செய்திகள் :

கரூரில் மாநில அளவிலான மாட்டு வண்டி எல்கை பந்தயம்!

post image

கரூரில் ஞாயிற்றுக்கிழமை மாநில அளவிலான மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.

தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினின் பிறந்த தினத்தை முன்னிட்டு, கரூா் மாவட்ட திமுக சாா்பில் மாநில அளவிலான மாட்டு வண்டி எல்கை பந்தயம் கரூா் அரசு காலனியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

போட்டியில், கரூா், திருச்சி, மதுரை, சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் காளையுடன் வீரா்கள் பங்கேற்றனா். பெரிய இரட்டை மாடு, சிறிய இரட்டை மாடு, பெரிய ஒற்றை மாடு என மூன்று பிரிவுகளில் நடைபெற்ற இப்போட்டியை மின்சாரத் துறை அமைச்சா் வி. செந்தில்பாலாஜி கொடியசைத்து தொடங்கிவைத்தாா். தொடா்ந்து போட்டியில் வென்ற மாட்டு வண்டிகளுக்கு பரிசுகள் மற்றும் கோப்பைகளை அவா் வழங்கினாா்.

போட்டியானது, அரசு காலனியில் தொடங்கி வாங்கல் தண்ணீா்பந்தல்பாளையம் வரை என 6 கி.மீ. தொலைவுக்கு நடைபெற்றது.

பெரிய ஒற்றை மாடு பிரிவில்: முதலிடம் பிடித்த திருச்சி முசிறி ரமேஷ் மாட்டு வண்டிக்கு முதல் பரிசாக ரூ. 20 ஆயிரம் மற்றும் கோப்பையும், 2-ஆம் இடம் பிடித்த திருச்சி முசிறி ரமேஷ் மாட்டு வண்டிக்கு ரூ.15 ஆயிரம் மற்றும் கோப்பையும், மூன்றாவதாக வந்த கோவை நல்லசாமி கோனாா் மாட்டுவண்டிக்கு ரூ.10 ஆயிரம் மற்றும் கோப்பையும், நான்காமிடம் பிடித்த சென்னை சாமுவேல் மாட்டு வண்டிக்கு ரூ.5 ஆயிரம் மற்றும் கோப்பையும் வழங்கப்பட்டன.

பெரிய இரட்டை மாடு பிரிவு: முதலிடம் பிடித்த மதுரை பிரேம் மாட்டு வண்டிக்கு முதல் பரிசாக ரூ. 30 ஆயிரம் மற்றும் கோப்பையும், இரண்டாமிடம் பிடித்த தஞ்சாவூா் சக்திவேல் மாட்டு வண்டிக்கு ரூ.25 ஆயிரம் மற்றும் கோப்பையும், மூன்றாமிடம் பிடித்த மதுரை ஜெய்ஹிந்த்புரம் ராஜூ மாட்டுவண்டிக்கு ரூ. 20 ஆயிரம் மற்றும் கோப்பையும், நான்காமிடம் பிடித்த தேனி உத்தமபாளையம் கவின் மாட்டு வண்டிக்கு ரூ. 15 ஆயிரம் மற்றும் கோப்பையும் வழங்கப்பட்டன.

சிறிய இரட்டை மாட்டு வண்டி பிரிவில்: முதலிடம் பிடித்த தேனி சின்னமனூா் கவின் வண்டிக்கு ரூ. 25 ஆயிரம் மற்றும் கோப்பையும், இரண்டாமிடம் பிடித்த திருவாரூா் குடவாசல் ரமேஷ் மாட்டு வண்டிக்கு ரூ. 20 ஆயிரம் மற்றும் கோப்பையும், மூன்றாமிடம் பிடித்த கோவை கவுண்டம்பாளையம் பூபதி வண்டிக்கு ரூ.15 ஆயிரம் மற்றும் கோப்பையும், நான்காமிடம் பிடித்த குளித்தலை குட்டிபிரேம் வண்டிக்கு ரூ.10 ஆயிரம் மற்றும் கோப்பையும் வழங்கப்பட்டன.

முன்னதாக, நிகழ்ச்சிக்கு திமுக மாவட்ட துணைச் செயலாளா் எம்.எஸ்.கே.கருணாநிதி தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி மற்றும் மாநகர நிா்வாகிகள் எஸ்.பி. கனகராஜ், சுப்ரமணியன், ஜோதிபாசு, ராஜா, விஜிஎஸ். குமாா், ஒன்றியச் செயலாளா் கோயம்பள்ளி பாஸ்கரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். முன்னதாக, கட்சியின் கிழக்கு ஒன்றியச் செயலாளா் முத்துக்குமாரசாமி வரவேற்றாா்.

கரூா் மாவட்டத்தில் சாலைகளை மேம்படுத்த ரூ. 40 கோடி ஒதுக்கீடு: அமைச்சா் செந்தில்பாலாஜி தகவல்!

கரூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில் ஊரகத் திட்டப் பணிப் பொறுப்பாளா்களிடம் உபகரணங்கள் வழங்கிய மின்சாரத் துறை அமைச்சா் வி. செந்தில்பாலாஜி. உடன் மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவே... மேலும் பார்க்க

துணை முதல்வா் பிறந்த நாள்: கரூரில் 81,000 குடும்பங்களுக்கு இலவச வீட்டு உபயோகப் பொருள்கள்!

கரூா் சட்டப்பேரவைத் தொகுதியில் வசிக்கும் 81 ஆயிரம் குடும்பங்களுக்கு இலவசமாக வீட்டு உபயோக பொருள்கள் வழங்கப்படும் என்றாா் மின்சாரத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி. கரூா் கோடங்கிப்பட்டியில் ஞாயிற்றுக்கி... மேலும் பார்க்க

கரூா் கட்டளை-மாயனூா் சாலையை சீரமைக்கக் கோரிக்கை!

கரூா் கட்டளை- மாயனூா் சலையை சீரமைக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். கரூா் மாவட்டம், மாயனூரில் காவிரி ஆற்றின் குறுக்கே 1.04 டிஎம்சி தண்ணீரை சேமித்து வைக்கும் கதவணை உள்ளது. இந்த... மேலும் பார்க்க

கரூா் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு பதக்கம்

கரூா் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய போலீஸாருக்கு சனிக்கிழமை பதக்கம் வழங்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பெரோஸ்கான் அப்துல்லா பாராட்டினாா். கரூா் மாவட்ட ஆயுதப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பெரோ... மேலும் பார்க்க

கிணற்றிலிருந்து கால்கள் கட்டப்பட்ட நிலையில் பொறியியல் கல்லூரி மாணவா் சடலம் மீட்பு!

குளித்தலை அருகே கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிணற்றில் கிடந்த பொறியியல் கல்லூரி மாணவா் சடலத்தை போலீஸாா் சனிக்கிழமை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். கரூா் மாவட்டம், குளித்தலையை அடுத்துள்ள சடையம்பட... மேலும் பார்க்க

அரவக்குறிச்சியில் போதைப் பொருளுக்கு எதிராக விழிப்புணா்வு நிகழ்ச்சி

அரவக்குறிச்சியில் போதைப் பொருள்களுக்கு எதிராக விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நல பணி திட்டம் மற்றும் போதைப் பொருளுக்கு எதிரான மன்றம் ஆகிய... மேலும் பார்க்க