செய்திகள் :

குஜராத் பேரவையில் மோதல்: பாலியல் வழக்கில் பாஜக எம்எல்ஏவை கைது செய்ய காங்கிரஸ் கோரிக்கை

post image

குஜராத்தில் பாஜக எம்.எல்.ஏ. மீதான பாலியல் வழக்கில் அவரை கைது செய்யுமாறு, அம்மாநில அரசுக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்தார்.

குஜராத் சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்போது, பெண்கள் பாதுகாப்பு குறித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜிக்னேஷ் மேவானி கேள்வி எழுப்பினார்.

சட்டப்பேரவையில் மேவானி கூறியதாவது ``2020 ஆம் ஆண்டில், பஞ்ச்மஹால் மாவட்டத்தில் பட்டியலினச் சிறுமிக்கு இழைக்கப்பட்ட கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் பாஜக எம்.எல்.ஏ. கஜேந்திரசின் பர்மர், மார்ச் 27 ஆம் தேதியில் சட்டப்பேரவைக் கூட்டம் நிறைவடைவதற்குள் கைது செய்யப்பட வேண்டும். பாலியல் வன்கொடுமை குற்றவாளி, எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும், மாநில அரசு அவரை ஏன் கைது செய்யவில்லை?

பர்மர் மீது முதல் தகவல் அறிக்கை சமர்ப்பித்தபோது, காவல் நிலையத்துக்குள் நுழைந்த சிலர், முதல் தகவல் அறிக்கை புத்தகத்தில் இருந்து பர்மர் மீதான தகவல் அறிக்கையைக் கிழித்தெறிந்தனர். காவல்துறையினரும் இதற்கு உடந்தையாக இருந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து, பட்டியலினத் தலைவர் வால்ஜிபாய் படேல் கேள்வியெழுப்பிய பின்னர்தான், விசாரணை நடத்தப்பட்டது. குஜராத்தில் பெண்கள் இப்படித்தான் மதிக்கப்படுகின்றனர்’’ என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க:அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பாஜக பங்கேற்காது: அண்ணாமலை

குஜாராத் மாநிலம் காந்திநகரில் 2020, ஜூலை 30 ஆம் தேதியில் பட்டியலினச் சிறுமி ஒருவரை, பர்மர் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி, வீட்டுக்கு அழைத்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததுடன், அவரை பர்மர் திருமணம் செய்துகொள்ள மறுத்ததாகவும் புகாரில் கூறியுள்ளனர். தொடர்ந்து, சிறுமியுடனான தொடர்பைப் புறக்கணித்ததுடன், சிறுமிக்கு பர்மர் கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.

இந்த விவகாரம் குஜராத் உயர்நீதிமன்றம் வரையில் சென்றதையடுத்து, கடந்த ஆண்டில்தான் பர்மர் மீது பாலியல் வழக்கு மற்றும் பட்டியலின வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை: ஒரே நாளில் 290 பேர் கைது, 232 வழக்குகள் பதிவு!

பஞ்சாபில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் ஒரே நாளில் 290 பேர் கைது செய்யப்பட்டு 232 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தை மூன்று மாத காலத்திற்குள் போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்றவ... மேலும் பார்க்க

மத்தியப் பிரதேசம்: புலியிடம் இருந்து உரிமையாளரை காப்பாற்றிய வளர்ப்பு நாய்

மத்தியப் பிரதேசத்தில் புலியிடம் இருந்து உரிமையாளரை காப்பாற்றி, தனது உயிரை வளர்ப்பு நாய் ஒன்று தியாகம் செய்துள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் உமாரியா மாவட்டத்தில் உள்ள பாந்தவ்கர் புலிகள் காப்பகம் அருகே ச... மேலும் பார்க்க

நடப்பாண்டில் ஜிஎஸ்டி வருவாய் 11% அதிகரிக்கும்!

நடப்பாண்டில் ஜிஎஸ்டி வரி வருவாய் அதிகரிக்கலாம் என்று மத்திய அரசு கணித்துள்ளது.கடந்த பிப்ரவரி மாதத்தில் ஜிஎஸ்டி வரி வசூல் 9.1 சதவிகிதம் அதிகரித்ததாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்தாண்டு இதே... மேலும் பார்க்க

உத்தரகண்ட் பனிச்சரிவில் சிக்கிய 50 பேர் மீட்பு: 4 பேர் பலி!

உத்தரகண்ட் பனிச் சரிவில் சிக்கிய 55 பேரில் 50 தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், 4 பேர் பலியானதாக இந்திய - திபெத் எல்லை காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.பனிச் சரிவில் சிக்கிய 55 பேரில் 50 பேர் காய... மேலும் பார்க்க

வாட்ஸ்ஆப்பில் கைத்தவறி அழைப்பு செல்வதைத் தடுக்கும் வசதி

செல்போனில் அரட்டை அடிக்க, பேச என பல வசதிகள் ஏற்படுத்திக்கொண்டே செல்லும் செயலிகளில் முதலிடம் வாட்ஸ்ஆப்-க்குத்தான்.வாட்ஸ்ஆப்பில் பயனர்கள் சந்திக்கும் சிக்கல்கள், பிரச்னைகள் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்... மேலும் பார்க்க

இந்தியா: மொபைல் போன் ஏற்றுமதி 40% அதிகரிக்க வாய்ப்பு

இந்தியாவில் மொபைல் போன்களின் ஏற்றுமதி அதிகரித்து வருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.உலகளவில் அதிக மக்கள்தொகையில் முதலிடம் கொண்டுள்ள இந்தியாவில் மொபைல் போன்களின் தேவை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அத... மேலும் பார்க்க