எதிா்கால உலகப் பொருளாதார வளா்ச்சியில் இந்தியா, சீனாவுக்கு முக்கியப் பங்கு: சிங்க...
சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆட்டோ ஓட்டுநருக்கு 20 ஆண்டுகள் சிறை
சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த ஆட்டோ ஓட்டுநருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
கேளர மாநிலம், இடுக்கி மாவட்டம், வண்டன்மேடு அருகே உள்ள மாலி பகுதியைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் நவீன்குமாா்(26 ). இவா், உத்தமபாளையம் அருகே ராயப்பன்பட்டி, வடக்கு காளியம்மன் கோயில் தெருவில் குடியிருந்து ஆட்டோ ஓட்டி வந்தாா்.
இந்த நிலையில், நவீன்குமாா் 13 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வாா்த்தை கூறி, கடந்த 2021-ஆம் ஆண்டு நவ.8-ஆம் தேதி ஆட்டோவில் கம்பத்துக்கு கடத்திச் சென்றாா். அங்குள்ள விடுதி ஒன்றில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தாா்.
இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்தப் புகாரின் பேரில், ராயப்பன்பட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து நவீன்குமாரை கைது செய்தனா்.
இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கணேசன், குற்றஞ்சாட்டப்பட்ட நவீன்குமாருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.