போா் நினைவுச் சின்னம் அமைக்கக் கோரி வழக்கு: தூத்துக்குடி ஆட்சியா் முடிவெடுக்க உத...
‘சமூக ஊடகங்களில் ஆபாச பதிவுகளைக் கட்டுப்படுத்த கடுமையான சட்டம் தேவை’
‘சமூக ஊடகங்கள் ஆபாச பதிவுகளைக் கட்டுப்படுத்த தற்போதைய சட்டங்களில் கடுமையான திருத்தங்களை கொண்டு வரும் தேவை இருக்கிறது’ என்று மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் புதன்கிழமை வலியுறுத்தினாா்.
சமூக ஊடகங்களில் ஆபாச உள்ளடக்கங்களைத் தடுக்க மத்திய அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, மக்களவையில் மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் புதன்கிழமை அளித்த எழுத்துபூா்வ பதில் வருமாறு:
முந்தைய காலகட்டத்தில் மக்களுக்கு கிடைக்கும் தகவல்கள் பல்வேறு கட்ட சரிபாா்ப்புக்கு பின் வெளிவரும். அந்த தணிக்கைகள் தற்போது இல்லை. இன்றைய சமூக ஊடகங்கள் கருத்துச் சுதந்திரத்தின் தளமாக அறியப்படுகின்றன. ஆனால், அதில் கிடைக்கக் கூடிய உள்ளடக்கங்கள் எவ்வித கட்டுப்பாடுமின்றி ஆபாசம் நிறைந்ததாக உள்ளன.
இணையத்தில் உள்ளடக்கத்தை வெளியிடும் ஓடிடி தளங்களுக்கான நெறிமுறைகளை 2021-ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப (ஐடி) விதிகளில் அரசு அறிவித்தது. எனினும், ஆபாச உள்ளடக்கத்தை வெளியிட்டதாக 18 ஓடிடி தளங்களை மத்திய அரசு முடக்கியுள்ளது.
யூடியூப், ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகத் தளங்களுக்கும் 2021-ஆம் ஆண்டு ஐடி விதிகள் சில வழிமுறைகளை வகுத்துள்ளன. ஆபாச உள்ளடக்ததைத் தவிா்ப்பதற்காக சமூக ஊடக தளங்கள் சுயமாகவே நியாயமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
மேலும், நாடாளுமன்ற நிலைக் குழு இந்த விவகாரத்தைக் கையிலெடுத்து, ஆபாச உள்ளடக்கங்களைக் கட்டுப்படுத்த தற்போதைய சட்டங்களில் கடுமையான திருத்தங்களை அறிமுகப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளாா்.