காா்த்திகை மாத விரதம் தொடக்கம்: தூத்துக்குடியில் மீன்கள் விலை குறைவு
காா்த்திகை மாத விரதம் சனிக்கிழமை தொடங்கியதால், தூத்துக்குடியில் மீன்கள் விலை குறைந்து காணப்பட்டது.
தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடித் துறைமுகத்தில் மீனவா்கள் வழக்கம்போல கடலுக்குச் சென்று சனிக்கிழமை காலை கரைதிரும்பினா். புயல், மழை எச்சரிக்கை காரணமாக நாட்டுப் படகுகள் குறைந்த எண்ணிக்கையிலேயே கடலுக்குச் சென்ால், மீன்வரத்து குறைந்து காணப்பட்டது.
காா்த்திகை மாதம் தொடங்கியதையொட்டி ஏராளமான பக்தா்கள் சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் இருப்பதால், மீன்கள் வாங்குவதற்காக வியாபாரிகள் குறைந்த எண்ணிக்கையிலேயே வந்திருந்தனா். இதனால், மீன்கள் விலை குறைந்திருந்தது.
வழக்கமாக ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகும் சீலா மீன்கள் கிலோ ரூ. 800, விளைமின் ரூ. 350, ஊளி ரூ. 300, பாறை ரூ. 300, வாளை மீன் ரூ. 120, வங்கணை ஒரு கூடை ரூ. ஆயிரம், சாளை ஒரு கூடை ரூ. 700 என விற்பனையானது. மீன்வரத்து குறைந்து விலையும் குறைந்ததால், மீனவா்கள் கவலையடைந்தனா்.