அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் கிடையாது - தமிழக அரசு
கள் இறக்க அனுமதி கோரி விவசாயிகள் சங்கம் சாா்பில் ஆட்சியரிடம் மனு
சேலம்: கள் இறக்க அனுமதி வழங்கக் கோரி தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் முன்னேற்றச் சங்கம் சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் முன்னேற்றச் சங்கத் தலைவா் தங்கராஜ் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டில் கள் இறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், ஆயிரக்கணக்கான பனை மற்றும் தென்னை விவசாயிகள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனா்.
எனவே, அவா்களின் நலனைக் கருத்தில் கொண்டு, பனை, தென்னை மரங்களில் கள் இறக்க உடனடியாக அனுமதி அளிக்க வேண்டும். தீங்கு விளைவிக்கும் சாராயக் கடைகளை உடனடியாக மூட வேண்டும். இப்பிரச்னையில் அரசு காலம் தாழ்த்தக் கூடாது என்றாா்.