செய்திகள் :

``கால் கிடைச்சதும் மறுபடி விளையாட ஆரம்பிச்சிடுவேன்..'' - தன்னம்பிக்கைப் பெண் சுபஜா

post image

சுபஜா, பலருக்கும் அறிமுகமான பெயர்தான். ஐந்து வருடங்களுக்கு முன்னால் 'மாற்றுத்திறனாளிகளுக்கான வீல் சேர் கூடைப்பந்து' விளையாட்டில் தேசிய அளவில் தேர்வானபோது விகடனிடம் பேசியிருந்தார். பெரும் போராட்டங்களின் இடையே தான் இந்தளவுக்கு முன்னேறியிருந்தார் சுபஜா. தற்போது சுபஜா எப்படியிருக்கிறார் என்பதை தெரிந்துகொள்வதற்காக அவருக்கு போன் செய்தோம். அவர் பேசியதை தெரிந்துகொள்வதற்கு முன்னால், சுபஜா பற்றி சில வரிகள்..

விபத்தில் ஏற்பட்ட இழப்பு..

சுபஜா பிறந்தது நாகர்கோவிலில். கைக்குழந்தையாக இருக்கும்போதே தந்தையை இழந்தார். பத்து வயதில் தாயையும் இழந்தார். சுபஜாவும் அவருடைய உடன் பிறந்தவர்களும் ஆதரவற்றோர் இல்லத்தில்தான் வளர்ந்தார்கள். சுபஜா பள்ளிப்படிப்பை முடிப்பதற்கு முன்னரே, அவருடைய அக்காக்கள் படிப்பை முடித்து திருமணமாகி சென்னையில் செட்டில் ஆகி விட்டார்கள். அவர்களைப் பார்ப்பதற்காக ரயிலைப் பிடிக்க வரும்போதுதான், சுபஜா கால் இடறி தண்டவாளத்தில் விழுந்துவிட்டார். கண் இமைக்கும் நேரத்தில் டிரெயின் அவருடைய இரண்டு கால்கள் மீதும் ஏறியிருக்கிறது.

subaja

வீல் சேர் கூடைப்பந்து..

ஆறு மாதம் கவர்ன்மென்ட் ஹாஸ்பிடல் வாசம். 'கால்களும் போச்சு; வாழ்க்கையும் போச்சு' என்று நொந்துபோய் வெளியே வந்தவரை கன்னியாஸ்திரீ ஒருவர், ஆதரவற்றோர் இல்லம் ஒன்றில் சேர்த்திருக்கிறார். அங்கே வந்த வெளிநாட்டுப்பெண்மணி ஒருவர் சுபஜாவுக்கு செயற்கைக்கால் பொருத்தவும், சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் பி.எஸ்ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கவும் உதவி செய்திருக்கிறார். அதன்பிறகு, தன் தோழியைப் பார்ப்பதற்காக சிவகங்கை சென்றவர், அந்த மாவட்டத்தின் கலெக்டர் ஆஃபீஸ் வாசலில் மனு எழுதிக்கொடுக்கும் வேலை பார்க்க ஆரம்பித்தார். தன்னைப்போலவே கால்கள் இல்லாத ஒருவர் வீல் சேர் கூடைப்பந்து விளையாடுவதை ஃபேஸ்புக்கில் பார்த்துவிட்டு, அவருடன் தொடர்பு கொண்ட சுபஜா தானும் அவர்போலவே விளையாட வேண்டும் என முடிவெடுத்தார். அதற்கான ஃபவுண்டேஷனில் இணைந்து பயிற்சி எடுத்து, விளையாடவும் ஆரம்பித்தார்.

செயற்கை கால்கள்..

வாழ்க்கையுடனும் கூடைப்பந்துடனும் போராடிக்கொண்டிருப்பவரிடம், 'எப்படியிருக்கீங்க சுபஜா' என்றோம். உலகத்தின் எல்லா கவலைகளையும் துவம்சம் செய்த தெம்புடன், ''நான் நல்லாயிருக்கேன். நீங்க எப்படியிருக்கீங்க'' என்று நலம் விசாரித்தவர், படபடவென பேச ஆரம்பித்தார். ''நான் முன்னாடி வெச்சிருந்த செயற்கை காலோட இப்போ விளையாட முடியலைக்கா. லேசா உடம்பு வெயிட் போட்டா உரசி உரசி ரத்தம் வர ஆரம்பிச்சிடுது. வலி தாங்க முடியாம கால்ல துப்பாட்டாவை சுத்திட்டு விளையாடினேன்.

சுபஜா

உடம்பு மெலிஞ்சிட்டா, காலை மாட்டவே முடியாது. தொள தொளன்னு கீழே விழுந்திடும். வேற வழியில்லாம அந்தக் கால்களை கழட்டி வெச்சிட்டேன். அதனால, மிச்சமிருந்த கால் வளைய ஆரம்பிச்சது. இந்தக் கால்களோட தன்னந்தனியா வெளியூர்களுக்குப் போறது, பஸ் ஏறுது, லக்கேஜ் தூக்கிட்டுப் போறது எல்லாம் ரொம்ப ரொம்ப கஷ்டமா இருக்கு. ஸ்போர்ட்ஸ் ஆக்ட்டிவிட்டீஸ்ல ஈடுபடுறதுக்கு ஏத்த மாதிரி நல்ல குவாலிட்டியான செயற்கை கால்கள் வாங்குறதுக்கு யாராவது ஹெல்ப் பண்ணுவாங்களான்னு தேடிக்கிட்டிருந்தப்போ தான், அந்த உதவி கிடைச்சிது'' என்றவர், அதுபற்றி விவரிக்க ஆரம்பித்தார்.

உதய் அண்ணா செய்த உதவி..

''நான் கூடைப்பந்து பிராக்டிஸ்காக சென்னை வர்றப்போ எல்லாம், ராயப்பேட்டையில இருக்கிற ஓர் ஆதரவற்றோர் இல்லத்துலதான் தங்குவேன். அந்த இல்லத்துக்கு அப்போ விளையாட்டுத்துறை அமைச்சரா இருந்த உதய் அண்ணா வந்திருந்தார். அவரோட பிறந்த நாளை எங்களோட கொண்டாடுறதுக்காக வந்தார். அப்போ, 'நான் தேசிய அளவுல வீல் சேர் கூடைப்பந்து விளையாடிருக்கேன். அதுல தமிழ்நாடு டீம் செகண்ட் ரன்னர் அப்'னு தெரிஞ்சதும் உதய் அண்ணா ரொம்ப சந்தோஷமாகிட்டார்.

சுபஜா

கோரிக்கை..

'உங்களுக்கு என்ன வேணும்மா'ன்னு கேட்டார். 'நல்லதா கால் வேணும்ணா'னு சொன்னேன். இதோ, அந்த செயற்கைக் கால்களை வாங்குறதுக்காக ஹைதராபாத் வந்திருக்கேன். அந்தக் காலை ஸ்குரூ போட்டு டைட் பண்ணிக்கலாம். விளையாட வசதியா இருக்கும். இன்னும் சில நாள்கள்ல கால் கிடைச்சதும் சென்னை வந்து முழுமூச்சா பிராக்டீஸ் எடுக்கப் போறேன். அடுத்த முறை எங்க தமிழ்நாடு டீம் தான் ஜெயிக்கப்போகுது'' என்று நம்பிக்கையுடன் பேசுபவர், தமிழக அரசிடம் ஒரு கோரிக்கையும் வைத்தார். ''வீல் சேர் கூடைப்பந்தாட்டம் ஆடுறவங்களுக்கு அரசாங்க வேலை கொடுக்கிறதில்லை. எங்களுக்கும் வேலை கொடுத்தா உதவியா இருக்கும்.''

வாழ்த்துகள் சுபஜா!

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

Ranji Trophy: பிரித்திவி ஷா மீது ஒழுங்கு நடவடிக்கை? மும்பை அணியிலிருந்து நீக்கப்பட்ட பின்னணி என்ன?

கடந்த அக்டோபர் 11 ஆம் தேதி முதல் ரஞ்சிக் கோப்பை தொடர் நடந்து வருகிறது. இந்தத் தொடருக்கான மும்பை அணியிலிருந்து பிரித்திவி ஷா இப்போது நீக்கப்பட்டிருக்கிறார். முறையாக பயிற்சிகளில் பங்கெடுத்துக் கொள்ளாமல்... மேலும் பார்க்க

Commonwealth Games: நீக்கப்பட்ட பிரபல விளையாட்டுகள்... பதக்க வாய்ப்புகளை இழக்கும் இந்தியா?

காமென்வெல்த் 2026 தொடரிலிருந்து கிரிக்கெட், ஹாக்கி, மல்யுத்தம், பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ் போன்ற போட்டிகள் நீக்கப்பட்டிருக்கிறது. இதனால் மற்ற நாடுகளை விட இந்தியாவே அதிக பாதிப்புகளை எதிர்கொள்ளும் சூழ... மேலும் பார்க்க

Ajith: ``ரேஸிங்தான் என்னை நிறைவாக உணரச் செய்கிறது!'' -அஜித்தின் நெகிழ்ச்சியும் வெளியான அப்டேட்டும்!

நடிகர் அஜித் மீண்டும் கார் ரேஸ் பந்தயங்களில் கலந்துகொள்ளப் போகிறார் எனும் தகவல் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியாகியிருந்தது. அஜித்தின் மேலாளார் சுரேஷ் சந்திராவும் அதை உறுதி செய்தார். இந்நிலையில் அ... மேலும் பார்க்க

Ind Vs Nz: 'திடீரென ஆட்டத்தை நிறுத்திய நடுவர்; அப்செட் ஆன ரோஹித்; என்ன நடந்தது?

இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு 107 ரன்களை டார்கெட்டாக நிர்ணயித்திருக்கும் நிலையில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை வி... மேலும் பார்க்க

Sarfaraz Khan: 'வாய்ப்புங்றது தேவதை மாதிரி..!' - பெங்களூருவில் சாதித்த சர்ப்ராஸூம் பின்னணியும்!

`வாய்ப்புங்றது தேவதை மாதிரி, அது கிடைக்கிறப்ப மதிச்சு ஏத்துக்கனும். இல்லைன்னா எப்பவுமே அது திரும்ப கிடைக்காது.’ சர்ப்ராஸ் கானின் கரியரை இந்த வரிகளுக்குள் அடக்கிவிடலாம். அவருக்கான வாய்ப்புகள் அவருக்கு ... மேலும் பார்க்க

Ind Vs Nz : 'இந்தியாவை எதிர்கொள்ள ரச்சினுக்கு உதவிய சிஎஸ்கே' - என்ன நடந்தது?

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்ஸில் இந்தியா 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன நிலையில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 358 ர... மேலும் பார்க்க