கனமழை எதிரொலி: எங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை?
கேப்டன்சி பதவியல்ல, பொறுப்பு..! பும்ரா பேட்டி!
இந்திய அணி நியூசிலாந்துடன் சொந்த மண்ணில் 0-3 என வரலாற்று தோல்வியை சந்தித்தது. இதனையடுத்து ஆஸி. உடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இந்திய அணி ஆஸ்திரேலியா வந்துள்ளது.
நாளை (நவ.22) நடைபெறவுள்ள முதல் டெஸ்ட்டுக்கு இந்தியாவின் கேப்டனாக ஜஸ்ப்ரீத் பும்ரா செயல்படவிருக்கிறார்.
பார்டர் - கவாஸ்கர் தொடரில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியிருந்தாலும் தற்போது ஆஸி. அணி தொடர் வெற்றியினால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறது.
ரோஹித் சர்மா மனைவிக்கு குழந்தை பிறந்துள்ளதால் அவர் இந்தியாவில் இருக்கிறார். இது குறித்து பும்ரா பேசியதாவது:
கேப்டன்சி பதவியல்ல, பொறுப்பு
கேப்டன்சியை (தலைமைப் பொறுப்பு) நான் ஒரு பதவியாக பார்க்கவில்லை. அதை ஒரு பொறுப்பாகவே பார்க்கிறேன். நான் குழந்தையாக இருந்த போதிலிருந்தே எனக்கு கடினமான வேலைகளைச் செய்ய பிடிக்கும். சவால்களை சந்திப்பது மிகவும் பிடிக்கும்.
இது முதல் டெஸ்ட் போட்டி வரைக்கும்தான். ரோஹித் சர்மா எங்களது கேப்டன். அவர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இப்போதைக்கு ஒரு போட்டி. நாளை என்ன நடக்கும் என்பது தெரியாது.
தற்போது நான் நிகழ்காலத்தில் இருக்கிறேன். நான் இதற்கு முன்பாக கேப்டனாக இருந்திருக்கிறேன். அதன் மகிழ்ச்சியை அனுபவித்திருக்கிறேன். நான் எனது சிறந்த செயல்பாடுகளை எப்படி அணிக்கு வழங்குவது குறித்து சிந்தித்து வருகிறேன். வருங்காலத்தை என்னால் கட்டுப்படுத்த முடியாது.
நாம் யாரையும் காப்பியடிக்க முடியாது. நாம் சொந்தமாக நமது வழியை கண்டுபிடிக்க வேண்டும். விராட், ரோஹித் வெற்றிகரமாக இருந்துள்ளார்கள். மாறுபட்ட அணுகுமுறைகள் கொண்டவர்கள்.
உள்ளுணர்வை நம்புகிறேன்
நான் எனது பந்துவீச்சில்கூட எனது உள்ளுணர்வை நம்பித்தான் செல்வேன். அப்படித்தான் இதுவரை கிரிக்கெட் விளையாடி இருக்கிறேன்.
எனது உள்ளுணர்வு மீது மிகுந்த நம்பிக்கை இருக்கிறது. வேகப்பந்து வீச்சாளர்கள் கேப்டானாக இருக்கும்போது புத்திசாலிதனமாக சிந்திப்பார்கள். அப்படித்தான் பாட் கம்மின்ஸ் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
தேவைப்படும்போது நான் பந்துவீசுவேன். கேப்டனாக இருக்கும்போது அதை ஒரு சாதகமாகவே பார்க்கிறேன். எதிர்மறையைவிட நேர்மறையான விஷயங்கள் அதிகமாக இருக்கின்றன.
மூத்த வீர்ராக இருக்கும்போது இளம் வீரர்களுக்கு தகவலை பரிமாற முயற்சிப்பேன். நமது நாட்டை வழிநடத்துவதைவிட மிகப்பெரிய கௌரவம் வேறெதுவுமில்லை.
எனக்கு எப்போதும் பிடித்தமானது டெஸ்ட் கிரிக்கெட். சிலர் மட்டுமே இந்தப் போட்டிகளை விளையாடுகிறார்கள். அதிலும் கேப்டனாக விளையாடுவது சிலர் மட்டுமே. இந்த நிலைமையில் இருப்பதற்கு சிறப்புரிமையாகவே கருதுகிறேன் என்றார்.