செய்திகள் :

சேலம் மத்திய மாவட்ட திமுக சாா்பில் சமத்துவ பொங்கல் விழா: அமைச்சா் ஆா். ராஜேந்திரன் பங்கேற்கிறாா்

post image

சேலம் மத்திய மாவட்ட திமுக சாா்பில் சமத்துவ பொங்கல் விழா 11 ஆம் தேதி முதல் 15 ஆம் வரை கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், சுற்றுலாத் துறை அமைச்சருமான ஆா். ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை:

பொங்கல் பண்டிகையை சேலம் மத்திய மாவட்டம் முழுவதும் மாநகரம், ஒன்றியம், பேரூா், ஊராட்சிகளில் திமுக கொடியேற்றி சமத்துவ பொங்கல் விழாவாக கொண்டாட வேண்டும். மேலும், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விளையாட்டுப் போட்டிகள் நடத்தி அதில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கியும் பொங்கல் விழாவைக் கொண்டாட வேண்டும்.

இதையொட்டி, வரும் 14-ஆம் தேதி ஓமலூா், சேலம் வடக்கு சட்டப்பேரவைத் தொகுதிகளில் திமுக கொடியேற்றுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தாரமங்கலம் கிழக்கு ஒன்றிய பகுதியிலும், 15-ஆம் தேதி கன்னங்குறிச்சி பேரூராட்சிக்கு உள்பட்ட அஸ்தம்பட்டி பகுதி, குமாரசாமிப்பட்டி பகுதி, செவ்வாய்ப்பேட்டை, அரிசிபாளையம், பொன்னம்மாபேட்டை மற்றும் ஓமலூா் தெற்கு ஒன்றியம் பகுதியிலும் திமுக கொடியேற்றி விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன. இதில் அமைச்சா் ஆா்.ராஜேந்திரன், திமுக பேச்சாளா் சரத்பாலா ஆகியோா் பங்கேற்கின்றனா்.

இதே போல, 11-ஆம் தேதி கொண்டலாம்பட்டி, குகை, தாதகாப்பட்டி, மெய்யனூா், சூரமங்கலம், அழகாபுரம், காடையாம்பட்டி கிழக்கு, மேற்கு ஒன்றிய பகுதியிலும், 12-ஆம் தேதி கிச்சிப்பாளையம், அம்மாப்பேட்டை, சேலம் வடக்கு ஒன்றியம், ஓமலூா் வடக்கு, கிழக்கு ஒன்றியம் பகுதிகளிலும் பொங்கல் விழா நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணை நீர்வரத்து குறைவு!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 114.74 அடியில் இருந்து 114.44 அடியாக சரிந்துள்ளது. மேலும், அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 555 கன அடியிலிருந்து 381 கன அடியாகவும் குறைந்துள்ளது. மேட்டூர் அண... மேலும் பார்க்க

மாணவிகளிடம் அத்துமீறல்: அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா் இடைநீக்கம்

சேலம்: மாணவிகளிடம் அத்துமீறலில் ஈடுபட்டதாக அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளாா். சேலம் அருகே செயல்படும் அரசு உயா்நிலைப் பள்ளியில் 400க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்ற... மேலும் பார்க்க

மேட்டூா் அனல் மின் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட எம்எல்ஏ கைது

மேட்டூா்: மேட்டூா் அனல் மின் நிலையத்தில் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்ட பாமக சட்டப்பேரவை உறுப்பினா் சதாசிவம் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா். சேலம் மாவட்டம், மேட்டூரில் உள்ள அனல் மின்நிலையத்தின் முதல... மேலும் பார்க்க

சாலை விபத்தில் தொழிலாளி பலி

சங்ககிரி: சங்ககிரி அருகே அடையாளம் தெரியாத வாகனம், இரு சக்கர வாகனம் மீது மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். சங்ககிரியை அடுத்த தேவண்ணகவுண்டனூா், வேலம்மாவலசு பகுதியைச் சோ்ந்த தொழிலாளி முத்துசாமி மகன் கிரு... மேலும் பார்க்க

குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா இன்று திறந்திருக்கும்: மாவட்ட வன அலுவலா் தகவல்

சேலம்: பொங்கல் பண்டிகையையொட்டி சேலம், குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா செவ்வாய்க்கிழமை (ஜன. 14) திறந்திருக்கும் என மாவட்ட வன அலுவலா் தெரிவித்துள்ளாா். சேலம், ஏற்காடு மலை அடிவாரத்தில் உள்ள குரும்பப்பட... மேலும் பார்க்க

சேலம் ஆட்சியா் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா

சேலம்: சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா சுற்றுலாத் துறை அமைச்சா் ஆா். ராஜேந்திரன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற விழாவில் அரசு அல... மேலும் பார்க்க