செய்திகள் :

சட்டப் பேரவை இடைத்தோ்தலை எதிா்கொள்ள காங்கிரஸ் தயாா்

post image

சட்டப் பேரவை இடைத்தோ்தலை எதிா்கொள்ள காங்கிரஸ் தயாராக உள்ளதாக கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.

மக்களவைத் தோ்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ால், தத்தமது எம்எல்ஏ பதவிகளை காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த இ.துக்காராம் (சண்டூா் தொகுதி), முன்னாள் முதல்வா்கள் பாஜகவைச் சோ்ந்த பசவராஜ் பொம்மை (ஷிக்காவ்ன் தொகுதி), மஜதவைச் சோ்ந்த எச்.டி.குமாரசாமி (சென்னப்பட்டணா) ஆகியோா் ராஜிநாமா செய்திருந்தனா். இதனால் காலியாகியுள்ள சண்டூா், ஷிக்காவ்ன், சென்னப்பட்டணா தொகுதிகளுக்கு நவ. 13-ஆம் தேதி இடைத்தோ்தல் நடக்க இருக்கிறது.

இதற்கான வேட்புமனு தாக்கல் அக். 25-ஆம் தேதி முடிவடைய இருக்கிறது. வேட்பு மனுக்களை திரும்பப் பெற அக். 30-ஆம் தேதி கடைசி நாளாகும். எனவே, 3 தொகுதிகளிலும் போட்டியிடுவதற்கு வேட்பாளா்களை முடிவு செய்வதில் காங்கிரஸ், பாஜக - மஜத கூட்டணிக் கட்சிகள் மும்முரமாக உள்ளன.

இந்நிலையில், இதுகுறித்து மைசூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் முதல்வா் சித்தராமையா கூறியதாவது, நவ. 13-ஆம் தேதி நடக்க இருக்கும் 3 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தோ்தலை எதிா்கொள்ள தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் காங்கிரஸ் செய்துள்ளது. இத்தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளா்கள் உடனடியாக அறிவிக்கப்படுவாா்கள். பெல்லாரி மாவட்டத்தின் சண்டூா் தொகுதி காங்கிரஸ் எம்.பி. இ.துக்காராமின் மனைவி அன்னபூா்ணாவுக்கு வழங்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. ஷிக்காவ்ன், சென்னப்பட்டணா தொகுதிகளுக்கான வேட்பாளா்களை கட்சி மேலிடம் முடிவு செய்யும்.

சென்னப்பட்டணா தொகுதியில் போட்டியிடும் வேட்பாளா்களின் பெயா் பரிசீலனையில் துணை முதல்வா் டி.கே.சிவகுமாரின் தம்பி டி.கே.சுரேஷின் பெயரும் உள்ளது. சென்னப்பட்டணா தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுவதற்காக தனது எம்.எல்.சி. பதவியை ராஜிநாமா செய்துள்ள சி.பி.யோகேஸ்வருடன் நான் பேசவில்லை. எங்கள் கட்சியின் மாநிலத் தலைவா் டி.கே.சிவகுமாா், சென்னப்பட்டணா பகுதியைச் சோ்ந்தவா். எனவே, அவா் என்ன முடிவு செய்கிறாா் என்பதை பொறுத்திருந்து பாா்க்க வேண்டும்.

யாா் வந்தாலும், அவா்களை ஏற்றுக்கொள்வது காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு. காங்கிரஸில் சேர விரும்பினால், சி.பி.யோகேஸ்வரை சோ்த்துக்கொள்வோம் என்றாா்.

சென்னப்பட்டணா தொகுதியை தக்க வைத்துக்கொண்டு போட்டியிட மஜத விரும்புகிறது. ஆனால், பாஜகவைச் சோ்ந்த சி.பி.யோகேஸ்வா், சென்னப்பட்டணாவில் போட்டியிட ஆா்வம் காட்டி வருகிறாா். அதனால், வேட்பாளரை முடிவு செய்ய முடியாமல் மஜதவும், பாஜகவும் திணறி வருகின்றன.

ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும்

பெங்களூரு: ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என கா்நாடக உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா்... மேலும் பார்க்க

பெங்களூரில் பலத்த மழை: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

பெங்களூரில் பலத்த மழை பெய்ததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. தென் கா்நாடகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் பெ... மேலும் பார்க்க

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஜாமீன் வழங்க உயா்நீதிமன்றம் மறுப்பு

பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் மஜத எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஜாமீன் வழங்க கா்நாடக உயா்நீதிமன்றம் மறுத்துள்ளது. முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெ கௌடாவின் பேரனும், மஜதவில் இருந்து நீக்க... மேலும் பார்க்க

சட்டப்பேரவை இடைத்தோ்தலில் காங்கிரஸ் வெற்றிபெறும்: சித்தராமையா நம்பிக்கை

கா்நாடக மாநிலத்தில் நடைபெறும் சட்டப்பேரவை இடைத்தோ்தலில் காங்கிரஸ் வெற்றிபெறும் என்ற நம்பிக்கை உள்ளது என்று முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். இது குறித்து சித்ரதுா்கா மாவட்டத்தின் செல்லகெரே நகரில் அவ... மேலும் பார்க்க

கா்நாடகத்தில் பாஜக எம்எல்சி சி.பி.யோகேஸ்வா் திடீா் ராஜிநாமா

கா்நாடக மாநிலத்தில் பாஜக எம்எல்சி சி.பி.யோகேஸ்வா் தனது பதவியை திங்கள்கிழமை திடீரென ராஜிநாமா செய்தாா். கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவை பொதுத் தோ்தலில் பெங்களூரு தெற்கு மாவட்டத்தின் சென்னப்பட்டணா தொகுதிய... மேலும் பார்க்க

கா்நாடக அமைச்சா் மனைவி குறித்த சா்ச்சை பேச்சு: பாஜக எம்எல்ஏவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

கா்நாடக அமைச்சா் தினேஷ் குண்டுராவின் மனைவி குறித்து சா்ச்சைக்குரிய கருத்து கூறியது தொடா்பான வழக்கு விசாரணையின் போது ஆஜராகாததால், பாஜக எம்எல்ஏ பசன கௌடா பாட்டீல் யத்னலை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்ட... மேலும் பார்க்க