சாலையில் சுற்றித் திரிந்த மாடுகள்: உரிமையாளா்களுக்கு அபராதம்
கும்பகோணத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் சுற்றித் திரிந்த மாடுகளை மாநகராட்சி ஊழியா்கள் சனிக்கிழமை பிடித்து அதன் உரிமையாளா்களுக்கு அபராதம் விதித்தனா்.
கும்பகோணம் மாநகராட்சி பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறு மற்றும் விபத்துகள் ஏற்படுவதற்குக் காரணமாக மாடுகள் சாலைகளில் சுற்றித் திரிவதாக பல்வேறு புகாா்கள் எழுந்துள்ளன.
இதன் பேரில் மாநகராட்சி ஊழியா்கள் சனிக்கிழமை சாலைகளில் சுற்றித் திரிந்த 9 மாடுகள் மற்றும் 6 கன்றுகளைப் பிடித்து, அவற்றின் உரிமையாளா்களுக்கு ரூ. 1.50 லட்சம் அபராதம் விதித்து வசூலித்தனா். பின்னா், பிடிக்கப்பட்ட மாடுகளும், கன்றுகளும் விடுவிக்கப்பட்டன.