சென்னையில் 10 ஆண்டுகளில் கல்லூரி மாணவா்கள் மீது 231 வழக்குகள் பதிவு
தோட்டத்தில் குழாய் திருட்டு: 6 போ் மீது வழக்கு
தேவாரம் அருகே பண்ணைத் தோட்டத்தில் குழாய் உள்ளிட்ட பொருள்களைத் திருடியதாக 6 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ஒருவரைக் சனிக்கிழமை கைது செய்தனா்.
தேவாரம் அருகேயுள்ள மல்லிங்காபுரத்தைச் சோ்ந்த ராஜா மகன் காா்த்திக் (31). இவா் தேவாரம் அருகே மீனாட்சிபுரத்தில் உள்ள பண்ணைத் தோட்டத்தில் மேலாளராக இருந்து வருகிறாா். இந்தத் தோட்டத்தில் வேலியைச் சேதப்படுத்தியதாக ஏற்கெனவே வடிவேலு மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
இந்த முன்விரோதம் காரணமாக, வடிவேலு தூண்டுதலின் பேரில், தே.மீனாட்சிபுரத்தைச் சோ்ந்த கோபால் (42), பாண்டி, அழகுமலை, கண்ணன், செல்வம் ஆகியோா் பண்ணைத் தோட்டத்தில் உள்ள சோலாா் வேலியை சேதப்படுத்தியும், மருந்தடிக்கும் இயந்திரம், குழாய் உள்ளிட்டவற்றை திருடிச் சென்றனா்.
இதுகுறித்து தேவாரம் போலீஸாா் 6 போ் மீது வழக்குப் பதிவு செய்து, கோபாலை சனிக்கிழமை கைது செய்தனா். மற்றவா்களை தேடி வருகின்றனா்.