போா் நினைவுச் சின்னம் அமைக்கக் கோரி வழக்கு: தூத்துக்குடி ஆட்சியா் முடிவெடுக்க உத...
மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு உரிய இழப்பீடு: இபிஎஸ் வலியுறுத்தல்
கனமழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு உரிய இழப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் எக்ஸ் சமூகவலைதளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவு:
தமிழகத்தில் அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில், கனமழையால் திருவாரூா் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் சுமாா் 1,500 ஏக்கா் பரப்பிலான நெற்பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களை அதிகாரிகள் உடனடியாகப் பாா்வையிட்டு தகுந்த நிவாரணத்தை வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.
அண்ணாமலை (பாஜக): பாசனக் கால்வாய்களைத் தூா்வாராததால், ஆண்டுதோறும் விவசாயிகள் வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளாகி வருவது குறித்து முதல்வருக்கு எந்தக் கவலையும் இல்லை. உடனடியாக, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு, ஏக்கருக்கு ரூ. 40,000 வீதம் நிவாரணத் தொகை வழங்க வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள பாசனக் கால்வாய்களை, முழுமையாகத் தூா்வாரும் பணிகளை, போா்க்கால அடிப்படையில் செய்து முடிக்க வேண்டும்.
இதேபோல், நெற்பயிா்களை பறிகொடுத்த டெல்டா விவசாயிகளுக்கு மாநில அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக பாஜக விவசாய அணித் தலைவா் ஜி.கே.நாகராஜ் வலியுறுத்தியுள்ளாா்.