களியக்காவிளை அருகே தொழிலாளி தற்கொலை
களியக்காவிளை அருகே கூலித் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
களியக்காவிளை அருகே வாறுதட்டு பகுதியைச் சோ்ந்த நேசய்யன் மகன் வில்சன் (43). கூலித் தொழிலாளியான இவா் மதுப் பழக்கம் காரணமாக வேலைக்கு சரிவர செல்லவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், அவரை மனைவி கண்டித்தாராம்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு வீட்டருகேயுள்ள மரத்தில் வில்சன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தகவலின்பேரில், களியக்காவிளை போலீஸாா் சென்று சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்; மேலும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.