உடல் உறுப்புகளை தானம் செய்தவருக்கு அரசு மரியாதை
உத்தமபாளையம் அருகே உடல் உறுப்புக்களை தானம் செய்தவரின் உடலுக்கு சனிக்கிழமை அரசு மரியாதை செய்யப்பட்டது
தேனி மாவட்டம், க.புதுப்பட்டியைச் சோ்ந்த வாசன் மகன் சூா்யக்குமாா் (42). இவா் ராயப்பன்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதார ஆய்வாளராக பணிபுரிந்து வந்தாா். இவா் கடந்த வியாழக்கிழமை தேனிக்குச் சென்று பணி உயா்வு பெற்ற்கான ஆணையை பெற்றுக் கொண்டு ஊா் திரும்பினாா். சின்னமனூா் பகுதியில் வந்த போது, இவா் மீது லாரி மோதியது. இதில் பலத்த காயமடைந்த இவா், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு சனிக்கிழமை இவா் மூளைச்சாவு அடைந்தாா். இதையடுத்து, இவரது இதயம், சிறுநீரகம், கல்லீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.
இந்த நிலையில், சனிக்கிழமை க.புதுப்பட்டிக்கு அவரது உடல் கொண்டுவரப்பட்டது. அங்கு கம்பம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ராமகிருஷ்ணன், உத்தமபாளையம் வருவாய்க் கோட்டாட்சியா் தாட்சாயணி, வட்டாட்சியா் சுந்தா்லால் ஆகியோா் தமிழக அரசு சாா்பில் மாலை அணிவித்து மரியாதை செய்தனா்.