செய்திகள் :

கேரளா: கழுத்தில் QR Code; ஆன்லைனில் மொய்ப்பணம்; மகளின் திருமணத்தில் வைரலான தந்தை; பின்னணி என்ன?

post image

டிஜிட்டல் பரிவர்த்தனை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இப்போது திருமணத்தில் மொய்ப்பணம் வாங்கக்கூட டிஜிட்டல் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

கேரளாவில் ஒருவர் தனது மகளின் திருமணத்தில் மொய்ப்பணத்தை வாங்க க்யூஆர் கோடு பயன்படுத்திய விதம் அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கும் விதமாக இருந்தது.

திருமணம் என்றாலே உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஒன்று கூடுவது வழக்கம். இத்திருமணத்திற்கு வருபவர்கள் மொய்ப்பணம் அல்லது கிப்ட் கவர் கொடுப்பது வழக்கம். இவற்றை வாங்குவதற்காக திருமணம் நடைபெறும் இடங்களில் ரிடர்ன் கிப்ட்டுடன் நோட்டு வைத்துக்கொண்டு ஒருவர் அமர்ந்துவிடுவார்.

ஆனால் இப்போது அதிகமான திருமணங்களில் மொய்ப்பணம் வாங்கும் இடங்களில் க்யூஆர் கோடும் வைக்கப்பட்டு இருக்கிறது. கேரளாவில் குஞ்சன குட்டி என்பவர் தனது மகளின் திருமணத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்.

குஞ்சன குட்டி
குஞ்சன குட்டி

அவர் தனது சட்டையில் க்யூஆர் கோடை தொங்க விட்ட படி திருமணத்திற்கு வந்தவர்களை வரவேற்பதும், அவர்களை உபசரிப்பதுமாக இருந்தார். சட்டையில் மெடல் தொங்குவது போன்று க்யூஆர் கோடு தொங்கிக்கொண்டிருந்தது.

அவரது சட்டையில் தொங்கிய க்யூஆர் கோடை உறவினர்கள், விருந்தினர்கள் தங்களது மொபைலில் ஸ்கேன் செய்து பணம் அனுப்பிய வண்ணம் இருந்தனர்.

இந்தக் காட்சி சமூக வலைத்தளப் பக்கத்தில் வைரலாகி இருக்கிறது. அதனைப் பார்த்த நெட்டிசன்கள் இனி கவரில் ரூ.100 கொடுக்க முடியாது என்று தெரிவித்துள்ளனர்.

மற்றொருவர் வெளியிட்டுள்ள பதிவில், இச்செயலை விமர்சித்திருக்கிறார்.

இந்தியாவில் நவம்பர் ஒன்றாம் தேதியில் இருந்து டிசம்பர் 14ம் தேதி வரை 46 லட்சம் திருமணம் நடைபெறும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் ரூ.6.5 லட்சம் கோடி அளவுக்கு வர்த்தகம் நடைபெறும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் கடந்த 3 ஆண்டில் திருமணத்திற்குச் செய்யப்படும் செலவுகளின் அளவு கணிசமாக அதிகரித்து வருகிறது.

மகாராஷ்டிரா: ``எத்தனை முறைதான் விவசாயக் கடன்களை அரசு தள்ளுபடி செய்யும்?'' - அஜித்பவார் எரிச்சல்

விவசாயிகள் கடனை தள்ளுபடிநாட்டிலேயே மகாராஷ்டிராவில்தான் அதிக அளவில் ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகள் தற்கொலை செய்து வருகின்றனர். எந்த புதிய அரசு பதவியேற்றாலும், விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய தயங்குவதில்லை. ... மேலும் பார்க்க

சென்னை: பாரம்பர்ய உடை அணிந்து 'தமிழ்நாடு தினம்' கொண்டாடிய கல்லூரி மாணவிகள் | Photo Album

தமிழ்நாடு நாள் எது? ஏன் இந்தச் சர்ச்சை? மாநில உரிமைகளைப் பாதுகாப்பது எப்படி? மேலும் பார்க்க

சென்னை ஓபன் மகளிர் சர்வதேச டென்னிஸ் போட்டி; அசத்திய வீராங்கனைகள் | Photo Album

சென்னை ஓபன் மகளிர் சர்வதேச டென்னிஸ் போட்டிசென்னை ஓபன் மகளிர் சர்வதேச டென்னிஸ் போட்டிசென்னை ஓபன் மகளிர் சர்வதேச டென்னிஸ் போட்டிசென்னை ஓபன் மகளிர் சர்வதேச டென்னிஸ் போட்டிசென்னை ஓபன் மகளிர் சர்வதேச டென்ன... மேலும் பார்க்க

ஒரு வருடமாக Sick Leaveல் இருந்த அரசு பள்ளி ஆசிரியை; சமையல் நிகழ்ச்சியில் 2.7 லட்சம் வென்றது எப்படி?

ஜெர்மனியில் ஒரு விசித்திரமான சம்பவம் நடைபெற்றுள்ளது. நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி ஒரு அரசு பள்ளி ஆசிரியை விடுப்பு எடுத்திருக்கிறார். அதே நேரத்தில் தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்... மேலும் பார்க்க

உலகில் முதல் முறை! - ஸ்பெயின் காடுகளில் தென்பட்ட வெள்ளை நிற சிவிங்கி பூனை - ஆர்வலர்கள் ஆச்சரியம்

ஸ்பெயினில் புகைப்படக் கலைஞர் ஒருவரின் கேமராவில் சிக்கிய அரிய வகை வெள்ளை ஐபீரியன் லின்க்ஸின் புகைப்படம் (சிவிங்கி பூனை) , உலகெங்கிலும் உள்ள விலங்கு ஆர்வலர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.ஸ்பெயினில் உல... மேலும் பார்க்க

காலணிகளைக் கழற்றி, சிறப்புப் பூஜை, லண்டன் இந்து கோயிலில் வழிபட்ட பிரிட்டன் மன்னர் சார்லஸ்

பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் ராணி கமிலா, லண்டனில் உள்ள புகழ்பெற்ற பிஏபிஎஸ் ஸ்ரீ சுவாமிநாராயண் கோயிலுக்கு நேற்று வருகை தந்து, அங்கு நடைபெற்ற 30ஆம் ஆண்டு விழாவில் பங்கேற்று சிறப்பு வழிபாடு ... மேலும் பார்க்க