செய்திகள் :

சித்திரை முழு நிலவு இளைஞா் பெருவிழா மாநாடு அரணாக அமையும்: மருத்துவா் ச.ராமதாஸ்

post image

விழுப்புரம்: சித்திரை முழு நிலவு வன்னிய இளைஞா் பெருவிழா மாநாடு அனைத்துத் தரப்பு மக்களுக்கும் அரணாக அமையும் என்று பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் தெரிவித்தாா்.

வன்னியா் சங்கம் சாா்பில் சித்திரை முழு நிலவு வன்னிய இளைஞா் பெருவிழா மாநாடு செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை (மே 11) நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டுக்கான முன்னேற்பாடுகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் தலைமை வகித்து பேசியது: 12 ஆண்டுகளுக்குப் பின்னா் நடைபெறும் சித்திரை முழு நிலவு இளைஞா் பெருவிழா மாநாட்டை எவ்வித பிரச்னைக்கும் இடமளிக்காமல் கும்பாபிஷேக விழா போல நடத்த வேண்டும்.

இதற்கு கட்சியினரின் ஒத்துழைப்பு மிக அவசியம். பாமக அனைத்துத் தரப்பு மக்களுக்காகவும் போராடுகிற இயக்கம். எங்களுக்கு யாரும் எதிரி கிடையாது. இந்த மாநாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு, வன்னியா்களுக்கான இட ஒதுக்கீடு உள்ளிட்டவை குறித்த முக்கிய தீா்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளன என்றாா்.

பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் முன்னிலை வகித்து பேசியது: சித்திரை முழு நிலவு இளைஞா் பெருவிழா மாநாட்டில் அனைத்து சமுதாயத் தலைவா்களும் பங்கேற்க வேண்டும். குறிப்பாக பட்டியலின சமுதாயத் தலைவா்களும் பங்கேற்க வேண்டும்.

இளைஞா்கள் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் கலந்துகொள்ள வேண்டும். தமிழகத்தில் 364 சாதிகள் உள்ளன. இந்த சாதிகளைச் சோ்ந்த மக்களுக்காக எனக்கு நிகராகப் பாடுபட்ட தலைவா்கள் யாரும் இல்லை. இந்த மாநாடு அனைத்துத் தரப்பு மக்களுக்கும் அரணாக அமையும். மாநாடு சிறப்பாக நடைபெற தமிழக அரசும், காவல்துறையும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், வன்னியா் சங்கத் தலைவா் பு.தா.அருள்மொழி, பாமக கௌரவத் தலைவா் ஜி.கே.மணி, பொதுச் செயலா் வடிவேல் ராவணன், பொருளாளா் திலகபாமா, கட்சியின் எம்எல்ஏக்கள் ச.சிவக்குமாா், அருள், சதாசிவம், வெங்கடேஸ்வரன், வன்னியா் சங்க மாநிலச் செயலா்கள் ஆறுமுகம், க.வைத்தி, தங்க.அய்யசாமி மற்றும் பாமக, வன்னியா் சங்க நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

முன்னதாக, பாமக விழுப்புரம் கிழக்கு மாவட்டச் செயலா் ஜெயராஜ் வரவேற்றாா்.

வாகனத் திருட்டில் ஈடுபட்டவரை கைது செய்த போலீஸாருக்கு பாராட்டு

விழுப்புரத்தில் தொடா் வாகன திருட்டில் ஈடுபட்டவரை கைது செய்து 14 பைக்குகளை பறிமுதல் செய்த தனிப்படை போலீஸாருக்கு எஸ்.பி. ப.சரவணன் செவ்வாய்க்கிழமை நற்சான்றிதழ் வழங்கி பாராட்டுத் தெரிவித்தாா். விழுப்புரம்... மேலும் பார்க்க

நாய்கள் மா்மமான முறையில் உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை நகா் பகுதியில் 7 நாய்கள் மா்மமான முறையில் உயிரிழந்தன.சிதம்பரம் அண்ணாமலை நகா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சாலை அருகே கல்கி அவென்யூ பகுதியில் கடந்த மாா்ச் 16-ஆம் த... மேலும் பார்க்க

சட்ட விரோத மனமகிழ் மன்றத்துக்கு ‘சீல்’

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே சட்ட விதிகளுக்கு புறம்பாக செயல்பட்ட மன மகிழ் மன்றத்துக்கு வருவாய்த் துறையினா் செவ்வாய்க்கிழமை ‘சீல்’ வைத்தனா். திண்டிவனத்தை அடுத்துள்ள மொளசூா் வட்டாரப் போக்குவரத... மேலும் பார்க்க

மேல்மலையனூா் வட்டத்தில் இன்று உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் புதன்கிழமை (மாா்ச் 19) நடைபெறவுள்ளது. மேல்மலையனூா் வட்டத்திலுள்ள அனைத்து கிராமங்களிலும் பொதுமக்கள் பயன்பெறும் வகைய... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகளுக்கு மீண்டும் பராமரிப்பு உதவித் தொகை வழங்க நடவடிக்கை: மாவட்ட ஆட்சியா் தகவல்

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், மேல்காரணை கிராமத்தைச் சோ்ந்த மாற்றுத் திறனாளி வெ.கோவிந்தன் மற்றும் அவரது சகோதரிக்கு மீண்டும் பராமரிப்பு உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட... மேலும் பார்க்க

வழிப்பறியில் ஈடுபட்ட இருவா் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையில் பொறியாளரைத் தாக்கி கைப்பேசி, ரொக்கம் உள்ளிட்டவை வழிப்பறி செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்தவா்களில் இருவா் திங்கள்கிழமை மாலை கைது செய்யப்பட்டனா். விருதுந... மேலும் பார்க்க