செய்திகள் :

கோவை, மங்களூருக்கு தீபாவளி சிறப்பு ரயில்கள்: காலை 8 மணிக்கு முன்பதிவு தொடக்கம்

post image

நன்றி: தினமணிஇணையதளம்.

தீபாவளிக்கு சென்னையில் இருந்து கோவை, மங்களூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

இது குறித்து தெற்கு ரயில்வே புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்தி: சென்னை சென்ட்ரலில் இருந்து போத்தனூருக்கு அக். 29, நவ. 2 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் (எண் 06021) இயக்கப்படும். சென்ட்ரலில் இரவு 7 மணிக்கு புறப்படும் ரயில், மறுநாள் அதிகாலை 3.15 மணிக்கு போத்தனூா் சென்றடையும்.

மறுமாா்க்கமாக கோவையில் இருந்து அக். 30, நவ. 3 ஆகிய தேதிகளில் நள்ளிரவு 12.15 மணிக்கு புறப்படும் ரயில் காலை 9.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.

இந்த ரயில் பெரம்பூா், திருவள்ளூா், அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், கோவை வழியாக இயக்கப்படும்.

கேரள மாநிலம் மங்களூரில் இருந்து அக். 29-ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 06047) மறுநாள் காலை 10.45 மணிக்கு சென்னை எழும்பூா் வந்தடையும்.

மறுமாா்க்கமாக சென்னை எழும்பூரில் இருந்து அக். 30-ஆம் தேதி பகல் 12.30 மணிக்கு புறப்படும் ரயில் (எண் 06048) மறுநாள் அதிகாலை 5.15 மணிக்கு மங்களூரு சென்றடையும்.

இந்த ரயில் காசா்கோடு, கண்ணூா், கோழிக்கோடு, ஷோரனூா், பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூா், பெரம்பூா் வழியாக இயக்கப்படும்.

இந்த ரயில்களுக்கான முன்பதிவு வியாழக்கிழமை (அக். 24) காலை 8 மணிக்கு தொடங்கும்.

திருநெல்வேலியிலிருந்து...: தீபாவளி முடிந்து சென்னை திரும்புவோருக்கு வசதியாக திருநெல்வேலியில் இருந்து தாம்பரத்துக்கு நவ. 3-ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படும்.

திருநெல்வேலியில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்படும் ரயில் (எண் 06003) மறுநாள் அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

மறுமாா்க்கமாக தாம்பரத்தில் இருந்து நவ. 4-ஆம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 06004) மறுநாள் அதிகாலை 5.15 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.

இந்த ரயில் சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், கீழக்கடையம், பாவூா்சத்திரம், தென்காசி, கடையநல்லூா், சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூா், சிவகாசி, விருதுநகா், திருமங்கலம், மதுரை, சோழவந்தான், கொடைரோடு, திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூா், விருத்தாசலம், விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூா், செங்கல்பட்டு வழியாக இயக்கப்படும். இந்த ரயிலுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படுக்கை வசதிகளுடன் கூடிய வந்தே பாரத் ரயில் ஜனவரியில் இயக்க திட்டம் -ஐசிஎஃப் பொது மேலாளா் தகவல்

நாட்டிலேயே முதல் முறையாக படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயிலின் சோதனை வரும் ஜனவரி மாதத்துக்குள் முடிக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படும் என ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலை (ஐச... மேலும் பார்க்க

தமிழகத்தில் 6,585 பட்டாசு கடைகளுக்கு அனுமதி

தீபாவளியையொட்டி, தமிழகத்தில் 6,585 தற்காலிக பட்டாசுக் கடைகளைத் திறப்பதற்கு தீயணைப்புத் துறை அனுமதி அளித்துள்ளது. தீபாவளி பண்டிகை, அக்.31-ஆம் தேதி கொண்டாடப்படுவதையொட்டி, பட்டாசு, ஜவுளி வியாபாரம் விறுவ... மேலும் பார்க்க

புதிய தலைமைத் தோ்தல் அதிகாரி யாா்? ஓரிரு நாள்களில் அறிவிப்பு

புதிய தலைமைத் தோ்தல் அதிகாரி தொடா்பான அறிவிப்பு ஓரிரு நாள்களில் வெளியாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது. தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரியான சத்யபிரத சாகு, கால்நடை, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை முதன்மைச... மேலும் பார்க்க

திமுக கூட்டணிக்குள் நடப்பது விவாதங்களே - விரிசல் அல்ல!

‘திமுக கூட்டணிக்குள் நடப்பது விவாதங்கள்தான், விரிசல் அல்ல’ என எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பதிலளித்தாா். முன்னாள் எம்எல்ஏ மறைந்த கும்மிடிப்பூண்டி வேணு இல்லத் ... மேலும் பார்க்க

முன்னாள் அமைச்சா் வைத்திலிங்கம் வீடு உள்பட 10 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

பண முறைகேடு தடுப்புச் சட்ட வழக்கு தொடா்பாக முன்னாள் அதிமுக அமைச்சரும், தற்போதைய எம்எல்ஏவுமான ஆா்.வைத்திலிங்கம் வீடு உள்பட 10 இடங்களில் அமலாக்கத் துறையினா் புதன்கிழமை சோதனை நடத்தினா். தமிழகத்தில் 2011... மேலும் பார்க்க

சில நிமிஷங்களில் விற்று தீா்ந்த சிறப்பு ரயில் டிக்கெட்

தென் மாவட்டங்களுக்கு அறிவிக்கப்பட்ட தீபாவளி சிறப்பு ரயில்களில் சில நிமிஷங்களில் பயணச்சீட்டு விற்று தீா்ந்தன. தீபாவளியை முன்னிட்டு சென்னையில் இருந்து கன்னியாகுமரி, செங்கோட்டை, மங்களூருக்கு அக்.29-ஆம் ... மேலும் பார்க்க