`நீக்கப்பட்ட செங்கோட்டையன்' - எடப்பாடி வீட்டில் அதிமுக முக்கிய நிர்வாகிகள் ஆலோசன...
சகல துக்க நிவாரணியான சண்டி ஹோமம்: ஏன் செய்ய வேண்டும்?புராணமும் வரலாறும் கூறும் பரிகார விளக்கங்கள்!
சகல துக்க நிவாரணியான சண்டி ஹோமம்! ஏன் செய்ய வேண்டும்!புராணமும் வரலாறும் கூறும் பரிகார விளக்கங்கள்! தாருகாவனம் சித்தர் பீடத்தில் 2025 நவம்பர் 17-ம் நாள் சண்டி ஹோமம் நடைபெற உள்ளது.
முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 6680 2980/07
ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

அம்பிகையின் பெருமைகளை உரைக்கும் ஸ்ரீதேவி மாஹாத்மியத்தை வேத வியாஸரின் சீடரான ஜைமினி முனிவருக்கு மார்கண்டேயர் உபதேசித்ததார். அதில் சண்டி தேவியின் பல பெருமைகள் சொல்லப்பப்படுகின்றன. சண்டி தேவியின் அருளைப்பெற சிறந்த உபாயமாகக் கூறப்படுவது சண்டி பாராயணம் மற்றும் சண்டி ஹோமம்!
உறவுகளால் நாடிழந்த சைத்ரிய வம்சத்தைச் சேர்ந்த ஸுரதன் என்ற அரசனும், சொத்துக்கள் அனைத்தையும் இழந்த சமாதி என்ற வாணிபனும் காட்டில் சந்திக்கின்றனர். அங்கு ஸுமேதஸ் என்ற முனிவரின் வழிகாட்டலால் ஸ்ரீசண்டி ஹோமம் செய்து இழந்தவைகளை மீட்டனர் என்று கூறப்படுகிறது. இழந்த அதிகாரம், செல்வாக்கு, பணம், பொருள், புகழ் அனைத்தையும் மீட்டுத் தரும் அற்புத வழிபாடு சண்டி ஹோமம் என்றே கூறப்படுகிறது.
சாபம் பெற்ற காமதேனு மீண்டும் தனது வள்ளல் தன்மையைப் பெற சண்டி ஹோமம் செய்து அம்பிகையின் அருளாலேயே மகிமை பெற்றது என்று புராணங்கள் கூறுகின்றன. 'சரணடைந்தவர்களை காப்பவளே, அனைத்துக்கும் ஆதாரமாய் இருப்பவளே, சொர்க்க மோட்சங்களை அளிப்பவளே, பஞ்ச க்ருதியும் புரிபவளே, மகேஸ்வரி, வைஷ்ணவி, வாராஹி, நரஸிம்ஹி, ஷாமளை, சிவதூதி, கௌமாரி, சாமுண்டி, பிராம்மணி ஆகிய 9 ரூபங்களுடன் தீமைகளிடம் போரிட்டு காப்பவளே, எப்போதும் எங்களைக் காப்பவளே, உனக்கு வணக்கம் என்று சொல்லி சண்டி ஹோமத்தில் சங்கல்பித்துக் கொள்பவர்களின் வாழ்க்கையில் தீமைகளே வருவதில்லை. சகல சௌபாக்கியங்களும் நிறைந்து அவர்களின் வாழ்வு சிறக்கும். மேலும் அவர்களின் வாக்கில் சண்டி தேவி இருப்பதால் அவர்கள் வாழ்த்தினால் அந்த வாழ்த்து பலிக்கும் என்றும் புனித நூல்கள் உரைக்கின்றன.
சண்டியை வாழ்த்தி செய்யப்படும் சண்டி ஹோமத்தால் தேவி மகிழ்ந்து 'எல்லாவித துன்பங்களையும் போக்குவாள், பரம புருஷார்த்தங்களையும் அளிப்வாள். அறிந்தோ அறியாமலோ செய்யப்படும் சங்கல்ப பூஜையால் மகிழ்வாள். தன்னை ஆராதிக்கும் இடத்தில் நடமாடுவாள். அதனால் உண்டாகும் மகிழ்ச்சியை, ப்ரீத்தியை தேவி சந்தோஷித்து வேண்டியவற்றை அளிப்பாள். சண்டியை நினைத்த மாத்திரத்தில் எல்லா விதத்திலும் எல்லா வித ஆபத்திலிருந்தும் காப்பாள்' என்பது அவளே சப்த ரிஷிகளுக்கும் அளித்த வாக்காகும்.
முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 6680 2980/07
ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.
சகல ஜீவர்களுக்கும் தேவர்களுக்கும் முப்பெரும் தேவர்களுக்கும் துணையான சண்டி தேவியை சண்டி ஹோமத்தால் ஆராதித்தால் உங்கள் கவலைகள் யாவும் மாறி சந்தோசம் நிலைக்கும் என்பது நம்பிக்கை. பெருகி வரும் போர் சூழல்களால் வியாபாரம்-தொழில் போன்றவை நலிவான நிலையை அடைந்து வருகின்றன. அந்த பிரச்னைகள் தீர சண்டி ஹோமமே சிறப்பான தீர்வு என ஆன்றோர்கள் கூறுகின்றனர். அதனால் அமைதிக்கும் வளத்துக்கும் பெயர் பெற்ற இந்த சண்டி ஹோமம், மயிலாடுதுறை அருகே பெருஞ்சேரி கிராமத்தில் உள்ள தாருகாவனம் சித்தர் பீடத்தில் கார்த்திகை மாத முதல் சோமவார நன்னாளில் 2025 நவம்பர் 17-ம் நாள் காலை 9 மணிக்கு மேல் ஸ்ரீமகா சண்டி சாந்தி ஹோமம் நடைபெற உள்ளது.
வேத காலத்தில் 48000 ரிஷிகளும் நவகோடி சித்தர்களும் கூடி தவமிருந்த புண்ணிய பூமி இந்த தாருகாவனம் சித்தர் பீடம் என்கிறார்கள். தேவ பிரச்னப்படியும் இது நித்ய யக்ஞம் நடைபெற்ற பூமி என்கிறார்கள். காலத்தின் ஓட்டத்தால் இப்பகுதியின் பெருமையும் அடையாளங்களும் சிதைந்துபோக, தற்போது குருஜி. ப.கருணாகரன் சுவாமிகளுக்கு 18 சித்தர்களின் உத்தரவால் இங்கு பிரமாண்டமான சித்தர் பீட சிவலிங்க வடிவ ஆலயமாக எழும்பியுள்ளது. பிரமாண்ட சிவலிங்க வடிவிலேயே அமைந்துள்ள கோயில் இது. இங்கு அமைந்துள்ள ஸ்ரீஅகஸ்திய மகாசிவ நாடி ஜோதிட மையம் மிகப் பிரபலமானது. இங்கு துல்லியமாகக் கணிக்கப்பட்ட ஜோதிடத்தால் பலரது பிரச்னைகள் தீர்ந்துள்ளது. இங்குள்ள கோசாலை புனிதம் மிக்கது. இங்கு வெகு அபூர்வமான கோமாதாக்கள் சிறப்பாகப் பராமரிக்கப்படுகின்றன.

இங்கு உலக அமைதிக்காகவும் நன்மைக்காகவும் நித்ய பூஜைகள் நடைபெறுகின்றன. இங்கு நடைபெறும் பூஜைகளும் ஹோமங்களும் சிறப்பான பரிகாரமாக விளங்குகின்றன.இங்கு வந்துவிட்டாலே கவலைகள், தோஷங்கள், ஜோதிடக் கோளாறுகள், பாவங்கள், சாபங்கள் யாவும் தீர்ந்து வாழ்வில் முன்னேற்றமும் மகிழ்ச்சியும் பெருகும் என்பது ரிஷிகளின் வாக்கு. எனவே இங்கு சண்டி ஹோமம் நடைபெறுவது விஷேசமானது. கவலைகள், நோய்கள், கடன்கள், தோல்வி என துன்பப்படுபவர்கள் நிச்சயம் இந்த மகா சண்டி சாந்தி ஹோமத்தில் கலந்து கொண்டால் நிச்சயம் தீர்வு கிடைக்கும். இந்த ஹோமத்தால் மந்திர உருவேற்றப்பட்ட விசேஷ ரட்சை உங்களைத் துன்பங்களில் இருந்து பாதுகாக்கும். 48 நாள்களில் உங்கள் பிரச்னைகளும் தீரும் என்பது உறுதி.
முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 6680 2980/07
ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

வாசகர்கள் கவனத்துக்கு:
இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோம சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு ஆகர்ஷண குங்குமம், விசேஷ ரட்சை, அட்சதை அனுப்பி வைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம். https://www.facebook.com/SakthiVikatan



















