கரூர்: ``தவெக பேரணி உயிரிழப்புகளுக்கு திமுக தான் காரணம்'' - அண்ணாமலை கூறுவது என்...
காஞ்சிபுரம் ஸ்ரீ மாரியம்மனுக்கு புதிய ரூபாய் நோட்டுக்களால் அலங்காரம்
நவராத்திரி விழாவையொட்டி காஞ்சிபுரம் ஸ்ரீ மாரியம்மனுக்கு புதிய ரூபாய் நோட்டுக்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன.
காஞ்சிபுரம் மாநகராட்சி 48 வது வார்டு பகுதி கணேஷ் நகரில் அமைந்துள்ளது தும்பவனம் மாரியம்மன் கோயில். நவராத்திரி விழாவையொட்டி இக்கோயிலில் தினசரி அம்மனுக்கு பல்வேறு அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
உலக நாடுகள் எதிர்த்தும் காஸா மீது தாக்குதலை தொடரும் இஸ்ரேல்! 38 பேர் பலி!
நவராத்திரி விழாவினையொட்டி சனிக்கிழமை காலையில் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றது.
மாலையில் மாரியம்மன் ரூ.10, ரூ.20, ரூ.50, ரூ.100, ரூ.200 புதிய ரூபாய் நோட்டுக்களால் மகாலட்சுமியாக அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இரவு சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றது. திரளான பக்தர்கள் மாரியம்மனை தரிசித்தனர்.