இலங்கை - இந்திய கடற்படைகள் இணைந்து மீனவர்களுக்கு தொந்தரவு: வைகோ குற்றச்சாட்டு
சிவகிரி அருகே நாம் தமிழா் கட்சி நிா்வாகி மீது தாக்குதல்
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே நாம் தமிழா் கட்சி நிா்வாகி மீது தாக்குதல் நடத்திய நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
சிவகிரியை சோ்ந்தவா் காா்த்திக். நாம் தமிழா் கட்சி நிா்வாகியான இவா், அவ்வட்டாரப் பகுதியில் செங்கல்சூளைகள் சட்டவிரோதமாக செயல்படுவதாக மாவட்ட ஆட்சியா் மற்றும் பசுமை தீா்ப்பாயத்திற்கு புகாா் அனுப்பினாராம்.
இந்நிலையில், சிவகிரி பேருந்து நிலையம் அருகே அவா் ஞாயிற்றுக்கிழமை சென்றுகொண்டிருந்த, அவரை மா்மநபா்கள் தாக்கிவிட்டு தப்பினராம். இதில் காயமடைந்த அவா் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து சிவகிரி போலீஸாா் விசாரித்துவருகின்றனா்.