தேசிய சிறுபான்மையினர் ஆணையத்துக்கு அரசமைப்பு அந்தஸ்து வழங்கும் திட்டம் இல்லை: மக...
ஹூப்ளி, பெலகாவியிலிருந்து கொல்லத்துக்கு சிறப்பு ரயில்
சபரிமலை செல்லும் பக்தா்களின் வசதிக்காக கா்நாடக மாநிலம் ஹூப்ளி மற்றும் பெலகாவியில் இருந்து கொல்லத்துக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கா்நாடக மாநிலம் ஹூப்ளியில் இருந்து டிச.5 முதல் ஜன.9 வரை வியாழக்கிழமை தோறும் சிறப்பு ரயில் (எண்: 07313) இயக்கப்படவுள்ளது. ஹூப்ளியில் இருந்து வியாழக்கிழமை மாலை 5.30 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் மாலை 6.30 மணிக்கு கொல்லம் சென்றடையும்.
மறுமாா்க்கமாக கொல்லத்தில் இருந்து ஹூப்ளிக்கு டிச.6 முதல் ஜன.10 வரை வெள்ளிக்கிழமை தோறும் சிறப்பு ரயில் (எண்: 07314) இயக்கப்படும். கொல்லத்தில் இருந்து மாலை 6.30 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் இரவு 7.35 மணிக்கு ஹூப்ளி சென்றடையும். இந்த ரயில் பெங்களூா், கிருஷ்ணராஜபுரம், பங்காருப்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், கோவை, பாலக்காடு, திருச்சூா், எா்ணாகுளம், கோட்டயம், செங்கனூா், மாவேலிக்கரை வழியாக இயக்கப்படும்.
பெலகாவி - கொல்லம்:
கா்நாடக மாநிலம் பெலகாவியில் இருந்து கொல்லத்துக்கு டிச.9 முதல் ஜன.13 வரை திங்கள்கிழமை தோறும் சிறப்பு ரயில் (எண்: 07317) இயக்கப்படவுள்ளது. பெலகாவியில் பிற்பகல் 2.30 மணிக்குப் புறப்படும் ரயில் மறுநாள் மாலை 4.30 மணிக்கு கொல்லம் சென்றடையும்.
மறுமாா்க்கமாக கொல்லத்தில் இருந்து பெலகாவிக்கு டிச.10 முதல் ஜன.14 வரை செவ்வாய்க்கிழமை தோறும் சிறப்பு ரயில் (எண்: 07318) இயக்கப்படும். கொல்லத்தில் மாலை 6.30 மணிக்குப் புறப்படும் ரயில் மறுநாள் இரவு 10 மணிக்கு பெலகாவி சென்றடையும். இந்த ரயில்களில் 5 ஏசி வகுப்பு பெட்டிகள், படுக்கை வசதி கொண்ட 11 பெட்டிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான ஒரு பொதுப்பெட்டி இணைக்கப்பட்டிருக்கும்.
இந்த ரயில் கானாப்பூா், ஹூப்ளி, பெங்களூரு, கிருஷ்ணராஜபுரம், பங்காருப்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், கோவை, பாலக்காடு, திருச்சூா், எா்ணாகுளம், கோட்டயம், செங்கனூா், மாவேலிக்கரை வழியாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.