செய்திகள் :

கார்த்தி 29 படத்தில் வடிவேலு? ரசிகர்கள் மகிழ்ச்சி!

post image

நடிகர் கார்த்தியில் 29ஆவது படத்தில் பிரபல நடிகர் வடிவேலு இணைந்துள்ளதாக இணையத்தில் போஸ்டர் வைரலாகி வருகிறது.

நகைச்சுவை கதாபாத்திரங்கள் நடித்து பிரபலமான வடிவேலு தற்போது நாயகனாகவும் சிறப்புத் தோற்றங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.

கடைசியாக இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

பிறகு சந்திரமுகி 2 என்ற படத்தில் நடித்தார். இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. மாரீசன், கேங்கர்ஸ் படங்களில் நடித்து வருகிறார்.

நடிகர் கார்த்தியின் 29ஆவது படத்தை டாணாக்காரன் படத்தின் இயக்குநர் தமிழ் இயக்குகிறார். ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் இந்தப் படத்தை எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கிறார்.

இந்தப் படம் இந்தாண்டு (2025) வெளியாகுமென முன்னமே தெரிவிக்கப்பட்டது.

கடலில் ஒரு கப்பல் வருவது போன்ற போஸ்டர் கடந்தாண்டே வெளியாகியிருந்தது. அதே போல வடிவேலு, கார்த்தி இருக்கும் போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது. தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக இந்தப் போஸ்டரை இன்னும் வெளியிடவில்லை.

இதைப் பகிரும் கார்த்தி ரசிகர்கள், “அண்ணாவின் முதல் ரூ.200 கோடி படம் தயாராகிவிட்டது” எனக் கூறுகிறார்கள்.

விடாமுயற்சியில் இதை கவனித்தீர்களா?

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா நடிப்பில் விடாமுயற்சி திரைப்படம் பிப்.6 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.ஆக்சன் திரில்லர் கதையாக உருவான இதில் மாஸ் ஹீரோவாக காட்டிக்கொள்ளமால்... மேலும் பார்க்க

குட் பேட் அக்லிதான் ஒரே நம்பிக்கை... புலம்பும் அஜித் ரசிகர்கள்!

விடாமுயற்சி திரைப்படம் ஏமாற்றத்தை அளித்ததாக அஜித் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா நடிப்பில் விடாமுயற்சி திரைப்படம் பிப்.6 ஆம் தேதி உலகம் முழுவது... மேலும் பார்க்க

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் டிரைலர் தேதி!

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் டிரைலர் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.நடிகர் தனுஷ் இயக்கத்தில் இன்றைய இளைஞர்களின் காதலைப் பேசும் படமாக நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம் உருவாகியுள்ளது.இப்படத்தில... மேலும் பார்க்க

ராமம் ராகவம் புதிய வெளியீட்டுத் தேதி!

சமுத்திரக்கனி நடிப்பில் உருவான ராமம் ராகவம் திரைப்படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.நடிகர் சமுத்திரக்கனி கடந்த சில ஆண்டுகளாக தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில... மேலும் பார்க்க

ரெட்ரோ முதல் பாடல் எப்போது?

நடிகர் சூர்யா நடித்த ரெட்ரோ படத்தின் முதல் பாடல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.நடிகர் சூர்யா - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவான திரைப்படம் ரெட்ரோ.ஆக்சன் கலந்த காதல் கதையாக உருவாகியுள்ள இப்படத... மேலும் பார்க்க