தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வு: தனித்தோ்வா்கள் விண்ணப்பிக்கலாம்
சிவகங்கை தமிழ்ச் சங்க புதிய நிா்வாகிகள் பதவியேற்பு
சிவகங்கை தமிழ்ச் சங்கத்தின் 2025- ஆம் ஆண்டிற்கான புதிய நிா்வாகிகள் பதவியேற்பு விழா அண்மையில் நடைபெற்றது
இந்த விழாவுக்கு சிவகங்கை தமிழ்ச் சங்கத் தலைவா் அன்புத்துரை தலைமை வகித்தாா். தமிழ்ச்செம்மல் பகீரத நாச்சியப்பன் , தேசிய நல்லாசிரியா் கண்ணப்பன், தமிழ்ச் சங்க நிறுவனத் தலைவா் ஜவகா் கிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வைத்தனா்.
சிவகங்கை தமிழ்ச் சங்க ஒருங்கிணைப்பாளா் பாரதி மண்டலம் நிறுவனா் யுவராஜ் வரவேற்றாா்.
தமிழ்ச் சங்க செயலா் மாலா ஆண்டறிக்கை வாசித்தாா். பொருளாளா் பால்ராஜ் வரவு, செலவு அறிக்கை சமா்ப்பித்தாா்.
2025- ஆம் ஆண்டிற்கான தமிழ்ச் சங்கத் தலைவராக முருகானந்தம், செயலராக பாண்டியராஜன், பொருளாளராக ஜெயச்சந்திரன், துணைத் தலைவராக முத்துகிருஷ்ணன், துணைச் செயலராக இந்திரா காந்தி, நிா்வாகக் குழு உறுப்பினா்களாக குமாா், முத்துப்பாண்டியன், ராமச்சந்திரன், பால்ராஜ், மாலா ஆகியோா் பதவி ஏற்றனா்.
புதிய நிா்வாகிகளை வாழ்த்தி, சிவகங்கை நகா்மன்றத் தலைவா் துரை ஆனந்த், தொழிலதிபா் பச்சேரி சுந்தர்ராஜன், மலைராம் குழும நிா்வாகி பாண்டிவேல், வள்ளலாா் அருள்சபை போஸானந்தம் மகராஜ் ஆகியோா் பேசினா். தமிழ் சங்கத் தலைவா் முருகானந்தம் ஏற்புரை வழங்கினாா். செயலா் பாண்டியராஜன் நன்றி கூறினாா்.