாரம் நிறைவு!

ஜார்க்கண்ட் மாநில பேரவைத் தேர்தல் பிரசாரத்தில் பாஜகவினர் புல்டோசர் அரசியலை குறிப்பிட்டுப் பேசியுள்ளது இப்போது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.அண்மையில், குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான நபர... மேலும் பார்க்க

தங்கம் விலை 9% சரிவு! நிபுணர்கள் கூறுவது என்ன?

தங்கத்தின் விலை அதன் உச்சபட்ச விலையிலிருந்து 9 சதவீதம் சரிந்துள்ளது. தங்கத்தின் இந்த தொடர் விலைச்சரிவை நிபுணர்களும் ஆதரிக்கின்றனர். அமெரிக்காவில் அதிகரித்துவரும் பணவீக்கம் காரணமாக சர்வதேச சந்தையில் தங... மேலும் பார்க்க

இறந்ததாகக் கருதி இறுதிச் சடங்கு.. 5 நாள்களுக்குப் பின் திரும்பியவர்! அதிர்ச்சியில் குடும்பம்

அகமதாபாத்; குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே விஜபூரைச் சேர்ந்த பிரிஜேஷ் சுதர் இறந்துவிட்டதாக நினைத்து அவருக்கு இறுதிச் சடங்குகள் செய்த 5 நாள்களுக்குப் பின் அவர் உயிரோடு திரும்பியதால், குடும்பத்தினர் ஆனந... மேலும் பார்க்க