யுபிஎஸ்சி தேர்வு: தமிழகத்தில் 57 பேர் தேர்வு; சிவச்சந்திரன் முதலிடம்
குற்றவாளிகள் தப்பிக்க முடியாது: பிரதமர் கண்டனம்!
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜம்மு - காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலுக்கு கடுமையான கண்டனங்களைத் தெரிவித்ததுடன், இந்தத் தாக்குதலுக்கு காரணமானவர்கள் நீதியின் முன்னிலையில் நிறுத்தப்படுவார்கள் எனக் கூறியுள்ளார்.
மேலும், அந்தக் குற்றவாளிகள் நிச்சயமாகத் தப்பிக்க முடியாது என உறுதியளித்துள்ள அவர், பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான நமது நம்பிக்கையை யாராலும் அசைக்க முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார்.
இத்துடன், தாக்குதலில் தங்களது குடும்ப உறுப்பினரை இழந்தவர்களுக்கு தனது இரங்கலைப் பகிர்ந்துகொண்ட பிரதமர் மோடி படுகாயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காம் எனும் சுற்றுலாத் தளத்தில் கூடியிருந்த மக்கள் மீது இன்று (ஏப்.22) அடையாளம் தெரியாத தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானதுடன், 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க:ஜம்மு-காஷ்மீர் புறப்பட்டார் அமித் ஷா!