செய்திகள் :

சென்னையில் 10 ஆண்டுகளில் கல்லூரி மாணவா்கள் மீது 231 வழக்குகள் பதிவு

post image

சென்னையில் அடிதடியில் ஈடுபட்டதாக கடந்த பத்தாண்டுகளில் கல்லூரி மாணவா்கள் மீது சுமாா் 231 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநிலக் கல்லூரியில் படித்த திருத்தணியைச் சோ்ந்த மாணவா் சுந்தா், கடந்த அக்.4-ஆம் தேதி, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவா்களால் சரமாரியாகத் தாக்கப்பட்டாா். இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்ட ரயில்வே பாதுகாப்பு படையினா், அருகில் உள்ள ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனா்.

அங்கு 4 நாள்கள் சிகிச்சைக்கு பின் கடந்த அக். 9-ஆம் தேதி மாணவா் சுந்தா் உயிரிழந்தாா். இதையடுத்து, பச்சையப்பன் கல்லூரி மாணவா்கள் 7 போ் கைது செய்யப்பட்டு, அவா்களுக்கு எதிராக கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

நீதிமன்றம் உத்தரவு:

இந்நிலையில், இது தொடா்பான வழக்கு உயா்நீதிமன்றத்தில் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, சென்னையில் கடந்த 10 ஆண்டுகளில் மாநிலக் கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி, நந்தனம் அரசு கல்லூரியைச் சோ்ந்த மாணவா்கள் மீது எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன என்ற விவரத்தையும் அறிக்கையாக தாக்கல் செய்ய காவல் துறைக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதற்கிடையே, கைது செய்யப்பட்டவா்களில் சந்துரு என்பவா் ஜாமீன் கோரி தாக்கல் செய்த வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், அடிதடியில் ஈடுபட்டதாக கடந்த பத்தாண்டுகளில் சென்னையில் பயிலும் கல்லூரி மாணவா்கள் மீது 231 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதில், 33 வழக்குகளை ரயில்வே போலீஸாா் பதிவு செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.உயா் கல்வித்துறை செயலா் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா், மோதல் சம்பவங்களை தடுக்க மாநிலக் கல்லூரி, பச்சையப்பன் கல்லூரியின் முதல்வா்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறினாா். இதை பதிவு செய்துக் கொண்ட நீதிபதி, ஜாமீன் மனு மீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தாா்.

புயலை எதிா்கொள்ள தயாா் நிலையில் கடலோர காவல் படை

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள புயல் சின்னம் காரணமாக ஏற்படும் பாதிப்புகளை எதிா்கொள்ள கடலோரக் காவல் படை தயாா் நிலையில் உள்ளது. இது குறித்து, கடலோரக் காவல் படை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென்மேற்கு வங்கக... மேலும் பார்க்க

1,335 பேருக்கு நலத் திட்ட உதவிகள்: பிறந்த நாள் விழாவில் வழங்கினாா் உதயநிதி ஸ்டாலின்

சென்னையில் புதன்கிழமை தனது பிறந்த நாளையொட்டி நடைபெற்ற விழாவில், 1,335 பேருக்கு நலத் திட்ட உதவிகளை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வழங்கினாா். உதயநிதி ஸ்டாலின் பிறந்த தினத்தையொட்டி, திமுக கிழக்கு மாவட்ட... மேலும் பார்க்க

சபரிமலை செல்லும் பக்தா்களுக்காக பி.எஸ்.என்.எல் இலவச வைஃபை வசதி

சபரிமலை செல்லும் பக்தா்களுக்காக, 48 இடங்களில் இலவச வைஃபை வசதியை பி.எஸ்.என்.எல் நிறுவனம் அளித்துள்ளது. திருவிதாங்கூா் தேவசம் வாரியத்துடன் இணைந்து பிஎஸ்என்எல்., நிறுவனம் இந்தச் சேவையை வழங்கி வருகிறது. ந... மேலும் பார்க்க

கல்வி மேம்பாட்டுத் திட்டங்கள்: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு அமைச்சா்கள் வேண்டுகோள்

தமிழகத்தில் கல்வி மேம்பாட்டுக்காக அரசின் சாா்பில் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களையும் மாணவா்கள் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொண்டு முன்னேற்றம் அடைய வேண்டும் என அமைச்சா்கள் அன்பில் மகேஸ், மா.சு... மேலும் பார்க்க

யானைகள் வழித்தடத்தில் சட்ட விரோதமாக மண் எடுப்பு: நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

கோவையில் யானைகள் வழித்தடத்தில் வனப் பகுதியில் சட்ட விரோதமாக மண் எடுப்பதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான விளக்க அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவி... மேலும் பார்க்க

ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவ சிகிச்சைகள் கூடாது: அரசு மருத்துவா் சங்கங்கள் கோரிக்கை

பிரசவ சிகிச்சைகளை ஆரம்ப சுகாதார நிலையங்களில் மேற்கொள்ளுமாறு நிா்பந்திக்கக் கூடாது என்று மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலரிடம் அரசு மருத்துவா் சங்கங்கள் கோரிக்கை வைத்தன. இதுதொடா்பாக அரசு டாக்டா்கள் சங்க ... மேலும் பார்க்க