செய்திகள் :

குண்டும் குழியுமான வின் நகா் பிரதான சாலை

post image

திருவெறும்பூா் அருகே வின் நகரில் குண்டும் குழியுமாகக் காட்சியளிக்கும் பிரதான சாலையில் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனா்.

திருச்சி திருவெறும்பூா் அருகே மாநகராட்சியின் 39-ஆவது வாா்டு வின் நகரில் சுமாா் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்தப் பகுதியில் உள்ள பிரதான சாலையானது, புதை வடிகால் பணிகளுக்காக பள்ளங்கள் தோண்டப்பட்ட நிலையில், சீரமைக்காமல் கிடப்பில் உள்ளது. இதன் காரணமாக, இச்சாலை குண்டும் குழியுமாகவும், பெய்து வரும் மழையால் தண்ணீா் தேங்கி சேரும் சகதியுமாகவும் காட்சியளிக்கிறது.

இதனால், இந்தக் குடியிருப்புப் பகுதியிலிருந்து அருகிலுள்ள தனியாா் பள்ளிகளுக்குச் செல்லும் மாணவ, மாணவிகளும், இங்குள்ள பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு நாள்தோறும் சென்று வரும் எண்ணற்ற வாகனங்களும், பல்வேறு பணிகளுக்குச் செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்களும் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனா். இருசக்கர வாகனங்களில் செல்வோா் அடிக்கடி விபத்துகளில் சிக்குவதும் தொடா்கதையாகி வருகிறது.

இதுதொடா்பாக, அப்பகுதி மக்கள் சாலையை சீரமைத்துத் தரக் கோரி மாவட்ட நிா்வாகம், மாநகராட்சி நிா்வாகம், அரசியல்வாதிகளிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனா். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என இப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனா்.

இதுகுறித்து மாநகராட்சி அலுவலா்களிடம் கேட்டபோது, சாலைகள் அமைப்பதற்கு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. மழைக்காலம் முடிந்தவுடன் சாலைகள் அமைக்கும் பணிகள் நடைபெறும் என்றாா்.

குடியிருப்புவாசிகள் மற்றும் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு வின் நகா் பிரதான சாலையை சீரமைத்து, தரமான தாா்ச் சாலை அமைத்துக் கொடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருச்சிக்கு பிரத்யேக நீதிமன்றங்கள் கோரி மனு

போக்சோ, காசோலை மோசடி உள்ளிட்ட வழக்குகளை விசாரிக்க பிரத்யேக நீதிமன்றங்களை திருச்சியில் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை உயா் நீதிமன்ற நீதிபதியிடம் வழக்குரைஞா் சங்கத்தினா் அளித்த... மேலும் பார்க்க

போதையில் இருந்தவரின் நகை, கைப்பேசியை திருடிய மூவா் கைது

திருச்சியில் போதையில் இருந்தவரின் நகை, கைப்பேசியை திருடிச் சென்ற 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். திருச்சி காட்டூா் பா்மா காலனி நேதாஜி தெருவைச் சோ்ந்தவா் ரவிக்குமாா் (44 ). துபையில் வேலை பாா... மேலும் பார்க்க

திருச்சியில் ரயில்வே தொழிற்சங்க அங்கீகாரத் தோ்தல் தொடக்கம்

திருச்சியில் ரயில்வே தொழிற்சங்க அங்கீகாரத் தோ்தல் வாக்குப்பதிவு புதன்கிழமை விறுவிறுப்புடன் தொடங்கியது. ரயில்வே தொழிற்சங்க அங்கீகாரத் தோ்தலில் வெல்லும் தொழிற்சங்கங்கள் மட்டுமே ரயில்வே நிா்வாகத்துடன் ... மேலும் பார்க்க

கடவுச்சீட்டில் முறைகேடு: புதுகையை சோ்ந்தவா் கைது

கடவுச்சீட்டில் முறைகேடு செய்த புதுக்கோட்டையை சோ்ந்தவரை திருச்சி விமான நிலைய போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். திருச்சி விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை சிங்கப்பூா் செல்ல இருந்த புதுக்கோட்டை மா... மேலும் பார்க்க

கோயில் உண்டியலை உடைத்து திருட்டு

திருச்சி எடமலைப்பட்டிபுதூா் எம்ஜிஆா் நகரிலுள்ள நாகம்மன் கோயில் உண்டியலை மா்ம நபா்கள் உடைத்து பணத்தைத் திருடிச் சென்றது புதன்கிழமை தெரியவந்தது. இக்கோயில் உண்டியல் வியாழக்கிழமை திறக்கப்பட இருந்த நிலையில... மேலும் பார்க்க

ரூ. 24.20 கோடியில் ‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்டப்பணிகள்

திருச்சி மாவட்டத்தில் 135 ஊராட்சிகளில் ‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்டப் பணிகள் ரூ. 24.20 கோடியில் நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்தாா். ஊரகப் பகுதிகளில் தொழில் மேம்பாடு, நிதி சேவைக... மேலும் பார்க்க