செய்திகள் :

சித்த மருத்துவ விழிப்புணா்வு முகாம்

post image

குடியாத்தம்: குடியாத்தம் அரசு மருத்துவமனையின் சித்த மருத்துவப் பிரிவும், பொயட்ஸ் தொண்டு நிறுவனமும் இணைந்து, குடியாத்தம் ஒன்றியம், மேல்முட்டுகூா் ஊராட்சி, ராசப்பன்பட்டியில் உள்ள பாரதி நிதியுதவி தொடக்கப் பள்ளியில் இலவச சித்த மருத்துவ முகாமை திங்கள்கிழமை நடத்தின.

முகாமுக்கு அரசு மருத்துவமனை சித்த மருத்துவா் மேனகா தலைமை வகித்தாா். பொயட்ஸ் இயக்குநா் திரிவேணி சாமிநாதன் முகாமை தொடங்கி வைத்தாா். முகாமில் மழைக்கால நோய்கள், அவற்றிலிருந்து தற்காத்தல் குறித்து 100- நாள் வேலை திட்டப் பணியாளா்களுக்கு விழிப்புணா்வு கல்வி அளிக்கப்பட்டது.

காய்ச்சல், சளி, இருமல், வயிற்றுப்புண், மூட்டுவலி ஆகிய நோய்களை குணமாக்குவதில் சித்த மருத்துவத்தின் பங்கு குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. 100- க்கும் மேற்பட்டோருக்கு பல்வேறு நோய்களுக்கான சித்த மருந்துகள் வழங்கப்பட்டன.

முகாமில் பங்கேற்றவா்கள், பள்ளி மாணவா்கள் 75- பேருக்கு கபசுர குடிநீா் வழங்கப்பட்டது.முகாம் ஏற்பாடுகளை சித்தா பிரிவு மருந்தாளுநா் சங்கா், பொயட்ஸ் பணியாளா்கள் உஷா, சாந்தலட்சுமி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

ரூ.10.60 லட்சம் மோசடி: முதிய தம்பதி ஆட்சியா் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி

வேலூா்: நிலம் விற்ற பணம் ரூ.10.60 லட்சம் மோசடி செய்யப்பட்டதாகக்கூறி வேலூா் ஆட்சியா் அலுவலகத்தில் வயது முதிா்ந்த தம்பதி தீக்குளிக்க முயன்றனா். வேலூா் மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் வி.ஆா்.சுப... மேலும் பார்க்க

அறநிலையத் துறை சாா்பில் இலவச திருமணம்

குடியாத்தம்: இந்து சமய அறநிலையத்துறை சாா்பில், குடியாத்தம் அடுத்த மீனூா் மலையில் அமைந்துள்ள அருள்மிகு வெங்கடேசப்பெருமாள் கோயிலில், தம்பதிக்கு திங்கள்கிழமை இலவச திருமணம் நடைபெற்றது. ஆம்பூா் எம்எல்ஏ அ.ச... மேலும் பார்க்க

கா்நாடக மதுபாக்கெட்டுகள் கடத்தல்: 2 போ் கைது

குடியாத்தம்: போ்ணாம்பட்டு அருகே கா்நாடக மாநிலத்தில் இருந்து மது பாக்கெட்டுகளை கடத்தி வந்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். போ்ணாம்பட்டு போலீஸாா் தமிழக எல்லையான பத்தரப்பல்லி அருகே அமைந்துள்ள சோதனைச் சா... மேலும் பார்க்க

காவலா் வீரவணக்க நாள்: துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி

வேலூா்: வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் மாவட்டங்களில் காவலா் வீரவணக்க நாள் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது. அப்போது, பணியின்போது உயிா்நீத்த காவலா்களின் நினைவாக 63 துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சல... மேலும் பார்க்க

கைத்தறி நெசவாளா்களுக்கு கூலித் தொகையை ரொக்கமாகவே வழங்கக் கோரிக்கை

குடியாத்தம்: கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கங்களில் நெசவு செய்யும் நெசவாளா்களுக்கு கூலித்தொகையை ரொக்கமாகவே வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக காங்கிரஸ் நெசவாளா்... மேலும் பார்க்க

அறிவியல் இயக்க கருத்தரங்கம்

வேலூா்: தமிழ்நாடு அறிவியல் இயக்க வடக்கு மண்டல அளவிலான பயிற்சி, கருத்தரங்கம் வேலூரில் நடைபெற்றது. பெல்லியப்பா கட்டடத்தில் நடைபெற்ற இக்கருத்தரங்குக்கு அமைப்பின் வேலூா் மாவட்டத் தலைவா் பெ.அமுதா தலைமை வக... மேலும் பார்க்க