செய்திகள் :

காஸா: இஸ்ரேல் தாக்குதலால் 42800 பாலஸ்தீனர்கள் பலி!

post image

காஸா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 38 பேர் பலியாகினர்.

காஸாவின் கான் யூனிஸ் பகுதியில், வெள்ளிக்கிழமையில் (அக். 25) இஸ்ரேல் ராணுவம் டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 14 பேர் குழந்தைகள் உள்பட 38 பாலஸ்தீனர்கள் பலியாகினர். அவர்களில் 13 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது.

டிரோன் தாக்குதலில் பலியாகும் மக்களில், பெரும்பாலும் உணவுக்காக வெளியில் நடமாடுபவர்கள்தான் பாதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

மேலும், லெபனானில் ஒரு விடுதி மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 3 பத்திரிகையாளர்களும் பலியாகினர். அந்த நேரத்தில், விடுதியில் பல்வேறு செய்தி நிறுவனங்களைச் சேர்ந்த 18 பத்திரிகையாளர்கள் தங்கியிருந்துள்ளனர். இது திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட படுகொலை என காஸா செய்தி நிறுவனங்கள் இஸ்ரேலை குற்றம் சாட்டி வருகின்றன.

இதையும் படிக்க:கூன் போடுவது மூளையைக் கொல்லும்.. பிரையன் ஜான்சன் பகிர்ந்த உண்மைச் சம்பவம்

இந்த நிலையில், இதற்கு தீர்வு காணும் நோக்கில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சரான ஆண்டனி பிளிங்கனை ஜோர்டான் நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் அய்மன் சஃபாதி சந்தித்து பேசினார்.

காஸாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான போரில் காஸா மீதான இஸ்ரேல் தாக்குதலில், இதுவரையில் 17,000 குழந்தைகள், 11,400 பெண்கள் உள்பட 42,800 பாலஸ்தீனர்கள் பலியாகியுள்ளனர். மேலும், இந்த தாக்குதலில் சுமார் 1000 சுகாதாரப் பணியாளர்களும், 220 ஐ.நா. அவையைச் சேர்ந்த 220 பேரும் பலியாகியுள்ளனர்.

கூன் போடுவது மூளையைக் கொல்லும்.. பிரையன் ஜான்சன் பகிர்ந்த உண்மைச் சம்பவம்

மென்பொருள் துறையில் முன்னணியில் உள்ள கோடீஸ்வரர்களில் ஒருவரான பிரையன் ஜான்சன் (46), கூன் போடுவதைத் தவிர்த்து, தனது உடல் அமைப்பை மாற்றியதன் மூலம், தான் சந்திக்கவிருந்த மிகப்பெரிய ஆபத்திலிருந்து தப்பியதன... மேலும் பார்க்க

கமலா ஹாரிஸ் Vs டிரம்ப்! அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி யாருக்கு?

அமெரிக்காவில் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், வரும் நவம்பர், 5 ஆம் தேதியில் நடைபெறவுள்ளது. நாட்டின் 60 ஆவது அமெரிக்க அதிபருக்கான இந்தத் தேர்தலில் ஜனநாயகக் கட்சிக்கும் குடியரசு கட்சிக்கும்த... மேலும் பார்க்க

அமெரிக்க அதிபர் தேர்தல்: கருத்துக் கணிப்பில் டிரம்ப் முன்னிலை!

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான கருத்துக் கணிப்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸைவிட முன்னாள் அதிபர் டிரம்புக்கு வெற்றி பெறுவதற்கான அதிக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்க அதிபர் தேர்தல் வர... மேலும் பார்க்க

கனடா பிரதமர் பதவி விலக எம்பிக்கள் கெடு!

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகுவதற்கு சொந்த கட்சி எம்பிக்கள் கெடு விதித்துள்ளனர்.ஆனால், லிபரல் கட்சியை அடுத்த தேர்தலிலும் வழிநடத்தவுள்ளதாக ஜஸ்டின் ட்ரூடோ வியாழக்கிழமை தெரிவித்துள்ளது எம்பிக்களி... மேலும் பார்க்க

இந்திய உளவுத் துறை எச்சரிக்கை எதிரொலி: இலங்கையில் இஸ்ரேலியர்களை தாக்க திட்டமிட்டவர்கள் கைது

இஸ்ரேலியா்களுக்கு எதிராக பயங்கரவாதத் தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியதாக இருவரை இலங்கை போலீஸாா் கைது செய்துள்ளனா்.இந்திய உளவுத் துறை அளித்த தகவலின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இது க... மேலும் பார்க்க

இஸ்ரேல் தாக்குதலில் 3 லெபனான் ராணுவத்தினா் உயிரிழப்பு

தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் அந்த நாட்டு ராணுவ வீரா்கள் மூன்று போ் உயிரிழந்தனா்.இது குறித்து லெபனான் ராணுவம் புதன்கிழமை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:தெற்குப் ... மேலும் பார்க்க