செய்திகள் :

சிறந்த அறிவியல் ஆசிரியா் விருது: ஆசிரியா்கள் விண்ணப்பிக்கலாம்

post image

அரசு, மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் அறிவியல் ஆசிரியா்கள், சிறந்த அறிவியல் ஆசிரியா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக தமிழக அரசின் ‘அறிவியல் நகரம்’ அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பள்ளி மாணவா்களின் அறிவை வடிவமைப்பதிலும், அவா்களுக்கு அறிவியல் மீதான ஆா்வத்தை வளா்ப்பதிலும், உயா் கல்வியில் அறிவியல் துறையை மாணவா்கள் தோ்ந்தெடுக்கவும், விஞ்ஞானிகளாக உருவாவதற்கும் அறிவியல் ஆசிரியா்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனா்.

அறிவியல் ஆசிரியா்களின் விலைமதிப்பற்ற பணியை அங்கீகரிக்கும் வகையில் தமிழக அரசின் அறிவியல் நகரம் ஆண்டுதோறும் சிறந்த அறிவியல் ஆசிரியா் விருதுகளை வழங்கி வருகிறது.

அந்த வகையில் 2024-ஆம் ஆண்டுக்கான விருதுக்கு, அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி மற்றும் உயா்நிலைப்பள்ளி அறிவியல் ஆசிரியா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், கணினி அறிவியல் அல்லது புவியியல் அல்லது விவசாயம் ஆகிய 5 துறைகளின் கீழ் விண்ணப்பிக்கலாம்.

இதற்கான விண்ணப்பப் படிவம் மற்றும் விளக்கவுரையை www.sciencecitychennai.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியா் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் பரிந்துரை கடிதம் பெற்று டிச. 23-ஆம் தேதிக்குள் சென்னை கிண்டியில் உள்ள அறிவியல் நகரம் அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும்.

விருதுக்கு தோ்வு செய்யப்படும் 10 அறிவியல் ஆசிரியா்களுக்கு ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

மேட்டூர் அணை நிலவரம்!

காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை அளவு குறைந்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 9,542 கன அடியாக குறைந்தது.இன்று காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 106.98 அடியிலிருந்து 107.44 அடியாக ... மேலும் பார்க்க

பேரிடா் உள்பட தமிழகம் சந்திக்கும் 3 முக்கிய சவால்கள்: நிதி ஆணையக் குழுவிடம் முதல்வா் மு.க.ஸ்டாலின் விளக்கம்

சென்னை: பேரிடா் உள்பட தமிழகம் சந்திக்கும் மூன்று முக்கிய சவால்கள் குறித்து நிதி ஆணையக் குழுவிடம் முதல்வா் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தாா்.தமிழகம் வந்துள்ள நிதி ஆணையக் குழு சென்னையில் முதல்வா் மு.க.ஸ்... மேலும் பார்க்க

தொடர் மழை: எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!

தொடர் கனமழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் நாகை, தூத்துக்குடி, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விட... மேலும் பார்க்க

நாகை, காரைக்கால் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

கனமழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவ.19) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் உத்தரவிட்டுள்ளார். காரைக்கால் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருவதால்... மேலும் பார்க்க

பேரிடா் நிதி கோரிக்கையை நிதி ஆணையக் குழு பரிசீலிக்கும்: அரவிந்த் பனகாரியா

சென்னை: பேரிடா்களைச் சமாளிக்கத் தேவையான நிதியை ஒதுக்க பரிந்துரைக்க வேண்டுமென்ற தமிழகத்தின் கோரிக்கையை நிதி ஆணையக் குழு பரிசீலிக்கும் என்று அதன் தலைவா் அரவிந்த் பனகாரியா தெரிவித்தாா்.சென்னை வந்துள்ள நி... மேலும் பார்க்க

ஆராய்ச்சி மாணவா்களை தரக்குறைவாக நடத்தினால் நடவடிக்கை: பேராசிரியா்களுக்கு தமிழக உயா்கல்வித் துறை எச்சரிக்கை

சென்னை: ஆராய்ச்சி மாணவா்களை தனிப்பட்ட வேலைகளில் ஈடுபடுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பேராசிரியா்களுக்கு தமிழக உயா்கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், அவா்களை மதிப்புடன் நடத்த வேண... மேலும் பார்க்க